'ஜெகதேக வீருடூ அதிலோக சுந்தரி' (1990)
எழுத்தாளர் எண்டமூரி வீரேந்திரநாத் கதையைத் தழுவி இயக்குநர் கே ராகவேந்திரா ராவ் இயக்கி 'அழகு தேவதை' ஸ்ரீதேவி-சிரஞ்சீவி நடித்துக் கோடை விடுமுறை வெளியிஈடாக வந்த 'ஜெகதேக வீருடூ அதிலோக சுந்தரி' என்ற பேன்டசி படம் ஆந்திராவில் வசூல் வேட்டையைக் கிளப்பியது. தமிழில் 'காதல் தேவதை' என்ற பெயரில் 'டப்' செய்து வெளியிடப்பட்டது. எங்கள் மாமா கடைக்கு அருகிலிருந்த வெற்றிலை-பாக்கு கடை உரிமையாளர் இந்தப் படத்தின் டேப் ரெகார்டரில் இப்படப்பாடல்களை அடிக்கடி கேட்பார். அவர் 'சிரு'-வின் தீவிர ரசிகர், பின்பு ஒரு சுபயோக தினத்தில் அவருடைய கட்சியில் சேர்ந்து சொந்த ஊரில் தேர்தலில் நின்று தோற்றுப்போனார். பிறகு சென்னையிலேயே செட்டில் ஆனது வேறு கதை. சிரஞ்சீவி ரசிகர்களின் All Time Favorite படம்.
''அப்பாநீ தீயணி...'' என்ற பாடல் தான் அனில் கபூர்-மாதுரி தீட்சித் நடித்த 'பேட்டா' இந்தி படத்தில் இடம்பெற்ற "தக், தக் கரனே லகா" என்ற பாடலாக ஹிட்டடித்தது. "மதுர மரிக்கொழுந்து" பாட்டு "யமஹோ......" பாடலாக வெளிவந்தது. மொத்தத்தில் ராஜா சார் இசையமைத்த இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களும் இன்றும் தெலுங்கு ரசிகர்களின் ஆதர்சம்.
இந்த படத்தில் எனக்கு பிடித்த பாடல் "ப்ரியத்தமா........" என்ற மெலடி பாடல், நீங்களும் அந்த பாடலை கேளுங்கள்:
நன்றி: Youtube
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
No comments:
Post a Comment