'சட்டம்' (1983)
கதாசிரியர் / இயக்குநர் / பாடலாசிரியர் / இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்ட திருக் கங்கை அமரன் அவர்கள் ஐம்பதுக்கு மேற்பட்ட படங்களை இசையமைத்திருக்கிறார். 'மௌன கீதங்கள்', 'வாழ்வே மாயம்', 'சுவரில்லாத சித்திரங்கள்' போன்ற படங்களின் இடம்பெற்ற படப்பாடல்கள் இன்றும் கேட்கலாம்.
கமல் போலீஸ் வேடம் ஏற்று நடித்த முதல் படம் 'சட்டம்' என்று நினைக்கிறேன்?. திருக் கே பாலாஜி தயாரிப்பில், இயக்குநர் கே விஜயன் இயக்கி, கமல், மாதவி நடித்து 1983-வெளிவந்த படம். நல்ல கதையம்சமுள்ள படம் எந்த மொழியில் ஓடினாலும், அந்தக் கதையை வாங்கி, தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப மாற்றி, படத்தை எடுத்து வெளியிடுவது கே பாலாஜியின் வழக்கம். இதுவும் ஹிந்தியில் வெற்றி பெற்ற 'தோஸ்தானா' படத்தின் ரீமேக் தான். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக நகரும் கதை. கங்கை அமரன் இசையமைத்த எல்லாப் பாடல்களும் பிரபலம் அடைந்தது. சென்னை தொலைக்காட்சி மற்றும் சென்னை வானொலியில் திருமதி வாணி ஜெயராம் மற்றும் திரு எஸ்பிபி பாடிய இனிய பாடலான 'வா வா என்ன வீணையே என்ற பாடலை அடிக்கடி கேட்பதுண்டு. வாருங்கள் அந்தப் பாடலை கேட்போம் :
நன்றி:Youtube
- காளிகபாலி
No comments:
Post a Comment