Wonderful Shopping@Amazon

Sunday, 16 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-85

இந்தியக் ஹாக்கி அணியின் வழிகாட்டி திரு தியானசந்த்.


மார்ச் 15, 1975-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஹாக்கி உலகக் கோப்பையை இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்த வரலாற்று வெற்றியில், அணியின் அணித்தலைவராக இருந்த அஜித் பால், அஸ்லம் ஷெர் கான் போன்ற வீரர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். இந்தியா எட்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று மிகப்பெரிய சாதனை படைத்தது. அதன்பிறகு ஏகப்பட்ட வெற்றியை இந்திய ஹாக்கி அணி குவித்தது.

மேலே சொன்ன சாதனைக்கு அடித்தளமிட்டவர் திரு தியான்சந்த். ஹாக்கி என்று வரும்போது, தியான்சந்தின் பங்களிப்பைத் தவிர்க்க முடியாது. இந்திய விளையாட்டு வரலாற்றில் மிகச் சிறந்த ஹாக்கி வீரர்களில் ஒருவர். ஃபீல்ட் ஹாக்கியில் இந்தியா ஆதிக்கம் செலுத்திய ஒரு சகாப்தத்தில், 1928, 1932 மற்றும் 1936-ஆம் ஆண்டுகளில் மூன்று ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களைப் பெற்றதோடு, அசாதாரணக் கோல் அடித்த சாதனைகளுக்காக அவர் அறியப்பட்டார். 1928 முதல் 1964 வரை எட்டு ஒலிம்பிக்கில் ஏழு போட்டிகளில் இந்தியா பீல்ட் ஹாக்கி போட்டியை வென்றது.

இந்திய ஹாக்கி அணியை 1936-ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு எதிரான பெர்லின் ஒலிம்பிக் வெற்றி உட்படப் பல முறை வெற்றிக்கு இட்டுச் சென்றது, இது ஹிட்லர் உட்பட 40,000 க்கும் மேற்பட்ட மக்களால் காணப்பட்டது. போட்டி முடிவில் ஹிட்லர் மிகவும் கோபமடைந்தார், அவர் விரக்தியிலும் கோபத்திலும் மைதானத்தை விட்டு வெளியேறினார். அடுத்த நாள், தியான்சந்தை சந்திக்க அழைத்ததோடு, ஜெர்மன் இராணுவத்தில் உயர் பதவியுடன் அவருக்கு ஜெர்மன் குடியுரிமையையும் வழங்கினார், இதைத் தியான்சந்த் பணிவுடன் மறுத்துவிட்டார் என ஒரு கதை சொல்லப்படுவதுண்டு.

  

நன்றி:Google & 'Thebetterindia.com'

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


தமிழில் : காளிகபாலி    

 

Saturday, 15 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-84

இந்தியக் கால்பந்து அணியின் சிற்பி மறைந்த திரு சையத் அப்துல் ரஹீம்

இந்த விளையாட்டு உலகில் மாயாஜாலம் நிகழ்த்திய ஜாம்பவான்களைப் பற்றி பார்ப்போம்....

கால்பந்து - உலகம் முழுதும் அதிக ரசிகர்கள் கொண்ட விளையாட்டு. தொடர் பயிற்சி மற்றும் அதிக செலவு பிடிக்கும் விளையாட்டும் கூட. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் ஏனோ கால்பந்து விளையாட்டுச் சட்டை செய்வதில்லை. இந்தியாவில் கால்பந்து மைதானங்களைவிடக் கிரிக்கெட் மைதானங்கள் அதிக அளவில் உள்ளன. ஆனால் இப்போது நிலைமை மாறி வருகிறது. மாநில அளவில், வட்டார அளவில் பல பயிற்சி மையங்கள் முளைத்துள்ளன, அவை தரமான பயிற்சியை அளிக்கின்றன. இன்னும் அடுத்தப் பதினைந்து வருடங்களில் இந்தியா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் கலந்துகொள்ளும் என நம்பலாம்.

