Wonderful Shopping@Amazon

Showing posts with label #எஸ்ஜானகி #எஸ்ஜானகிபாடல்கள் #ஜானகிஅம்மா #SJanaki# SJanakiSongs #SJanakiAmma #SJanakiVoice. Show all posts
Showing posts with label #எஸ்ஜானகி #எஸ்ஜானகிபாடல்கள் #ஜானகிஅம்மா #SJanaki# SJanakiSongs #SJanakiAmma #SJanakiVoice. Show all posts

Monday, 7 September 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-102

'ராஜபார்வை'(1981) -'61 Years of Kamalism' 

நூறாவது படம் நடிகர்களுக்குப் வெற்றிப் படங்களாக அமைந்தது இல்லை. வெகுஜன படங்களிலிருந்து விலகி கமல் புதிய விஷயங்களை பரிசார்த்த முறையில் செய்ய ஆரம்பித்த முதல் படம் 'ராஜபார்வை'. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் வெளியான படம். படம்  சுமாராக இருந்தாலும், ' அபூர்வ சகோதரர்கள்', 'குணா','குருதிப்புனல்', 'ஹே ராம்' போன்ற சிறந்த படங்கள் வர ஆரம்பப் புள்ளியாக இருந்தது 'ராஜபார்வை'. கமலின் சினிமா மொழியில் சொல்வதென்றால் ''எனக்கான உணவை நான் சமைத்துக்கொள்கிறேன் ..".

ஸ்ரீதேவிக்கு பிறகு கமல் - மாதவி ஜோடி பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளது. எண்பதுகளின் கவர்ச்சி கன்னி மாதவி. மாதவி படம் அச்சிட்டு வந்த விமல் கம்பெனி காலண்டர் இன்னும் நினைவிருக்கிறது. மாதவியின்  கண்கள் அப்பப்பா...என்ன ஓர் பாவகங்கள். மாதவி என்று பெயருடையவர்கள் எல்லாம் இப்படி தான் இருப்பார்களோ ?

'ராஜபார்வை' என்றாலே உங்களுக்கு நினைவுக்கு வருவது 'பாடும் நிலா' மற்றும் ஜானகி அம்மாள் பாடிய, கவிஞர் வைரமுத்து எழுதிய  "அந்திமழை பொழிகிறது ..."  பாடல்.  

ராஜா சாரின் இசையை என்னவென்று சொல்வது ! எப்படி இந்த பாடலை உருவாக்கினார் ? வியப்பு மேலிடுகிறது. பருவ காலங்களுக்கேற்ப மாறி மாறி ஒலிக்கும் இசை, பாடல் இடை இடையே வரும் ராஜா சாரின் குரு திரு டி வி கோபாலகிருஷணன் அவர்களின் ஹம்மிங், வயலின், கோரஸ், முக்கியமாக  அந்த மிருதங்க ஆலாபனை எனக் கிட்டத்தட்ட ஒரு பியுசன் ஜுகள்பந்தி இசை இந்த பாடல். நிமிடத்தில் இசை மகாத்மியம்  நடத்தியிருப்பார் ராஜா.

எனக்குச் சங்கீதம் ஞானம் இல்லை. இரண்டு ராகங்களை இணைத்து உருவாக்கிய பாடல் என நண்பர் சொன்னார்.  நிச்சயம் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் இந்த இசை பல நாள் உங்கள் இதயத்தை ஆக்கிரமிக்கும் 

"நெஞ்சுபொறு கொஞ்சமிரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்"

மேற்சொன்ன பாடல் வரிகளில் வரும் ஜானகி அம்மாவின் குரலில் வரும் குழைவு, பின் வரும் ஆலாபனை 'வாவ்' ராகம்.

எது எப்படி இருந்தாலும் ஒளிப்பதிவாளர் முகர்ஜியின் கேமரா ஜாலங்கள் மற்றும் கமல் மாதவி காதல்ரச காட்சிகள், 'ராஜபார்வை' படத்தை இன்றும் புதுத்தன்மை மாறாமல் காத்து வருகிறது.




