கொரோனா காலமான இந்த பொது முடக்கக் காலத்தில் நான் பார்த்த படங்கள், கேட்ட விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பகுதி:
'அலா வைகுண்டபுரமுலோ'(2020)
சரி விசயத்துக்கு வருவோம், இயக்குநர் திருவிக்ரம் இயக்கி, அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்துப் பொங்கலன்று வெளியான 'அலா வைகுண்டபுரமுலோ' படம் பார்த்தேன். குடும்பக் கதையை வேறொரு கோணத்தில் சொன்ன விதம் அருமை. கதாநாயகனின் அப்பாவாக வரும் நடிகர் 'முரளி சர்மா', பின்னி பெடலெடுத்திருப்பார், முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு, அப்பப்பா......என்ன ஒரு உடல் மொழி. கதையே அவரைச் சுற்றித் தான் நடக்கும். துணை கதாபாத்திரம், வில்லன், குணச்சித்திர வேடம், கதாநாயகி- கதாநாயகனின் தந்தை என elevate ஆகி தனது ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பை மெருகேற்றி வருகிறார்.
அல்லு அர்ஜுன் தேர்ந்த நடிப்பு, சிறந்த நடனம், ஆக்ஷன் பிளாக் என அனைத்து ஏரியாவிலும் ஸ்கோர் செய்தாலும், அப்பாவாக வரும் முரளி ஒரு சில காட்சிகளில் கதாநாயகனை ஓவெர்ட்கே செய்கிறார்.
ஈஸ்வரி ராவ், சச்சின் காடேகர், ஜெயராம், சமுத்திரக்கனி, தபு, வெ கிஷோர் என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களில் ஜொலிக்கிறார்கள்.
பாடல்கள், படம் வருவதற்கு முன்பே பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாகச் சித் ஸ்ரீராம் பாடிய ''சாமஜவாரகமனா..." யூடியுப் தளத்தில் அதிகம் விரும்பி ரசிக்கப்பட்ட பாடல்.
இசையமைப்பாளர் எஸ் எஸ் தமனின் மிரட்டலான பின்னணி இசை மூலம் படத்திற்குப் பலம் வலுசேர்த்திருப்பார். குறிப்பாக இடைவேளைக்கு முந்தைய ஈஸ்வரி ராவ் - அல்லு அர்ஜுன் சந்திக்கும் காட்சி மற்றும் அதைத் தொடர்ந்து வரும் பின்னணி இசை வேற லெவல்.
பட இறுதியில் பாடலுடன் வரும் வித்தியாசமான ஆக்ஷன் பிளாக் Goosebumps- எகிறச் செய்கிறது.
சித் ஸ்ரீராம் பாடிய ''சாமஜவாரகமனா..." இதோ:
நன்றி: Youtube
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
Arumai...
ReplyDeleteGood
ReplyDelete