சரி விஷயத்துக்கு வருவோம், 1950 மற்றும் 1960-களில் இந்தியக் கால்பந்து அணியின் புகழ்பெற்ற வீரர் மற்றும் பயிற்சியாளர் திரு சையத் அப்துல் ரஹீமின் பயிற்சியின் கீழ், இந்தியக் கால்பந்து அணிக்குப் பொற்கால ஆண்டுகளாக அமைந்தன. இந்தியக் கால்பந்து அணி உலகின் முதல் 20 அணிகளில் இடம் பிடித்தது.  அவர்கள் 1951 மற்றும் 1962-ஆம் ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்றனர், மேலும் 1956-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் நான்காவது இடத்தைப் பிடித்தனர். அணியின் உச்ச காலகட்டத்தில், அவர்கள் 1950-ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு முன்னேறினர். ஆனால் நிதிப் பற்றாக்குறை, கட்டுப்பாடுகள் மற்றும் பிற உள்-அரசியல் பிரச்சினைகள் காரணமாக அவர்களால் விளையாட்டுகளில் பங்கேற்க முடியவில்லை. அதன் பிறகு என்ன ஆனது என் எல்லோர்க்கும் தெரியும்.

இந்தியக் கால்பந்து அணியின் சிற்பி எனப் போற்றப்படும் மறைந்த திரு சையத் அப்துல் ரஹீம் அவர்களின் வாழ்க்கையைத் தழுவி 'மைதான்' என்ற பெயரில் அஜய் தேவ்கன் நடிப்பில் இந்தி திரைப்படம் உருவாகி வருகிறது என்பது கூடுதல் தகவல்.

 

நன்றி:Google & 'Thebetterindia.com'

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


தமிழில் : காளிகபாலி

 

லாக்கடவுன் சித்திரங்கள் -1

கொரோனா காலமான இந்த பொது முடக்கக் காலத்தில் நான் பார்த்த படங்கள், கேட்ட விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பகுதி:

'அலா வைகுண்டபுரமுலோ'(2020)
 

தெலுங்கு பட உலகின் ஸ்டைலிஷ் இயக்குநர் திருவிக்ரம் படங்களை நான் விரும்பி பார்ப்பதுண்டு. அவருடைய 'ஜல்ஸா; ' அத்தடு', 'கலேஜா','அத்தாரின்டிக்கி தாரெதி' 'S/o.சத்யமுர்த்தி', 'அரவிந்த சமேத வீர ராகவ' போன்ற படங்கள் எனக்குப் பிடிக்கும். அலுப்பு தட்டாத சுவாரஸ்யமான திரைக்கதை, கூர்மையான வசனங்கள், ஹீரோயிசம், வலுவான வில்லன் கதாபாத்திரம், அருமையான ஆக்ஷன் பிளாக் (அத்தடு படத்தில் இடைவேளைக்கு முன்பு வரும் ஆக்ஷன் பிளாக்), இனிமையான பாடல்கள், துணை கதாபாத்திரங்களின் பங்களிப்பு, குடும்பச் செண்டிமெண்ட் எனக் கலந்து கட்டி ரசிகனை மகிழ்விப்பார். என்னுடைய ஆல் டைம் favorite படம் பவன் கல்யாண் நடித்த' அத்தாரின்டிக்கி தாரெதி'. சமீபத்தில் தமிழில் பிரபல இயக்குநர் இயக்கி, பிரபல நடிகர் நடித்து வெளிவந்து சொதப்பிய படம்.

சரி விசயத்துக்கு வருவோம், இயக்குநர் திருவிக்ரம் இயக்கி, அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்துப் பொங்கலன்று வெளியான 'அலா வைகுண்டபுரமுலோ' படம் பார்த்தேன். குடும்பக் கதையை வேறொரு கோணத்தில் சொன்ன விதம் அருமை. கதாநாயகனின் அப்பாவாக வரும் நடிகர் 'முரளி சர்மா', பின்னி பெடலெடுத்திருப்பார், முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு, அப்பப்பா......என்ன ஒரு உடல் மொழி. கதையே அவரைச் சுற்றித் தான் நடக்கும். துணை கதாபாத்திரம், வில்லன், குணச்சித்திர வேடம், கதாநாயகி- கதாநாயகனின் தந்தை என elevate ஆகி தனது ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பை மெருகேற்றி வருகிறார்.

அல்லு அர்ஜுன் தேர்ந்த நடிப்பு, சிறந்த நடனம், ஆக்ஷன் பிளாக் என அனைத்து ஏரியாவிலும் ஸ்கோர் செய்தாலும், அப்பாவாக வரும் முரளி ஒரு சில காட்சிகளில் கதாநாயகனை ஓவெர்ட்கே செய்கிறார்.

