இந்தியக் கால்பந்து அணியின் சிற்பி மறைந்த திரு சையத் அப்துல் ரஹீம்
கால்பந்து - உலகம் முழுதும் அதிக ரசிகர்கள் கொண்ட விளையாட்டு. தொடர் பயிற்சி மற்றும் அதிக செலவு பிடிக்கும் விளையாட்டும் கூட. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் ஏனோ கால்பந்து விளையாட்டுச் சட்டை செய்வதில்லை. இந்தியாவில் கால்பந்து மைதானங்களைவிடக் கிரிக்கெட் மைதானங்கள் அதிக அளவில் உள்ளன. ஆனால் இப்போது நிலைமை மாறி வருகிறது. மாநில அளவில், வட்டார அளவில் பல பயிற்சி மையங்கள் முளைத்துள்ளன, அவை தரமான பயிற்சியை அளிக்கின்றன. இன்னும் அடுத்தப் பதினைந்து வருடங்களில் இந்தியா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் கலந்துகொள்ளும் என நம்பலாம்.
சரி விஷயத்துக்கு வருவோம், 1950 மற்றும் 1960-களில் இந்தியக் கால்பந்து அணியின் புகழ்பெற்ற வீரர் மற்றும் பயிற்சியாளர் திரு சையத் அப்துல் ரஹீமின் பயிற்சியின் கீழ், இந்தியக் கால்பந்து அணிக்குப் பொற்கால ஆண்டுகளாக அமைந்தன. இந்தியக் கால்பந்து அணி உலகின் முதல் 20 அணிகளில் இடம் பிடித்தது. அவர்கள்
1951 மற்றும் 1962-ஆம் ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்றனர், மேலும் 1956-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் நான்காவது இடத்தைப் பிடித்தனர். அணியின் உச்ச காலகட்டத்தில், அவர்கள் 1950-ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு முன்னேறினர். ஆனால் நிதிப் பற்றாக்குறை, கட்டுப்பாடுகள் மற்றும் பிற உள்-அரசியல் பிரச்சினைகள் காரணமாக அவர்களால் விளையாட்டுகளில் பங்கேற்க முடியவில்லை. அதன் பிறகு என்ன ஆனது என் எல்லோர்க்கும் தெரியும்.
நன்றி:Google & 'Thebetterindia.com'
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
தமிழில் : காளிகபாலி
Good information
ReplyDelete