நன்றி:Youtube 

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி 
 

 

Saturday, 22 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-90

வட்டத்துக்குள் சதுரம்(1978)

பாட்டைக் கேட்டுக் கலங்குபவர்கள் உண்டா ?

எங்கள் வீட்டில் அப்படி ஒரு நபர் உண்டு. அவள் என் அக்கா.

என்னுடைய மூத்த சகோதரி ரொம்ப எமோஷனல் சுபாவம். அவருக்கு ஒரு நெருங்கிய தோழி இருந்தார். எங்கள் பெரியப்பா வீட்டுக் காம்பௌண்டில், பக்கத்து வீட்டுக்குக் கோடை விடுமுறையில் அவர் வருவார். அவள் வரவு அக்காவுக்கு மிகுந்த உற்சாகம் தரும். சாப்பிடுவது, தூங்குவது தவிர, அக்காவும் அவரும் ஒன்றாக விளையாடுவது, குளத்தங்கரைக்குத் துணி துவைக்கப் போவது, கோவிலுக்குப் போவது என ஒரு மாதம் ஒன்றாக இருப்பார்கள். எப்போதும் தொண, தொணவென்று பேசிக்கொண்டே இருப்பார்கள். என்ன பேசுகிறார்கள் என்றே தெரியாது. அடிக்கடி சிரித்துக்கொள்வார்கள். அவள் விடுமுறை முடிந்து ஊருக்குச் சென்ற அடுத்த மூன்று நாளுக்கு அக்கா 'உம்மென்று' இருப்பாள். சகஜ நிலைக்குத் திரும்பச் சில நாட்கள் ஆகும்.

பிறகு ஒரு நாள், பக்கத்துக்கு வீட்டுக் குடும்பமும் காலி செய்துகொண்டு போய்விட, பிறகு தொடர்பு விட்டுப் போனது. எப்போதாவது அவளுடைய தோழியைப் பற்றிக் கேட்டால், சோகமாகிவிடுவார்.

நான் இரண்டு பாடலுக்கு எமோஷனல்-ஆவதுண்டு 

ஒன்று :

"அங்கஜூனி கண்ண ம  யன்ன  யது  ரா ரா 
பங்காரு  கிண்னெலோ  பாலு போசேரா  |

எம்எஸ் அம்மா பாடிய 'அன்னமாச்சார்யா' கீர்த்தனையான "ஜோ அச்சுயுதாந்தா..." பாடலில் வரும் மேற்சொன்ன வரிகள் கேட்கும்போது காரணம் தெரியாமல் நானும் கலங்குவதுண்டு. 

இரண்டு :

எல் ஆர் ஈஸ்வரி அம்மா பாடிய  "கருணை உன்னால் கொண்டவளே கருமாரியம்மா .." என்ற பாடலை கேட்கும்போதும் அப்படி தான்.

தெய்வீக குரல் என்று சொல்வார்களே அது தானோ என்னவோ......

சரி விசயத்துக்கு வருவோம்.... சமீபத்தில் அக்காவிடமிருந்து எனக்குத் தொலைப்பேசி அழைப்பு, அக்காவின் அந்தத் தோழி தொலைப்பேசி எண்ணைத் தேடிக் கண்டுபிடித்துப் பேசியதாக உற்சாகமாகச் சொன்னாள். இந்தத் தொழினுட்ப யுகத்தில் யாரையும், உலகின் எந்த மூலையிலிருந்தாலும் கண்டுபிடிக்கலாம் என்பது அக்காவுக்குத் தெரியாது போல..

நீண்ட கால நட்பைப் பெண்கள் தொடருவது அரிதான ஒன்று. என்னுடன் ஒரே பள்ளியில் பத்து வருடம் எல் கே ஜி முதல் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த என்னுடைய வகுப்பு நண்பர்-நண்பிகளையும் பல சிரமங்களுக்கிடையே தேடிக் கண்டுபிடித்து வாட்ஸாப்ப் குழுவில் இணைத்துள்ளேன். தோழிகள் ஒருவரை ஒருவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சந்தித்துக்கொள்ளும் அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர்கள் எனக்கு நன்றி சொல்லும்போதே தெரிகிறது. வகுப்பில் ஒன்றாக இருப்பது போல ஒரு பீல் கிடைக்கிறது. சென்ற வருடம் செப்டம்பரில் சந்திப்பு விழா நடைபெற்றது மறக்கமுடியாத அனுபவமாயிற்று. கொரோனா காலத்தில் இந்த வருடம் சந்திப்பு விழா நடத்தமுடியும் என்று தெரியவில்லை. இன்னும் கூடப் பல நண்பர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

