பகலில் ஒரு இரவு(1979)
மேலே சொன்ன படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் 80-களில் இசைக் கச்சேரிகளில் தவறாமல் இடம் பிடித்தது. கச்சேரி தொடங்கி நாலாவது அல்லது ஐந்தாவது பாடலாக இருக்கும்.
கச்சேரிகளில் பாடும் ஒவ்வொரு பாடகரின் கனவும் இந்தப் பாடலை பாடுவது. பாடகரும் தன்னை எஸ் பி பி போலப் பாவித்துக்கொண்டு பாடுவார். கிட்டத்தட்ட அசலுக்கு நெருக்கமாக ஈடுசெய்து பாடுவார் அதே போல இன்னொரு பாடல் " எங்கேயும் எப்போதும்.." பாட்டைப் பற்றி அறிவித்தவுடன், விசில் சத்தத்துக்குப் பிறகு மக்கள் அமைதியாகக் கேட்க ரசிப்பார்கள்.
மலையாள திரையுலகில் மாபெரும் இயக்குநர்களில் ஒருவர் காலஞ்சென்ற திரு ஐ வி சசி அவர்கள். தமிழிலும் சில படங்களை இயக்கியிருக்கிறார். 'தேவாசுரம்', 'இத இவிடே வறே', 'அவளூடே ராவுகள்', 'ஈட்ட', 'அங்காடி', 'ஈ நாடு', 'ஆரூடம்', 'ஆள்கூட்டத்தில் தனியே', 'கனமரயது', 'வார்த்தா', 'ஆவநாழி', '1921' மற்றும் 'ம்ருக்யா' போன்றவை அவருடைய சிறந்த பத்து படைப்புகளாக மலையாள ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
'ஆலிங்கனம்' என்ற தன் சொந்த மலையாள படத்தை இயக்குநர் ஐ வி சசி தமிழில் இயக்கி 1979-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-இல் வெளிவந்த 'பகலில் ஒரு இரவு' படத்தில் இடம்பெற்ற ராஜா சார் இசையைத்த மற்றொரு இளமையான
பாடல் "இளமையெனும் பூங்காற்று ...".
பாடல் "இளமையெனும் பூங்காற்று ...".
சில பாடல்களைக் கேட்க இனிமையாக இருக்கும் ஆனால் பார்க்க முடியாது காரணம் படமாக்கியிருக்கும் விதம் பார்க்கும்படி இருக்காது. ஒரு ரசிகர் இந்தப் பாடலை இப்படிக் குறிப்பிடுகிறார் "கேட்கக்கூடிய பாடல்... பார்க்க முடியாத ஊடல்...". ராஜா சாரின் Live Orchestra-வில் இந்த பாடலை கேட்டால் எப்படி இருக்கும் ?....வாங்க கேட்கலாம்.
நன்றி: Youtube
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
Arumai
ReplyDelete