Wonderful Shopping@Amazon

Thursday, 13 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-80

திரு பி விட்டலாச்சார்யா

'மாயாஜால மன்னன்' எனப் போற்றப்படும் திரு பி விட்டலாச்சார்யா, கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழில் ஏராளமான படங்களை இயக்கியிருக்கிறார். இன்றைய தலைமுறை பிள்ளைகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இவரது இயக்கத்தில் என் டி ராமராவ் கதயநாகனாகப் பதிமூன்று படங்களுக்கு மேல் மற்றும் நாகேசுவர ராவ் சில படங்களில் நடித்துள்ளனர்.
     நரசிம்ம ராஜு 
       இன்றைய 
       தோற்றம்

பிறகு இவர் தனது தடத்தை மாற்றி 'ஆந்திர கமலஹாசன்' என்றைழைக்கப்பட்ட நடிகர் நரசிம்ம ராஜு மற்றும் அன்றைய 'கவர்ச்சி கன்னி' ஜெயமாலினி - யை வைத்து 'பி' மற்றும் 'சி' சென்டர் ரசிகர்களுக்குப் 'பேய்' பட ஜானரில் 'மோகினி சபதம்', 'ஜெகன் மோகினி', 'நவ மோகினி', 'கந்தர்வ கன்னி', 'மதன மஞ்சரி', 'வீர பிரதாபன்' என நிறையப் படங்களை இயக்கினார். இவர் எத்தனையோ படங்களை இயக்கியிருந்தாலும் 'ஜெகன் மோகினி' மிகப் பிரபலமான படம். VFX நன்கு வளராத அந்த காலகட்டத்தில், தனக்கு தெரிந்த சில யுக்திகளை வைத்து ரசிகர்களை பயமுறுத்தினார்.  நடிகர் நரசிம்ம ராஜு இப்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

எங்களூர் திரையரங்கில் அவ்வப்போது விட்டலாச்சார்யாவின் திரைப்படங்கள் வெளியாகும்.  கவர்ச்சியான ஜெயமாலினி படம் மற்றும் தலைவிரித்த கூந்தலுடன் 'பேய்' வெள்ளை உடை அணிந்த ஒருவர் அடுப்பிற்குள் காலை நீட்டி வைத்திருப்பது போலச் சுவரொட்டியில் காணப்படும். "ராஜன் ஹட்டன்" என்ற பெயரும் சுவரொட்டியில் ஓரமாக அச்சடித்து இருக்கும், அவர் யாரென்று தெரியவில்லை, ஒரு வேலை விட்டலாச்சார்யாவின் படங்களைத் தமிழில் வெளியிட்ட தயாரிப்பாளரோ என்னவோ ?

சில சமயங்களில் தனியார் தொலைக்காட்சியில் மேலே சொன்ன படங்கள் ஒளிபரப்பாகும். இப்போது பார்க்கும் போது கொஞ்சம் செயற்கையாக இருந்தாலும், அன்றைய ரசிகர்களுக்கு அது போதுமானதாக இருந்தது போலும்.

சரி நண்பர்களே, உங்களுக்குப் பிடித்த விட்டலாச்சார்யா-வின் படத்தைப் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.


நன்றி: Google

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி     



No comments:

Post a Comment