அக்காவைக்  கலங்கவைத்த  அந்தப் பாடல், இயக்குநர் எஸ் பி முத்துராமன் அவர்கள் இயக்கிய 'வட்டத்துக்குள் சதுரம்' படத்தில் திரு பஞ்சு அருணாச்சலம் எழுதி, ராஜா சார் இசையமைத்த ஜானகி, சசிரேகா மற்றும் உமாதேவி ஆகியோர் பாடிய பாடலான "இதோ இதோ என் நெஞ்சிலே ".
 


நன்றி:Youtube
 
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி 

Monday, 3 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-76


தமிழ் சினிமாவின் Best Onscreen Couple யார் ?

கரெக்ட்! சரியாக சொன்னீர்கள்.

ரேவதி, கார்த்திக் - இது தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் ஜோடி! ஆனால் நான்கு படங்களுக்கு மேல் நடிக்கவில்லை, 'இதயத்தாமரை', 'கிழக்குவாசல்' மற்றும் 'தெய்வவாக்கு'. 'மௌனராகம்' படத்தில் சில மணித்துளிகளே வரும் கார்த்திக் அப்போதைய ஹாட் அட்டரக்ஷன். என் நண்பன் ஒருவன் கார்த்திக் ரசிகன், கார்த்திக் போல மேனரிஸங்களைச் செய்யக் கற்றுக்கொண்டு அலப்பறை செய்வான். நோட்டுப் புத்தகத்தில் நாளிதழில் கத்தரித்த கார்த்திக் படத்தை ஒட்டி வைத்திருப்பான். நான் வியப்பாகப் பார்ப்பேன். காரணம் நான் தலைவர் ரசிகன்.

'இதயத்தாமரை' படம் சுமாராக இருந்தாலும் பாடல்கள் பேசப்பட்டது. சென்னை வானொலி மற்றும் விவிதபாரதியில் "ஒரு காதல் தேவதை ..." பாட்டு ஒளிபரப்பாகாத நாளே இல்லை எனலாம். ரீல் அந்து போகும் வரை ஒளிபரப்பினார்கள்.

இதே ஜோடி நடித்த இன்னொரு படம் 'கிழக்குவாசல்'. இயக்குநர் ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் வந்த இப்படம் வெள்ளிவிழா கண்டது. "பச்சமலை பூவு...." என்ற இயக்குநர் எழுதிய அருமையான பாடல் உண்டு. ரேவதி சிறப்பாக நடித்திருப்பார். ரேவதியைச் சுற்றிக் கதை நடப்பதுபோலத் திரைக்கதை அமைத்திருப்பார் இயக்குநர். நானும் மேலே சொன்ன அதே 'கார்த்திக்' ரசிக நண்பனும் சேர்ந்து திரையரங்கில் பார்த்த படம். இந்தப் படத்திலும் எல்லாப் பாடல்களும் பிரபலம் மற்றும் படத்தின் ஆகபெரும்பலம் படத்தினூடே பயணிக்கும் ராஜா சாரின் பின்னணி இசை உயிரோட்டமாக அமைந்தது.

கடைசியாக இருவரும் நடித்த படம் 'தெய்வவாக்கு'. படம் சுமாராக ஓடினாலும் ராஜா சார், ஜானகி அம்மா அவர்கள் பாடிய "வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்" என்ற பாடல் எவர்க்ரீன் ஹிட். இன்றும் கேட்கக்கூடிய இனிமையான பாடல் இதோ உங்கள் செவிகளுக்கு :





நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி      

Wednesday, 8 July 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-68


'நாடோடி தென்றல்'(1992)

எப்போதுமே பாடல் வரிகள் தான் முத்தி செல்லும், பின்பு தான் இசை வரும். இதிலும் ஒர் அற்புத வரி உண்டு "கண்ணிமைகளை வருத்தி.., கனவுகளைத் துரத்தி.." பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த காலமது.

