'கரும்பு வில்'
'கரும்பு வில்' - இணையத்தில் தேடியபோது இந்தப் படத்தைப் படத்தைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. பெரியவர்களிடம் கேட்டபோது பாடல் மட்டும் ஞாபகம் இருக்கிறது, படத்தின் கதை மறந்துவிட்டதென்றார்கள். அப்போது சுதாகர் நடித்த ஏகப்பட்ட படங்கள் தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டே இருந்ததால், மறந்திருக்கலாம். பிறகு ஏன் தெலுங்கு பட உலகுக்குச் சென்றார் என்று தெரியவில்லை.
எங்கள் மாமா ஆசையாக டேப்பை ரெகார்டரில் 'பொண்ணு ஊருக்கு புதுசு' படத்தில் வரும் "ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது" பாடலை திரும்பக் திரும்பக் கேட்டுக்கொண்டே இருப்பார்.
'கிழக்கே போகும் ரயில்' படம் முதல்முதலாகச் சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது ஊரே தொலைக்காட்சி பெட்டி முன் உட்கார்ந்து படம் பார்த்தது ஞாபகம் இருக்கிறது.
"மீன்கொடி தேரில் மன்மதராஜன்...." - இரவு சென்னை வானொலியில் விவிதபாரதியின் வர்த்தக ஒளிபரப்பில் பாடகி திருமதி ஜெனிசி அல்லது தாசேட்டன் பாடிய இந்தப் பாடல் சன்னமான ஒளியில் காதில் பாய, அம்மா உணவு பரிமாறுவாள். இது போல எத்தனையோ பாடல்கள், மறக்கமுடியாத நாட்கள் அவை. இந்தப் பாடலை கேட்கும்போது பழைய நினைவுகள் வருவதைத் தவிர்க்கமுடிவதில்லை.
என்ன
ஒரு Grand Orchestra, கோரஸ் பாருங்கள், கோரஸ். என்ன ஒரு தரம், பாடல் வரிகள்
தனியாக, இசை தனியாகப் பயணிக்கிறது. உங்களுக்குத் தாசேட்டன் பாடிய பாடல்
பிடிக்குமா, ஜெனஸி பாடிய என்று கேட்டல் உங்களால் பதில் சொல்ல முடியாது,
காரணம் இரண்டுமே இப்போதும் புத்தம் புதிய பாடல் போல
ஜொலிக்கிறது.
நண்பர்
சொன்னது: "இரவு கண்ணை மூடி இந்தப் பாடலை கேட்டு ரசி. குதிரைகள் பூட்டிய
தேரில் உன்னை ராஜா அழைத்துச் செல்வதை உணர்வாய். அது மட்டுமா, ராஜாவைத்தான்
குதிரைகள் பூட்டிய தேரில் அழைத்துச் செல்வார்கள். ஆனால் இங்கே ராஜாவே உன்னை
அழைத்துச் செல்கிறார். Enjoy.
நீங்களும் பயணத்துக்குத் தயாரா ?
- காளிகபாலி
No comments:
Post a Comment