ஈஸ்வரி ராவ், சச்சின் காடேகர், ஜெயராம், சமுத்திரக்கனி, தபு, வெ கிஷோர் என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களில் ஜொலிக்கிறார்கள்.

பாடல்கள், படம் வருவதற்கு முன்பே பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாகச் சித் ஸ்ரீராம் பாடிய ''சாமஜவாரகமனா..." யூடியுப் தளத்தில் அதிகம் விரும்பி ரசிக்கப்பட்ட பாடல்.

இசையமைப்பாளர் எஸ் எஸ் தமனின் மிரட்டலான பின்னணி இசை மூலம் படத்திற்குப் பலம் வலுசேர்த்திருப்பார். குறிப்பாக இடைவேளைக்கு முந்தைய ஈஸ்வரி ராவ் - அல்லு அர்ஜுன் சந்திக்கும் காட்சி மற்றும் அதைத் தொடர்ந்து வரும் பின்னணி இசை வேற லெவல்.

பட இறுதியில் பாடலுடன் வரும் வித்தியாசமான ஆக்ஷன் பிளாக் Goosebumps- எகிறச் செய்கிறது.

சித் ஸ்ரீராம் பாடிய ''சாமஜவாரகமனா..." இதோ: 


 
 
நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி    

Friday, 14 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-83

'கொடி பறக்குது' (1988)

எத்தனை முறை பார்த்தேனென்று தெரியவில்லை, ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் கதைமட்டும் புரியமாட்டேன்கிறது. ஒரு வேலை பல வருடங்களுக்குப் பிறகு தான் இந்தப் படம் புரியும் போல என்று நினைத்து இருக்கையில், நேற்று தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு முறை பார்த்தேன். ஹூம் .. குச் பி நஹி!

நான் எதிர்பார்க்காத கேள்வி என் மகனிடமிருந்து வந்தது "அப்பா ரஜினி டபுள் ஆக்ஷனா?" - கதை: கதையை விடுங்க சாமி ..அது புரிஞ்சா நான் சொல்லமாட்டேனா.... யாரவது விளக்கினால் நன்றாகயிருக்கும்!

பதினோரு வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் இமயம்-ரஜினிகாந்த் இணைந்த படம் 'கொடிபறக்குது'. பதினோரு வருடமென்பது அதிகப் பட்ச இடைவேளை தான். அதுவும் பதினாறு வயதினிலே' போன்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் இமயம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் இணையும் படம் கொஞ்சம் எதிர்பார்ப்பை எகிறத்தான் செய்தது. ஆவலுடன் சென்றவர்களுக்கு மேலே சொன்ன அனுபவம் தான் கிட்டியது.  ஆனாலும் 'ஸ்டைலிஷ்'  போலீஸ் கமிஷனர்  'ஈரோடு' சிவகிரி மற்றும் ரவுடி   'ஜெ டி பி' கதாபாத்திரமும் எனக்குப் பிடிக்கத்தான் செய்தது.

தனது சிஷ்யனை அறிமுகப்படுத்திய தருணம் குருவுக்குக் கிட்டியது. ஆம், இயக்குநர் மணிவண்ணன் வில்லனாக முதன்முதலாக நடிகராக இப்படத்தில் அறிமுகமானார். பின்னணி குரல் கொடுத்ததும் இயக்குநர் தான். கூர்மையான வசனம் ஒவ்வொன்றும்.

அமலா முதல்முறையாகச் சொந்த குரலில் தமிழில் கொஞ்சி கொஞ்சி பேசி நடித்தார்.

கன்னட இசையமைப்பாளர் ஹம்சலேகா இசையில் பாட்டெல்லாம் ஓரளவு பிரபலம் அடைந்தும், படம் என்னைப் போன்ற தலைவர் ரசிகர்களுக்குத் திருப்தி தரவில்லை. 'சேலை காட்டும் பெண்ணுக்கொரு" என்ற இனிமையான பாடல் சென்னை தொலைக்காட்சியில் 'ஒளியும் ஒலியும்' நிகழ்ச்சியில் ஒளிபரப்புவார்கள்.



