'அன்னமய்யா'(1997)
ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு வாழ்நாள் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அத்தகைய வாய்ப்பு எல்லோருக்கும் கிட்டுவதில்லை. தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனாவுக்குத் தெலுங்கு கவிஞர் தாளப்பாக்க அன்னமாச்சார்யா கதாபாத்திரம் ஏற்று நடிக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. விஷ்ணுவின் வாள் (நந்தகம்) தான் அன்னமாச்சார்யா அவதாரம்.
தெலுங்கும் சினிமாவின் முன்னோடி இயக்குநர் *கே ராகவேந்திரா ராவ் இயக்கிய "அன்னமய்யா", 1997-ஆம் ஆண்டுக் கோடை விடுமுறைக்கு வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. மக்கள் குடும்பத்தோடு திரையரங்கை நோக்கிப் படையெடுத்தார்கள். அன்னமாச்சார்யாவின் வாழ்க்கை சரிதத்தை மிக எளிதில் தனிக்கே உரித்தான திரைக்கதையில் உருவாக்கி மக்களிடம் சேர்த்தார் இயக்குநர். ஒவ்வொரு துணை பாத்திரங்களும் தங்கள் பங்கினை சிறப்பாக வழங்கினார்கள். படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் பட்டி-தொட்டியெங்கும் ஒலித்தது.
இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி அல்லது மரகதமணி பெரும்பாலும் அன்னமாச்சார்யா கீர்தனைகளையே பாடல்களாக உருவாக்கினார். இருபது பாடல்கள் அடங்கிய ஆடியோ காஸ்ட் அதிகளவில் விற்றுத்தீர்ந்து முதல் இடத்தைப் பிடித்தது. இப்படத்தில் பாடல்கள் இன்று வரை தெலுங்கு மக்கள் வீட்டில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஆறுமாத பணி பயிற்சிக்கு வேறு மாநிலத்திலிருந்தபோது, என்னுடன் அறையில் தங்கியிருந்த தெலுங்கு நண்பர் 'அன்னமய்யா' படத்தில் பாடல்களை எனக்கு அறிமுகப்படுத்தி, மேற்சொன்ன விஷயங்களையும் சொன்னார்.
ஒருமுறை குடும்பத்துடன் திருப்பதி திருமலை சுவாமி தரிசனம் செய்துவிட்டுக் கடைத்தெருவில் பொருட்கள் வாங்கும்போது 'அன்னமய்யா' படத்தின் பாடல்கள் அடங்கிய காஸ்ட் வாங்கத் தோன்றவே ,வாங்கினோம். அதன்பிறகு, தினமும் காலையில் 'அன்னமய்யா' கேட்டோம்.
பாடும் நிலா பாலு என்றழைக்கப்படும் எஸ்பிபி ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியிருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும். பல பக்தி பாடல்களும் அதில் சேரும். 'அன்னமய்யா' படத்தில் அவர் பாடிய பாடல்கள் ஆகச்சிறந்த 'பெஸ்ட்' என்பேன். இதோ கீழே உள்ள காணொளியில் 'அன்னமய்யா' படத்தில் இடம்பெற்ற பாடலை கேட்டு மகிழுங்கள் :
நன்றி:Youtube
- காளிகபாலி
*('பாகுபலி' படங்கள் தந்த இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலியின் குரு)
very interesting article message from kumar venkat
ReplyDelete