ராஜா சார் பாடலை துவக்கிவைக்க, பாடல் ஆரம்பத்தில் ஷெனாய் (ஷெனாய் இசை கருவியை தனது பாடல்களில் அதிகம் பயன்படுத்தியவர் ராஜா), அதைத் தொடர்ந்து 'சல', 'சல'-வென வயலின், பின்பு புல்லாங்குழல் இசைக்கருவிகள் நம்மை வரவேற்கும், மனோ பாட, பின்பு ஜானகி அம்மா உள்ளே வருவார். பாடல் சீரான வேகத்தில் பயணிக்கும்.

'நாடோடி தென்றல்' எங்கள் ஊர் திரையரங்கில் நண்பர்களுடன் பார்த்த படம். பெரிய எதிர்பார்ப்புடன் சென்ற ஏமாற்றமே மிஞ்சியது. ''யாரும் விளையாடும் தோட்டம்'', ''மணியே மணிக்குயிலே'', ''சந்தன மார்பிலே'' போன்ற பாடல்கள் அனைத்தும் அப்போது பிரபலமடைந்தது. ஆடியோ கேசட் கூட மஞ்சள் நிற தடிமனான காகிதத்தில் படப் பெயர் அச்சிட்டு வந்தது ஞாபகம் இருக்கிறது. இந்தப் படத்தில் பாடகி மால்குடி சுபா பாடிய "All The Time" என்ற ஆங்கிலப் பாடலும் உண்டு.

இரவு கேட்கக்கூடிய ராஜாவின் பாடல் வரிசையில் இந்தப் பாடல் நிச்சயம் இடம்பெறும். அந்தப் பாடலை நீங்களும் கேளுங்களேன் :







நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி     

 



Thursday, 2 July 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-63


'புதுப் புது அர்த்தங்கள்' (1989)

பெரிய ஸ்டார் காஸ்ட் (நடிகர்கள்) இல்லாமல், கதையையே நம்பி படம் எடுக்கும் இயக்குநர் சிகரம் கே பாலசந்தர். அவருடைய பழைய படங்களைப் பார்த்தோமானால் தெரியும், கதை தான் பிரதானமாக விளங்கும் மற்றும் அவருடைய டச். 'தாமரை நெஞ்சம்' என்ற அவருடைய பழைய படத்தில் 'திக்', 'திக்' கிளைமாக்ஸ் காட்சி வைத்திருப்பார், ஒரு காதல கதையில் 'திக்', 'திக்' கிளைமாக்ஸ் என்ற புதுமையைப் புகுத்தியவர் கே பாலசந்தர். அதே போல 'நூற்றுக்கு நூறு', 'புன்னகை',' இருகோடுகள்','பாமா விஜயம்' மற்றும் 'அனுபவி ராஜா அனுபவி', 'எதிரொலி', (கே பி இயக்கத்தில் சிவாஜி நடித்தே ஒரே படம்) 'தண்ணீர் தண்ணீர்', 'அச்சமில்லை அச்சமில்லை' , 'வறுமையின் நிறம் சிகப்பு' போன்ற படங்களை இப்போதும் நீங்கள் பார்க்கலாம். காட்சிக்குக் காட்சி சுவாரஸ்யம் அதான் இயக்குநர் சிகரம் கே பி.

1989-ஆம் ஆண்டுத் தீபாவளி அன்று பெரிய நடிகர் படத்தோடு 'புது புது அர்த்தங்கள்', நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரகுமான் கதாநாயகனாக மற்றும் கீதா, சித்தாரா, விவேக் நடித்து வெளியானது. அப்படியே சத்தமில்லாமல் ஓடி வெள்ளிவிழா கண்டது. இதில் பூர்ணம் விஸ்வநாதன்-சௌகார் ஜானகி வரும் அந்தக் குட்டி எபிசோட் எனக்குப் பிடிக்கும்.இயக்குநர் சிகரம் கே பாலசந்தர் - இளையராஜா இணைந்து பணியாற்றிய கடைசிப் படம். பின்னணி இசை கூட அவர் இசைக்கவில்லை என்று கேள்வி.

