ரோசாப்பூ ரவிக்கைக்காரி
கன்னட படத்தின் மறு ஆக்கம், ரோசாப்பூ ரவிக்கைக்காரி. நடிகர் சிவகுமாரின் நூறாவது படம். இயக்குநர் இரட்டையர்களான தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிச்சித்திரம். ராஜா சாரின் இசை படத்துக்குப் பெரும் பக்க பலம். எல்லாப் பாடல்களும் பட்டி-தொட்டி எங்கும் ஒலித்தது. திருமண வீடு, கோயில் திருவிழா என எல்லா இடத்திலும் இந்தப் படத்தின் பாடல்கள் ஒலித்தது நினைவிருக்கிறது.
"என்னுள்ளில் எங்கோ......." - இந்தப் பாட்ட இரவு வேளையில் தரமான தலையணி (Headphone) உதவியுடன் ஒருமுறை கேட்டுவிட்டு நிறுத்திவிடுங்கள். இசை அதிர்வலை மனதைக் கொஞ்ச நேரம் ஆக்கிரமிக்கும். அதிலிருந்து வெளிவர நீண்ட நேரம் / நாட்கள் பிடிக்கும். மனதை வருடும் பாடல். இதிலும் பாடல் ஆரம்பத்தில் புல்லாங்குழல் நம்மை வரவேற்கும். திருமதி வாணி ஜெயராம் அவர்களின் மயக்கும் குரல். இந்தப் பாட்டில் இடையே இடையே வரும் ஆலாபனை. அந்த இடத்தில் கவனம் வைக்கவும், நான் மேலே சொன்னது போல இருக்கும். இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் Interlude. ஹிந்துஸ்தானி இசைக் கோர்வை போல இருக்கும்.
சூழலுக்கேற்றாற்போல் பாடல்களைக் கேட்டு வாங்கிப் படமாக்கிய இயக்குநர்களைச் சொல்வதா, பாடல் எழுதிய பாடலாசிரியரைச் சொல்வதா அல்லது இசையமைத்த ராஜா சாரை சொல்வதா............! மொத்தத்தில் நால்வர் நிகழ்த்திய மாயாஜாலம் என்று சொன்னால் மிகையாகாது.
சரி வாங்க பாடலை கேட்போம்:
நன்றி : Youtube
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
- காளிகபாலி
Good review.
ReplyDelete