தமிழ் சினிமாவின் Best Onscreen Couple யார் ?
கரெக்ட்! சரியாக சொன்னீர்கள்.
ரேவதி, கார்த்திக் - இது தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் ஜோடி! ஆனால் நான்கு படங்களுக்கு மேல் நடிக்கவில்லை, 'இதயத்தாமரை', 'கிழக்குவாசல்' மற்றும் 'தெய்வவாக்கு'. 'மௌனராகம்' படத்தில் சில மணித்துளிகளே வரும் கார்த்திக் அப்போதைய ஹாட் அட்டரக்ஷன். என் நண்பன் ஒருவன் கார்த்திக் ரசிகன், கார்த்திக் போல மேனரிஸங்களைச் செய்யக் கற்றுக்கொண்டு அலப்பறை செய்வான். நோட்டுப் புத்தகத்தில் நாளிதழில் கத்தரித்த கார்த்திக் படத்தை ஒட்டி வைத்திருப்பான். நான் வியப்பாகப் பார்ப்பேன். காரணம் நான் தலைவர் ரசிகன்.
'இதயத்தாமரை' படம் சுமாராக இருந்தாலும் பாடல்கள் பேசப்பட்டது. சென்னை வானொலி மற்றும் விவிதபாரதியில் "ஒரு காதல் தேவதை ..." பாட்டு ஒளிபரப்பாகாத நாளே இல்லை எனலாம். ரீல் அந்து போகும் வரை ஒளிபரப்பினார்கள்.
இதே ஜோடி நடித்த இன்னொரு படம் 'கிழக்குவாசல்'. இயக்குநர் ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் வந்த இப்படம் வெள்ளிவிழா கண்டது. "பச்சமலை பூவு...." என்ற இயக்குநர் எழுதிய அருமையான பாடல் உண்டு. ரேவதி சிறப்பாக நடித்திருப்பார். ரேவதியைச் சுற்றிக் கதை நடப்பதுபோலத் திரைக்கதை அமைத்திருப்பார் இயக்குநர். நானும் மேலே சொன்ன அதே 'கார்த்திக்' ரசிக நண்பனும் சேர்ந்து திரையரங்கில் பார்த்த படம். இந்தப் படத்திலும் எல்லாப் பாடல்களும் பிரபலம் மற்றும் படத்தின் ஆகபெரும்பலம் படத்தினூடே பயணிக்கும் ராஜா சாரின் பின்னணி இசை உயிரோட்டமாக அமைந்தது.
கடைசியாக இருவரும் நடித்த படம் 'தெய்வவாக்கு'. படம் சுமாராக ஓடினாலும் ராஜா சார், ஜானகி அம்மா அவர்கள் பாடிய "வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்" என்ற பாடல் எவர்க்ரீன் ஹிட். இன்றும் கேட்கக்கூடிய இனிமையான பாடல் இதோ உங்கள் செவிகளுக்கு :
நன்றி: Youtube
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
I like Karthik revathi very much
ReplyDelete