மோகமுள் (1995)
எழுத்தாளர் தி ஜானகிராமன் எழுதிய புகழ்பெற்ற புதினம் "மோகமுள்". தி ஜானகிராமனின் மிக அற்புதமான படைப்பு என இது இன்றளவும் போற்றப்படுகிறது. ஞான ராஜசேகரன் இயக்கி, சின்னத்திரை நடிகர் அபிஷேக் (கதாநாயகன்), விவேக், நெடுமுடிவேணு மற்றும் வெ ஆ மூர்த்தி நடித்து 1995. - ஆம் ஆண்டு திரைப்படமாக வெளிவந்தது. ஒரு மாலை காட்சி தேவிகலா திரையரங்கில் பார்த்தேன். என்னோடு சேர்த்து சுமார் 15. பேர் மட்டுமே திரையரங்கில். அப்பவே நல்ல படத்துக்கு இ(ரு)ந்த மவுசு. கொஞ்சம் மெதுவாக நகரும் யதார்த்தமான படம். கதையினூடே பயணிக்கும் ராஜாவின் பின்னணி இசை படத்துக்கு பெருந்துணை.
கதைக்குள் செல்லவேண்டாம். மோகமுள் படத்தில் K.J. யேசுதாஸ் அவர்கள் பாடிய "கமலம் பாத கமலம்" என்ற மனதை கவரும் அருமையான பாடல் உள்ளது. இதோ அந்த பாடலை கேட்டு பாருங்கள்
நன்றி: Youtube
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
No comments:
Post a Comment