எல்லாப் பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்கும் வகையில் அமைந்தது. குறிப்பாகக் 'கல்யாண மாலை' இன்று வரை எல்லா இடங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நீங்களும் அந்தப் பாடலை கேளுங்களேன்:




நன்றி: Youtube

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி     





Friday, 20 December 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-41

குங்குமச்சிமிஷ் (1985)

மோகன்-ராஜா சார் இணை "சங்கீத மேகம்", "பருவமே", "கடலோரம் வீசும் காற்று", "இளையநிலா" போன்ற எத்தனையோ அருமையான பாடல்கள் தந்திருக்கின்றனர். இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கி, மோகன், இளவரசி, மற்றும் ரேவதி நடித்த "குங்குமச்சிமிஷ்" படத்தில் இடம்பெற்ற "நிலவு தூங்கும்.." என்ற மனதை வருடும் பாடலும் அதுபோல ஒன்று தான். படம் வந்த புதிதில் இந்தப் பாடல் சென்னை தூர்தர்ஷன், இலங்கை வானொலி, சென்னை வானொலி, விவிதபாரதியின் வர்த்தக ஒளிபரப்பு நிகழ்ச்சி, கல்யாண, காதுகுத்து, திருவிழா கச்சேரி என எல்லா இடத்திலும் ஒலித்து "கிறுகிறுக்க" வைத்தது. எளிய இசைக்கோர்வை, பாடல் ஆரம்பத்தில் வரும் மவுத்தார்கன் இசைத் துணுக்குக் கொஞ்சம் கவனிக்க வைக்கும். தூக்கம் வரவில்லையா..? இந்தப் பாடலை கேளுங்கள் பாடல் முடிவதற்குள் தூங்கியிருப்பீர்கள்.

இதே படத்தில் மலேசிய வாசுதேவன் மற்றும் ஜானகி அம்மா பாடிய "கூட்ஸு வண்டியிலே.." என்ற இன்னொரு பாடலும் உண்டு. அப்போதிருந்த Special Effects வசதியை வைத்து இப்பாடலைச் சிறப்பாகப் படமாகியிருப்பார் இயக்குநர்.



நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          
 

Tuesday, 22 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-19

உயிரே உனக்காக (1986)

 இயக்குநர்க் கே ரங்கராஜ் இயக்கி, வெள்ளிவிழா நாயகன் நடித்த மற்றொரு படம் "உயிரே உனக்காக". ஒரு மாற்றத்துக்கு வேண்டி இந்தப் படத்துக்கு இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-பியரிலால் இசையைத் தமிழுக்குக் கொண்டுவந்திருப்பார் தயாரிப்பாளர் திரு. கோவை தம்பி. இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-பியரிலால் இசை எனக்குப் பிடிக்கும். அவர்களுடைய இசை ரகளையாக இருக்கும். "ஆரிராரோ.. ஆரிராரிரோ.....தேனுரும் ராகம் ", "பல்லவி இல்லாமல் பாடுகிறேன்", "பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க" போன்ற பாடல்களை அனைத்தும் அருமையாக இருக்கும். எனக்குப் பிடித்த பாடல் ஜானகி அம்மா பாடிய "பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்லச் சிரிக்க". சற்றே பெரிய பாடல். புல்லாங்குழல் ராகம் எடுத்துத் தர, குயில்கள் கிச்சு... கிச்சு..அப்படியே ஜானகி உள்ளே வருவார். பாடல் முழுதும் பல வித கருவிகளை ஒலிக்கவிட்டு ஜுகள் பந்தி போல, அட்டகாசமாக இசையமைத்திருப்பார்கள் இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-பியரிலால்.

