குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்பாகட்டும், திரைப்படமாகட்டும் இரண்டுமே கொஞ்சம் கஷ்டமான காரியம் தான். அவர்களைத் திருப்திப்படுத்துவது கடினம். எத்தனையோ தொலைக்காட்சிகளில் தினந்தோறும் குழந்தைகளுக்கான தொடர்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது, எல்லாவற்றையும் குழந்தைகள் பார்ப்பது கிடையாது. தங்களுக்கு எது பிடிக்குமோ அதை மட்டும் தான் அவர்கள் பார்ப்பார்கள். தங்களுக்குப் பிடிக்காத நிகழ்ச்சிகளைத் திரும்பிக் கூடப் பார்க்கமாட்டார்கள். என் பிள்ளைகளுக்கு டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்ஸ், கார்ஸ் தொடர் படங்கள், ஜுங்கில் புக், லையன் கிங் போன்ற படங்கள் பிடிக்கும். தொலைக்காட்சியில் எப்போது ஒளிபரப்பினாலும் பார்ப்பார்கள். நானும் அவர்கள் கூடச் சேர்த்துப் பார்ப்பேன். அதில் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் தொடர்கள் மற்றும் கார்ஸ் தொடர் படங்கள் என்னுடைய விருப்பம்.
இந்திய வெகுஜன திரைப்படங்களில் அனிமேஷனை நகாசு வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நம்மூரிலும் எப்பாவாவது ஒறுக்கா அங்கொன்றும், இங்கொன்றும் அனிமேஷன் படங்கள் வெளியாகிறது. மேற்கத்தியர்கள் அளவுக்கு நாம் தரமான அனிமேஷன் படங்களை உருவாக்கவில்லை. அனிமேஷன் படத்துறையில் நாம் முன்னுக்கு வர இன்னும் 10 -15 வருடங்கள் ஆகும் போல...
சரி விசயத்துக்கு வருவோம், ஆங்கிரி பேர்ட் முதல் பாகம் வந்தபோது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனோம். மனதில் ஜாங்கிரி போல நச்சென்று பதிந்துவிட்டது. முதல் பாகம், முதல் காட்சியில் கோபம் கொப்பளிக்கப் பார்க்கும் "ஆங்கிரி பேர்ட்", அடுத்தடுத்த காட்சியில் கோபக்கார ஆங்கிரி பேர்டின் உக்கிரம், அப்பப்ப கோபத்தை மென்று விழுங்கும்....பாவம் - என்ன சொல்ல, WOW ரகம்.
ஆமாம், ஏன் "ஆங்கிரி பேர்ட்" ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது ? நம் எல்லோருக்குள்ளும் ஒரு "ஆங்கிரி பேர்ட்" இருக்கிறது. அது அப்பப்போவ வந்து எட்டிப் பார்க்கிறதோ என்னவோ..! எல்லாம் உளவியல்!!
எங்கள் வீட்டிலும் ஒரு "ஆங்கிரி பேர்ட்" உண்டு. அதை Handle பண்ணி, Handle பண்ணி, நான் வல்லுநராகிவிட்டேன்.
மூன்று நாட்கள் தொடர் விடுமுறையால் குடீஸ்களால் திரையரங்கம் நிரம்பி வழிந்தது. கதைக்கு வருவோம்.
முதல் 15 நிமிடத்திற்குள் அது ஒரு அனிமேஷன் படம் என்பதை மறந்து, நம்மை அறியாமல் படத்தில் ஐக்கியமாகிவிடுகிறோம்.
வழக்கம் போல ரெட் குழுவினருக்கும் பன்றி கூட்டத்துக்கும் நடக்கும் சண்டை இந்தமுறை முடிவுக்கு வர. இரண்டு தரப்பினரும் சேர்ந்து, Mighty கழுகுக் கூட்டங்களால் வரும் ஆபத்தை முறியடிக்கிறார்கள்.
இந்த முறை ரெட்டுக் கொஞ்சம் அதிகப்படியான தன்நம்பிக்கையில் திரிகிறான். ரெட்டின் ஜோடியான சில்வர் திட்டம் வகுக்க, ரெட்டு மற்ற நண்பர்களும் அதைச் செயல்படுத்துகிறார்கள். பர பர கிளைமாக்ஸ். சுபம்.
இதில் ஹாட்ச்சலிங்ஸ் முட்டை பறிகொடுக்க, அதை மீட்க அவை போராடும் தனிக்கதை - Cho Sweet!! இறுதிக் கட்ட காட்சியில் இணைத்துப் படத்தை ஜோராக முடித்திருப்பார்கள்.
இதில் ஹாட்ச்சலிங்ஸ் முட்டை பறிகொடுக்க, அதை மீட்க அவை போராடும் தனிக்கதை - Cho Sweet!! இறுதிக் கட்ட காட்சியில் இணைத்துப் படத்தை ஜோராக முடித்திருப்பார்கள்.
படம் சமகாலப் பிரச்சனையைப் பேசுகிறது. அதற்குள் செல்லவேண்டாம். அது என்ன என்பதைப் படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குப் பின்னணி குரல் கொடுத்தவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும். வெடிச் சிரிப்பு, நொடி சிரிப்பு, எனக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் சிரிப்புச் சத்தம் கடைசி வரை கேட்டுக்கொண்டே இருந்தது.
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
Good reviews
ReplyDelete