ஒரு விஷயம் சிறப்பாக நடந்தேறி, அது காலங்காலமாக மக்களால் ரசிக்கப்படும் படைப்பாக மாறி நிலைத்து நிற்கும். மீண்டும் அப்படைப்பை மீட்டுருவாக்கம் செய்ய முடியாது. அது ஒரு முறை நிகழும் மாயாஜாலம். அப்படைப்பு உருவான சூழ்நிலையை மீண்டும் கொண்டு வர முடியாது.
யுடியூப் செயலியில் திரு குலதீப் எம் பய் என்பவருடைய சேனல், இசை ஆர்வம் உள்ள இளம் சிறுவர், சிறுமியரை இனங்கண்டு சாஸ்திரியை இசையைக் கற்றுக் கொடுத்து பக்தி பாடல்களை இசையமைத்து (அன்னமய கீர்த்தனைகள் முதல் ஹனுமான் சாலிசா வரை) தாள, லயம் மாறாமல் பாட வைத்து, பதிவேற்றிய பல காணொளிகள் உண்டு. மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள் அவை. கீழே உள்ள காணொளி உங்கள் பார்வைக்கு. மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் - எத்தனையோ இசை விற்பன்னர்கள் பேர் பாடியிருக்கிறார்கள். ஆனால் இதில் ஒரு துள்ளல் இருக்கிறது. ஒரே குரலாய் ஒலிக்கும் பாங்கு, இடைஇடையே வரும் செண்டை மேளம் interlude நம்மைத் தாளம் போடவைக்கும்.
இது ஒரு துளி மட்டும் தான். இதே போல் சிறுவர் சிறுமியர் பாடிய பல பக்தி காணொளி பாடல்கள் குலதீப் எம் பய் சேனலில் இருக்கிறது. கேட்டு மகிழுங்கள்.
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
No comments:
Post a Comment