"நிலவும் நீரும் இந்த அழகுச் சோலையும் எளிமையான அந்த இறைவன் ஆலயம்....." வரிகளுக்குப் பிறகு வரும் அந்தக் கோரஸ்.......கொஞ்சம் அமைதி... பின்பு ஜானகி பாடலை முடித்துவைப்பார். நீங்களும் அந்தப் பாடலை கேளுங்களேன்:




நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி            


Tuesday, 24 September 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம் - 13

மோகமுள் (1995)
 
எழுத்தாளர் தி ஜானகிராமன் எழுதிய புகழ்பெற்ற புதினம் "மோகமுள்".                  தி ஜானகிராமனின் மிக அற்புதமான படைப்பு என இது இன்றளவும் போற்றப்படுகிறது. ஞான ராஜசேகரன் இயக்கி, சின்னத்திரை நடிகர் அபிஷேக் (கதாநாயகன்), விவேக், நெடுமுடிவேணு மற்றும் வெ ஆ மூர்த்தி நடித்து 1995. - ஆம் ஆண்டு திரைப்படமாக வெளிவந்தது.  ஒரு மாலை காட்சி தேவிகலா திரையரங்கில் பார்த்தேன். என்னோடு சேர்த்து சுமார் 15. பேர் மட்டுமே திரையரங்கில். அப்பவே நல்ல படத்துக்கு இ(ரு)ந்த மவுசு.  கொஞ்சம் மெதுவாக நகரும் யதார்த்தமான படம்.  கதையினூடே பயணிக்கும்  ராஜாவின் பின்னணி இசை படத்துக்கு பெருந்துணை.

கதைக்குள் செல்லவேண்டாம். மோகமுள் படத்தில் K.J. யேசுதாஸ் அவர்கள் பாடிய "கமலம் பாத கமலம்" என்ற மனதை கவரும் அருமையான பாடல் உள்ளது. இதோ அந்த பாடலை கேட்டு பாருங்கள்





நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி

ஒரு முறை நிகழும் மாயாஜாலம் -11

அரண்மனை கிளி(1993)
ஜானகி அம்மா தனியாகப் பாடிய எத்தனையோ பாடல்கள் உண்டு. அதில் எனக்குப் பிடித்த மெல்லிசை பாடல். "ராசாவே உன்னை விட மாட்டேன், என்ன ஆனாலும் வெட்கம் விட மாட்டேன்"

இந்தப் பாடலை அத்தனை அழகாக, கண்ணுக்குக் குளிர்ச்சியாகப் படமாக்கிய இயக்குநரை என்ன வென்று சொல்வது.  சீரான வேகத்தில் புல்லாங்குழல் இசை முதல் சரணத்தை வழி நடத்திச் செல்லும். பிறகு இரண்டாவது சரணத்துக்கு முன் வரும் அந்த நிரவல் அருமை.

எப்போதும் ராஜ்கிரண் என்றால் ராஜாவுக்கு ஸ்பெஷல் போலும், வெளியான முதல் நாளில் பார்த்த படம் "அரண்மனை கிளி". படத்தில் எல்லாப் பாடல்களும் அருமையாக இருக்கும். இரவில் கேட்கக்கூடிய பாடல் வரிசை பட்டியலில் இந்தப் பாடல் உண்டு. இதோ அந்த பாடலை கேட்டு ரசியுங்கள்



நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி

Friday, 5 June 2015

சமீபத்தில் நான் பார்த்த சில படங்கள்


சமீபத்தில் நான் பார்த்த சில படங்கள்…


கோடை விடுமுறை, மனைவி, குழந்தைகளோடு அம்மா வீடு போயிருக்க... நீண்ட நாட்களாய் மேஜை மீது குவிந்து கிடந்த குறுந்தகடுகள். தினம் ஒவ்வொரு படமாய் பார்க்க, இதொ அந்த‌ பட்டியல்....



டைமன்ட் நெக்லஸ் (1): கருப்பொருள்: வைர‌நெக்லஸ் கடனை அடைக்க அதை திருடும் டாக்டர் (நாயகன்), அதனால் ஏற்படும் மனப்போராட்டம், வலைகுடா வாழ்க்கை சூழல், நாயகன் சந்திக்கும் மூன்றூ பெண்கள், என கலந்துகட்டி விருந்து படைக்கிறார் இயக்குனர் லால் ஜோஸ்.

