Wonderful Shopping@Amazon

Friday, 6 September 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம் - 2

எட் ஷீரன்

சமீபத்தில் லண்டனில் நடந்த இளம் இசைக்கலைஞர் எட் ஷீரன் இசை நிகழ்ச்சியைக் காணத் திரளாக வந்த ரசிகர்கள், தாங்களாக முன்வந்து வரிசையில் நின்று அனுமதிச் சீட்டு பெற்று நிகழ்ச்சியைக் கண்டுகளித்தார்கள். என்ன ஒரு கட்டுக்கோப்பான ரசிகர்கள். ஒரு கலைஞனுக்கு இதை விட வேறு என்ன வேண்டும்.
 
இசைக்கலைஞர் எட் ஷீரன் பற்றி விக்கிப்பீடியாவில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்....!

எட் ஷீரன் 'Shape of You' என்ற காணொளி பாடலை கேளுங்கள், ஒரு மாதிரி உங்களைக் கவரும்.  2017 ஆண்டு வெளியான இந்த இசை தொகுப்பு, அது வரை வெளியான அனைத்து பாடல்களையும் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தது.
              

சமீபத்தில் வந்த Beautiful People காணொளி பாடலை கேளுங்கள் உங்களுக்குப் பிடிக்கும்.

பெரும்பாலான எட் ஷீரன் காணொளி காதல் பாடல்கள் எனக்குப் பிடிக்கும். ஒவ்வொரு பாடலும் ஒரு கதை சொல்லும். துள்ளல்,மென்சோகம், குதூகலம், ஆற்றாமை, தயக்கம், இயலாமை, ஏமாற்றம் என மனித உணர்வுகளை அழகாக நம் மீது கடத்துகிறார் எட் ஷீரன். இவர் பாடல்களில் கிட்டார் இசைக் கருவியின் தாக்கம் அதிகமாயிருப்பதைக் கேட்கலாம்.



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி

No comments:

Post a Comment