Wonderful Shopping@Amazon

Sunday, 16 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-85

இந்தியக் ஹாக்கி அணியின் வழிகாட்டி திரு தியானசந்த்.


மார்ச் 15, 1975-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஹாக்கி உலகக் கோப்பையை இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்த வரலாற்று வெற்றியில், அணியின் அணித்தலைவராக இருந்த அஜித் பால், அஸ்லம் ஷெர் கான் போன்ற வீரர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். இந்தியா எட்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று மிகப்பெரிய சாதனை படைத்தது. அதன்பிறகு ஏகப்பட்ட வெற்றியை இந்திய ஹாக்கி அணி குவித்தது.

மேலே சொன்ன சாதனைக்கு அடித்தளமிட்டவர் திரு தியான்சந்த். ஹாக்கி என்று வரும்போது, தியான்சந்தின் பங்களிப்பைத் தவிர்க்க முடியாது. இந்திய விளையாட்டு வரலாற்றில் மிகச் சிறந்த ஹாக்கி வீரர்களில் ஒருவர். ஃபீல்ட் ஹாக்கியில் இந்தியா ஆதிக்கம் செலுத்திய ஒரு சகாப்தத்தில், 1928, 1932 மற்றும் 1936-ஆம் ஆண்டுகளில் மூன்று ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களைப் பெற்றதோடு, அசாதாரணக் கோல் அடித்த சாதனைகளுக்காக அவர் அறியப்பட்டார். 1928 முதல் 1964 வரை எட்டு ஒலிம்பிக்கில் ஏழு போட்டிகளில் இந்தியா பீல்ட் ஹாக்கி போட்டியை வென்றது.

இந்திய ஹாக்கி அணியை 1936-ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு எதிரான பெர்லின் ஒலிம்பிக் வெற்றி உட்படப் பல முறை வெற்றிக்கு இட்டுச் சென்றது, இது ஹிட்லர் உட்பட 40,000 க்கும் மேற்பட்ட மக்களால் காணப்பட்டது. போட்டி முடிவில் ஹிட்லர் மிகவும் கோபமடைந்தார், அவர் விரக்தியிலும் கோபத்திலும் மைதானத்தை விட்டு வெளியேறினார். அடுத்த நாள், தியான்சந்தை சந்திக்க அழைத்ததோடு, ஜெர்மன் இராணுவத்தில் உயர் பதவியுடன் அவருக்கு ஜெர்மன் குடியுரிமையையும் வழங்கினார், இதைத் தியான்சந்த் பணிவுடன் மறுத்துவிட்டார் என ஒரு கதை சொல்லப்படுவதுண்டு.

  

நன்றி:Google & 'Thebetterindia.com'

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


தமிழில் : காளிகபாலி    

 

No comments:

Post a Comment