புது புது அர்த்தங்கள் (2): மனைவி தொல்லை தாளாமல் கோவாவுக்கு ஓடி போகும் நாயகன், அங்கு சந்திக்கும் புது காதலி மற்றூம் முதிய தம்பதிகள். மீண்டும் மனைவியுடன் சேர்ந்தானா என்பதே மீதி கதை.  பூர்ணம் விஸ்வநாதன்‍ செளகார் ஜானகி எபிசோட் அருமை. முதல்/கடைசி ரீல் வரை சுவாரஸ்யமாக இயக்கியிருப்பார் திரு கே.பி அவர்கள். ராஜாவின் பின்னனி இசை மற்றூம் பாடல்கள் முக்கிய அம்சம்.

தி க்ரேட் எஸ்கேப் (3): அடிக்கடி பார்க்கும் படம்.  1963ஆம் ஆண்டு வந்த ஆங்கிலப்படம். இரண்டு மணீ 53 நிமிடங்கள் ஒடும் படம்.விறூ விறூ திரைக்கதை. ஜெய்லிலுருந்து தப்பிக்க திட்டம் போடும் போரில் பிடிபட்ட
எதிரி நாட்டு ராணூவ வீரர்கள். அதன்படி சுரங்கம் அமைத்து தப்பிக்கும் அவர்களை தேடி கண்டுபிடித்து ஜெர்மனி நாஜி படை கொல்லும் அந்த கடைசி ஒரு மணீ நேரப்படம், நிச்சயம் உங்கள் மனதில் நீண்ட நாட்கள் நிற்கும்.

கடலோரக் கவிதைகள் (4): அழகிய முட்டம் கடற்கரை கிராமத்தில் நடக்கும் கதை. கடலும் ஒரு கேரக்டர். சின்னப்பதாஸீன் காதலுக்கு பின்/காதலுக்கு முன் வாழ்க்கை தான் படம். கடைசி 15 நிமிட படம் அற்புதமான பின்னனி இசையால் முடித்திருப்பார் ராஜா சார்.
 
லூசியா (5):  கன்னடதில் எனக்கு பிடித்த படம்.  படத்தை பற்றீ எப்படி எழுதுவது என்றூ தெரியவில்லை, அனால் நிச்சயம் ஒரு பரவச அனுபவம் கேரன்டி.

அத்தாரின்டிக்கி தாரேதி (6): இயக்குனர் திருவிக்ரம் சீனிவாஸீன் ஸ்டைலிஷ் மேக்கிங். குடும்ப உறவுகளீன் மேன்மை பற்றீய கதை. இனிமையான பாடல்கள், ப்ராம்மியின் காமெடி தர்பார், பீட்டர் ஹைனின் ஸ்டன்ட் வித்தியாசமான‌ கோரியோகிராபி, என நீங்கள் விரும்பும் அத்தனையும் உண்டு இப்படத்தீல். 

சீத்தம்மா வாகிட்லோ சிரிமல்லி சேட்டு (7): காமெடி இல்லை, சண்டை காட்சிகள் இல்லை, படம் முழுதும் சென்டிமென்ட்,சென்டிமென்ட், சென்டிமென்ட், பெரிய நடிகர்ளை லாவகமாக கையாண்ட இயக்குனர் சிரிகாந்த் அட்டால வின் நேர்த்தியை என்னவென்றூ சொல்வது!

இது நம்ம ஆளூ & வேதம் புதிது (8):  27 வருடங்லுக்கு முன் குரு, சிஷ்யன் இயக்கிய படங்கள் இன்றய காலகட்டத்தில், இது போன்ற படங்கள் வருமா………… சந்தேகம்தான்...........!

கஹானி (9): சுஜாய் கோஷ் இயக்கிய த்ரல்லர், வீறூ வீறூ திரைக்கதை, வித்யாபாலனின் அனாயாசமான நடிப்பு, இரவு நேர கொல்கத்தா நகரின் அழகு,   கடைசி நிமிடம் வரை, யுகிக்க முடியாத முடிவு என வலுசேர்க்கும் அம்சங்ள்.


இரு கோடுகள், 100/100, வெள்ளீ விழா (10): குணசித்திர நடிகர்களை வைத்து திரு கே.பி அவர்கள் இயக்கிய‌ வெற்றீ படங்கள். இப்போது பார்த்தாலும் அலுக்காத படங்கள் இவை.
 
                                                                                                                              - காலிகபாலி