ஏக் துஜே கே லியே (1980)
அப்போது விவிதபாரதி வானொலி நிகழ்ச்சியில் லதாஜி பாடிய மனதை உருக்கும் இந்தப் பாட்டை அடிக்கடி ஒளிபரப்புவார்கள். கேட்கப் பிடிக்கும். ஆனால் மறுபடியும் கேட்க முடியாது, எப்போதாவது ஒளிபரப்பினால் தான் உண்டு. வீட்டில் டேப்ரெக்கார்டர் எல்லாம் இல்லை. வளர்ந்த பிறகு தான் தெரிந்தது அது கமலஹாசன் நடித்து, இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கி, கவிஞர் ஆனந்த் பக்ஷி எழுதி, இசை இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-பியரிலால் இசையமைத்த ஏக் துஜே கே லியே (1980) என்ற கோடிகளை வசூலித்த இந்தி வெற்றிப்படம் என்று!
மரோசரித்ரா (1978) கமலஹாசன் நடித்து, இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கி தெலுங்கில் வெளிவந்து ஐந்நூறு நாட்களுக்கு மேல் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் ஓடிய படம் தான் மேலே சொன்ன ஏக் துஜே கே லியே (1980.) என்ற இந்தி மறுஆக்கம் படம். சரி நீங்களும் அந்த பாடலை கேளுங்கள் :
நன்றி: Youtube
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
No comments:
Post a Comment