Wonderful Shopping@Amazon

Friday 14 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-82

பக்தியிசை பாடகி திருமதி பெங்களூர் ஏ ஆர்  ரமணி அம்மாள்

சென்னை வானொலி விவிதபாரதி வர்த்தக ஒளிபரப்பில் காலை பக்தி பாடல்கள் வரிசையில் பக்தியிசை பாடகி திருமதி பெங்களூர் ஏ ஆர்  ரமணி அம்மாள் பாடிய பாடலை போடுவார்கள். குரல் 'ஹை பிட்சா' அல்லது 'லோ பிட்சா' அதெல்லாம் எனக்குத் தெரியாது, காலையில் பாடலை கேட்கும்போதே உற்சாகம் பிறக்கும். 
 
பிறகு 'ஒலியும் ஒளியும்' நிகழ்ச்சியில் 'வேலும் மயிலும் துணை' படத்தில் இடம்பெற்ற "மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம்..." என்ற பாடலை 'தைப்பூச' நாளில் போடுவார்கள்.

பக்தி இலக்கியம், பக்தி/ புராண திரைப்படங்கள் மற்றும் பக்தி இசை இவை மூன்றும் தமிழகத்தில் தழைத்தோங்க அறிஞர்கள், கவிஞர்கள், விற்பன்னர்கள் மற்றும் பாடகர்கள் தம் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள் அந்த வகையில். பக்தி பாடல்கள் படுவதற்கென்றே இறைவன் படைத்த அபூர்வ குரல் பக்தி பாடகி திருமதி பெங்களூர் ஏ ஆர்  ரமணி அம்மாள் அவர்களுடையது.

"பொம்ம பொம்ம தா", "குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் ", "வேலவா வடி வேலவா", "நீங்கள் வாருமே", "பிள்ளையார் பிள்ளையார் " போன்ற மேலும் பல பாடல்கள் அவர் நமக்கு விட்டுச் சென்றுள்ளார். தைப்பூச திருவிழா இவர் பாடல்கள் இல்லாமல் நிறைவு பெறாது என்று சொல்வேன்.

"முருகனைப் பாடினால்...முக்தி அடையலாம்!
சிவனைப் பாடினால்...சித்தி அடையலாம்!!

நீங்கள் யாரைப் பற்றி வேண்டுமானாலும் பாடுங்கள், ஆனால் படாமல் மட்டும்
இருக்கவேண்டாம் என்று சொல்லாமல் சொல்லும் வரிகள்.

திருமதி பெங்களூர் ஏ ஆர் ரமணி அம்மாள் அவர்களை பற்றிய விக்கி பக்கங்கள் இல்லை. யாராவது தகவல்களை சேகரித்து பதிவேற்றினால் வரும் தலைமுறையினருக்கு பேருதவியாக இருக்கும்.


 
 
 
 
நன்றி:Youtube

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி    

1 comment:

  1. The author through this special article has paid rich tributes to Bangalore ramani ammal whose thunderous voice is still echoing in millons of tamilian ears. Thanks for this special article message from kumar venkat

    ReplyDelete