பொப்லி ராஜா (1990)
தெலுங்கு பாடல்(கள்) எனக்கு அறிமுகமானது சென்னையில் நடந்த பாட்டுக் கச்சேரிகளில் தான்.' சங்கராபரணம்' படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடல் அப்போது கச்சேரிகளில் தவறாமல் இடம்பெற்றது.
பிறகு சென்னை தொலைக்காட்சியில் (வியக்கிழமை என்று நினைக்கிறேன்) மாநில மொழி திரைப்படப் பாடல்கள் ஒளிபரப்புவார்கள், அதில் இயக்குநர் பி கோபால் இயக்கத்தில், ராஜ சார் இசையில், வெங்கடேஷ்-திவ்யபாரதி நடித்த 'பொப்லி ராஜா' படத்தில் வரும் ''கன்னியாகுமாரி ...." என்ற இனிமையான பாடலை அடிக்கடி போடுவார்கள். திரும்பவும், எப்போது போடுவார்கள் என்று காத்திருப்போம்.
வெங்கடேஷ் மற்றும் திவ்யபாரதி Casual-ஆக ஆடுவார்கள், இரண்டு பேருடைய கெமிஸ்ட்ரி அபாரமாக இருக்கும். தென்னிந்திய சினிமாவில் கிராபிக்ஸ் கதாபாத்திரங்கள் முதன்முறையாக இடம்பெற்ற பாடல். ஸ்ரீதேவியின் நகல் எனப் போற்றப்பட்ட திவ்யபாரதி பெரியளவில் வளர்த்திருக்கவேண்டியவர். ஆனால் காலம் கொண்டு சென்றுவிட்டது.
1990-ஆம் வருடம் சிரஞ்சீவி-ஸ்ரீதேவி நடித்த 'ஜெகதேக வீரூடு அதிலோக சுந்தரி' படத்தை அடுத்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படம் 'பொப்லி ராஜா'.
வழக்கம் போல நம்ம ராஜா சார் இசையமைத்த அத்தனை பாடல்களும் மிக அற்புதமாக அமைந்தன. நம்மூர் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியைப்போலப் போல 'மா' தொலைக்காட்சி நடத்திய இளம் பாடகர்கள் தேர்வு போட்டியில் அஞ்சனா சௌம்யா மற்றும் ஹேமச்சந்திரா ஜோடி அருமையாகப்பாடிய இந்த பாடலை நீங்களும் கேளுங்களேன்:
நன்றி: Youtube
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
No comments:
Post a Comment