Wonderful Shopping@Amazon

Thursday, 13 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-81

'மழவில்காவடி'(1989)

'மழவில்காவடி' பெயரே கவிதையாக இருக்கிறதல்லவா! இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கிய இந்த படமும் அப்படித் தான் இருக்கும். காதல், நகைச்சுவை , குடும்பச் சென்டிமெண்ட் என அமர்க்களமாக இருக்கும். படம் பழனியில் நடப்பது போலக் கதை அமைக்கப்பட்டிருக்கும். 'மழவில்காவடி' படம் தான் தமிழில் இயக்குநர் / நடிகர்  ஆர் பாண்டியராஜன் நடித்து இயக்கிய 'சுப்ரமணியஸ்வாமி' என்ற பெயரில் தமிழில் வெளிவந்தது.

இயக்குநர் சத்யன் அந்திக்காடு படங்கள் எனக்குப் பிடிக்கும். குடும்பக் கதைகளை வித்தியாசமான கோணங்களில் சொல்வதில் மன்னர். படத்தினூடே இழையும் நகைச்சுவை இவர் முத்திரை. பெரிய கதாநாயகர்களும் இவர் படத்தில் நடிக்க விரும்புவார்கள். பெரிய நடிகர்களும் இவர் படத்தில் சாதாரண கதைமாந்தர்களாக உலா வருவார்கள்.

இவர் படத்தில் இன்னுமொரு சிறப்பம்சம் இசை. இசையமைப்பாளர்கள் ஜான்சன், ஒஷேப்பச்சன் அல்லது ராஜா சாராகட்டும் இனிமையான பாடல்களை கேட்டு வாங்கிவிடுவார்.

இயக்குநர் சத்யன் அந்திக்காடு - கதாசிரியர் /நடிகர் ஸ்ரீநிவாசன் கூட்டணி பல வெற்றிப் படங்களைத் தந்துள்ளது. 'மனசிங்க்கரே', 'ராசதந்திரம்', 'தூவல் கொட்டாரம்', 'பட்டினப்ரவேசம்', 'நாடோடிக்கற்று', 'வீண்டும் சில வீட்டுகார்யங்கள்','ஒராள்மாத்ரம்','ஸ்நேஹவீடு', 'பாக்யதேவதா','வினோதயாத்ரா' என இவர் இயக்கிய படங்கள் எனக்குப் பிடிக்கும்.

இசையமைப்பாளர் ஜான்சன் இசையில் 'மழவில்காவடி' படத்தில் இடம்பெற்ற "தங்கத்தோணி..." என்ற மெலடி பாடலை சென்னை தொலைக்காட்சியில் மாநில மொழி திரைப்படப்பாடல் நிகழ்ச்சியில் அடிக்கடி போடுவார்கள். சரி, வாங்க அந்த பாடலை கேட்போம்:





நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி   

No comments:

Post a Comment