ஆறாம் தம்புரான் (1997)
கொச்சியில் வேலை பார்த்தபோது நான் தங்கியிருந்த இடத்திற்கு சற்றே தொலைவில் ஒரு டூரிங் திரையரங்கம் இருந்தது. அறை நண்பர்கள் குழுவுடன் சில படங்களை பார்த்திருக்கிறேன். சிலது மறந்துவிட்டது, சிலது ஞாபகம் இருக்கிறது.
முதல்முறையாக இயக்குனர் ஷாஜி கைலாஷ் - லாலேட்டன் கூட்டணியில் வெளிவந்த ''ஆறாம் தம்புரான்" என்ற படம் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. நெடுநாளாக நடக்காமல் இருக்கும் கோவில் திருவிழாவை நடத்தவேண்டி மும்பையிலிருந்து வரும் நாயகன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பர பர ஆக்ஷன் பின்னணியில் தனது பாணியில் இயக்கியிருப்பார் இயக்குனர் ஷாஜி கைலாஷ்.
'கனிமங்களம் ஜகந்நாதன் தம்புரான்' என்ற வேடத்தில் ஆக்ஷனில் கலக்கியிருப்பார் லாலேட்டன். 'உன்னி மாயா'-வாக மஞ்சு வாரியார் சிறப்பாக நடித்திருப்பார்.
இந்த படத்தில் திரு ரவீந்திரன் இசையில் வெளிவந்த எல்லா பாடல்களும் பிரபலம் அடைந்தது. குறிப்பாக தாசேட்டன் பாடிய "ஹரிமுரளீரவம்..." பாடல் அப்போது மட்டுமல்ல இப்பொதும் ஹாட் சென்சேஷன். அடுத்து திருமதி எம் எஸ் சித்ரா அருமையாக பாடிய "பாடி.... " என்ற மெலடி பாடல் எனக்கு பிடிக்கும்.
நன்றி: Youtube
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
No comments:
Post a Comment