 
நன்றி:Youtube
 
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி    

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-82

பக்தியிசை பாடகி திருமதி பெங்களூர் ஏ ஆர்  ரமணி அம்மாள்

சென்னை வானொலி விவிதபாரதி வர்த்தக ஒளிபரப்பில் காலை பக்தி பாடல்கள் வரிசையில் பக்தியிசை பாடகி திருமதி பெங்களூர் ஏ ஆர்  ரமணி அம்மாள் பாடிய பாடலை போடுவார்கள். குரல் 'ஹை பிட்சா' அல்லது 'லோ பிட்சா' அதெல்லாம் எனக்குத் தெரியாது, காலையில் பாடலை கேட்கும்போதே உற்சாகம் பிறக்கும். 
 
பிறகு 'ஒலியும் ஒளியும்' நிகழ்ச்சியில் 'வேலும் மயிலும் துணை' படத்தில் இடம்பெற்ற "மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம்..." என்ற பாடலை 'தைப்பூச' நாளில் போடுவார்கள்.

பக்தி இலக்கியம், பக்தி/ புராண திரைப்படங்கள் மற்றும் பக்தி இசை இவை மூன்றும் தமிழகத்தில் தழைத்தோங்க அறிஞர்கள், கவிஞர்கள், விற்பன்னர்கள் மற்றும் பாடகர்கள் தம் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள் அந்த வகையில். பக்தி பாடல்கள் படுவதற்கென்றே இறைவன் படைத்த அபூர்வ குரல் பக்தி பாடகி திருமதி பெங்களூர் ஏ ஆர்  ரமணி அம்மாள் அவர்களுடையது.

"பொம்ம பொம்ம தா", "குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் ", "வேலவா வடி வேலவா", "நீங்கள் வாருமே", "பிள்ளையார் பிள்ளையார் " போன்ற மேலும் பல பாடல்கள் அவர் நமக்கு விட்டுச் சென்றுள்ளார். தைப்பூச திருவிழா இவர் பாடல்கள் இல்லாமல் நிறைவு பெறாது என்று சொல்வேன்.

"முருகனைப் பாடினால்...முக்தி அடையலாம்!
சிவனைப் பாடினால்...சித்தி அடையலாம்!!

நீங்கள் யாரைப் பற்றி வேண்டுமானாலும் பாடுங்கள், ஆனால் படாமல் மட்டும்
இருக்கவேண்டாம் என்று சொல்லாமல் சொல்லும் வரிகள்.

திருமதி பெங்களூர் ஏ ஆர் ரமணி அம்மாள் அவர்களை பற்றிய விக்கி பக்கங்கள் இல்லை. யாராவது தகவல்களை சேகரித்து பதிவேற்றினால் வரும் தலைமுறையினருக்கு பேருதவியாக இருக்கும்.


 
 
 
 
நன்றி:Youtube

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி    

Thursday, 13 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-81

'மழவில்காவடி'(1989)

'மழவில்காவடி' பெயரே கவிதையாக இருக்கிறதல்லவா! இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கிய இந்த படமும் அப்படித் தான் இருக்கும். காதல், நகைச்சுவை , குடும்பச் சென்டிமெண்ட் என அமர்க்களமாக இருக்கும். படம் பழனியில் நடப்பது போலக் கதை அமைக்கப்பட்டிருக்கும். 'மழவில்காவடி' படம் தான் தமிழில் இயக்குநர் / நடிகர்  ஆர் பாண்டியராஜன் நடித்து இயக்கிய 'சுப்ரமணியஸ்வாமி' என்ற பெயரில் தமிழில் வெளிவந்தது.

இயக்குநர் சத்யன் அந்திக்காடு படங்கள் எனக்குப் பிடிக்கும். குடும்பக் கதைகளை வித்தியாசமான கோணங்களில் சொல்வதில் மன்னர். படத்தினூடே இழையும் நகைச்சுவை இவர் முத்திரை. பெரிய கதாநாயகர்களும் இவர் படத்தில் நடிக்க விரும்புவார்கள். பெரிய நடிகர்களும் இவர் படத்தில் சாதாரண கதைமாந்தர்களாக உலா வருவார்கள்.

இவர் படத்தில் இன்னுமொரு சிறப்பம்சம் இசை. இசையமைப்பாளர்கள் ஜான்சன், ஒஷேப்பச்சன் அல்லது ராஜா சாராகட்டும் இனிமையான பாடல்களை கேட்டு வாங்கிவிடுவார்.

