Wonderful Shopping@Amazon

Friday 14 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-83

'கொடி பறக்குது' (1988)

த்தனை முறை பார்த்தேனென்று தெரியவில்லை, ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் கதைமட்டும் புரியமாட்டேன்கிறது. ஒரு வேலை பல வருடங்களுக்குப் பிறகு தான் இந்தப் படம் புரியும் போல என்று நினைத்து இருக்கையில், நேற்று தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு முறை பார்த்தேன். ஹூம் .. குச் பி நஹி!

நான் எதிர்பார்க்காத கேள்வி என் மகனிடமிருந்து வந்தது "அப்பா ரஜினி டபுள் ஆக்ஷனா?" - கதை: கதையை விடுங்க சாமி ..அது புரிஞ்சா நான் சொல்லமாட்டேனா.... யாரவது விளக்கினால் நன்றாகயிருக்கும்!

பதினோரு வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் இமயம்-ரஜினிகாந்த் இணைந்த படம் 'கொடிபறக்குது'. பதினோரு வருடமென்பது அதிகப் பட்ச இடைவேளை தான். அதுவும் பதினாறு வயதினிலே' போன்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் இமயம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் இணையும் படம் கொஞ்சம் எதிர்பார்ப்பை எகிறத்தான் செய்தது. ஆவலுடன் சென்றவர்களுக்கு மேலே சொன்ன அனுபவம் தான் கிட்டியது.  ஆனாலும் 'ஸ்டைலிஷ்'  போலீஸ் கமிஷனர்  'ஈரோடு' சிவகிரி மற்றும் ரவுடி   'ஜெ டி பி' கதாபாத்திரமும் எனக்குப் பிடிக்கத்தான் செய்தது.

தனது சிஷ்யனை அறிமுகப்படுத்திய தருணம் குருவுக்குக் கிட்டியது. ஆம், இயக்குநர் மணிவண்ணன் வில்லனாக முதன்முதலாக நடிகராக இப்படத்தில் அறிமுகமானார். பின்னணி குரல் கொடுத்ததும் இயக்குநர் தான். கூர்மையான வசனம் ஒவ்வொன்றும்.

அமலா முதல்முறையாகச் சொந்த குரலில் தமிழில் கொஞ்சி கொஞ்சி பேசி நடித்தார்.

கன்னட இசையமைப்பாளர் ஹம்சலேகா இசையில் பாட்டெல்லாம் ஓரளவு பிரபலம் அடைந்தும், படம் என்னைப் போன்ற தலைவர் ரசிகர்களுக்குத் திருப்தி தரவில்லை. 'சேலை காட்டும் பெண்ணுக்கொரு" என்ற இனிமையான பாடல் சென்னை தொலைக்காட்சியில் 'ஒளியும் ஒலியும்' நிகழ்ச்சியில் ஒளிபரப்புவார்கள்.



 
நன்றி:Youtube
 
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி    

No comments:

Post a Comment