இயக்குநர் சத்யன் அந்திக்காடு - கதாசிரியர் /நடிகர் ஸ்ரீநிவாசன் கூட்டணி பல வெற்றிப் படங்களைத் தந்துள்ளது. 'மனசிங்க்கரே', 'ராசதந்திரம்', 'தூவல் கொட்டாரம்', 'பட்டினப்ரவேசம்', 'நாடோடிக்கற்று', 'வீண்டும் சில வீட்டுகார்யங்கள்','ஒராள்மாத்ரம்','ஸ்நேஹவீடு', 'பாக்யதேவதா','வினோதயாத்ரா' என இவர் இயக்கிய படங்கள் எனக்குப் பிடிக்கும்.

இசையமைப்பாளர் ஜான்சன் இசையில் 'மழவில்காவடி' படத்தில் இடம்பெற்ற "தங்கத்தோணி..." என்ற மெலடி பாடலை சென்னை தொலைக்காட்சியில் மாநில மொழி திரைப்படப்பாடல் நிகழ்ச்சியில் அடிக்கடி போடுவார்கள். சரி, வாங்க அந்த பாடலை கேட்போம்:





நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி   

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-80

திரு பி விட்டலாச்சார்யா

'மாயாஜால மன்னன்' எனப் போற்றப்படும் திரு பி விட்டலாச்சார்யா, கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழில் ஏராளமான படங்களை இயக்கியிருக்கிறார். இன்றைய தலைமுறை பிள்ளைகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இவரது இயக்கத்தில் என் டி ராமராவ் கதயநாகனாகப் பதிமூன்று படங்களுக்கு மேல் மற்றும் நாகேசுவர ராவ் சில படங்களில் நடித்துள்ளனர்.
     நரசிம்ம ராஜு 
       இன்றைய 
       தோற்றம்

பிறகு இவர் தனது தடத்தை மாற்றி 'ஆந்திர கமலஹாசன்' என்றைழைக்கப்பட்ட நடிகர் நரசிம்ம ராஜு மற்றும் அன்றைய 'கவர்ச்சி கன்னி' ஜெயமாலினி - யை வைத்து 'பி' மற்றும் 'சி' சென்டர் ரசிகர்களுக்குப் 'பேய்' பட ஜானரில் 'மோகினி சபதம்', 'ஜெகன் மோகினி', 'நவ மோகினி', 'கந்தர்வ கன்னி', 'மதன மஞ்சரி', 'வீர பிரதாபன்' என நிறையப் படங்களை இயக்கினார். இவர் எத்தனையோ படங்களை இயக்கியிருந்தாலும் 'ஜெகன் மோகினி' மிகப் பிரபலமான படம். VFX நன்கு வளராத அந்த காலகட்டத்தில், தனக்கு தெரிந்த சில யுக்திகளை வைத்து ரசிகர்களை பயமுறுத்தினார்.  நடிகர் நரசிம்ம ராஜு இப்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

எங்களூர் திரையரங்கில் அவ்வப்போது விட்டலாச்சார்யாவின் திரைப்படங்கள் வெளியாகும்.  கவர்ச்சியான ஜெயமாலினி படம் மற்றும் தலைவிரித்த கூந்தலுடன் 'பேய்' வெள்ளை உடை அணிந்த ஒருவர் அடுப்பிற்குள் காலை நீட்டி வைத்திருப்பது போலச் சுவரொட்டியில் காணப்படும். "ராஜன் ஹட்டன்" என்ற பெயரும் சுவரொட்டியில் ஓரமாக அச்சடித்து இருக்கும், அவர் யாரென்று தெரியவில்லை, ஒரு வேலை விட்டலாச்சார்யாவின் படங்களைத் தமிழில் வெளியிட்ட தயாரிப்பாளரோ என்னவோ ?

சில சமயங்களில் தனியார் தொலைக்காட்சியில் மேலே சொன்ன படங்கள் ஒளிபரப்பாகும். இப்போது பார்க்கும் போது கொஞ்சம் செயற்கையாக இருந்தாலும், அன்றைய ரசிகர்களுக்கு அது போதுமானதாக இருந்தது போலும்.

சரி நண்பர்களே, உங்களுக்குப் பிடித்த விட்டலாச்சார்யா-வின் படத்தைப் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.


நன்றி: Google

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி