Wonderful Shopping@Amazon

Friday 5 June 2015

சமீபத்தில் நான் பார்த்த சில படங்கள்


சமீபத்தில் நான் பார்த்த சில படங்கள்…


கோடை விடுமுறை, மனைவி, குழந்தைகளோடு அம்மா வீடு போயிருக்க... நீண்ட நாட்களாய் மேஜை மீது குவிந்து கிடந்த குறுந்தகடுகள். தினம் ஒவ்வொரு படமாய் பார்க்க, இதொ அந்த‌ பட்டியல்....



டைமன்ட் நெக்லஸ் (1): கருப்பொருள்: வைரநெக்லஸ் கடனை அடைக்க அதை திருடும் டாக்டர் (நாயகன்), அதனால் ஏற்படும் மனப்போராட்டம், வலைகுடா வாழ்க்கை சூழல், நாயகன் சந்திக்கும் மூன்றூ பெண்கள், என கலந்துகட்டி விருந்து படைக்கிறார் இயக்குனர் லால் ஜோஸ்.

புது புது அர்த்தங்கள் (2): மனைவி தொல்லை தாளாமல் கோவாவுக்கு ஓடி போகும் நாயகன், அங்கு சந்திக்கும் புது காதலி மற்றூம் முதிய தம்பதிகள். மீண்டும் மனைவியுடன் சேர்ந்தானா என்பதே மீதி கதை.  பூர்ணம் விஸ்வநாதன்செளகார் ஜானகி எபிசோட் அருமை. முதல்/கடைசி ரீல் வரை சுவாரஸ்யமாக இயக்கியிருப்பார் திரு கே.பி அவர்கள். ராஜாவின் பின்னனி இசை மற்றூம் பாடல்கள் முக்கிய அம்சம்.

தி க்ரேட் எஸ்கேப் (3): அடிக்கடி பார்க்கும் படம்.  1963ஆம் ஆண்டு வந்த ஆங்கிலப்படம். இரண்டு மணீ 53 நிமிடங்கள் ஒடும் படம்.விறூ விறூ திரைக்கதை. ஜெய்லிலுருந்து தப்பிக்க திட்டம் போடும் போரில் பிடிபட்ட
எதிரி நாட்டு ராணூவ வீரர்கள். அதன்படி சுரங்கம் அமைத்து தப்பிக்கும் அவர்களை தேடி கண்டுபிடித்து ஜெர்மனி நாஜி படை கொல்லும் அந்த கடைசி ஒரு மணீ நேரப்படம், நிச்சயம் உங்கள் மனதில் நீண்ட நாட்கள் நிற்கும்.

கடலோரக் கவிதைகள் (4): அழகிய முட்டம் கடற்கரை கிராமத்தில் நடக்கும் கதை. கடலும் ஒரு கேரக்டர். சின்னப்பதாஸீன் காதலுக்கு பின்/காதலுக்கு முன் வாழ்க்கை தான் படம். கடைசி 15 நிமிட படம் அற்புதமான பின்னனி இசையால் முடித்திருப்பார் ராஜா சார்.
 
லூசியா (5):  கன்னடதில் எனக்கு பிடித்த படம்.  படத்தை பற்றீ எப்படி எழுதுவது என்றூ தெரியவில்லை, அனால் நிச்சயம் ஒரு பரவச அனுபவம் கேரன்டி.

அத்தாரின்டிக்கி தாரேதி (6): இயக்குனர் திருவிக்ரம் சீனிவாஸீன் ஸ்டைலிஷ் மேக்கிங். குடும்ப உறவுகளீன் மேன்மை பற்றீய கதை. இனிமையான பாடல்கள், ப்ராம்மியின் காமெடி தர்பார், பீட்டர் ஹைனின் ஸ்டன்ட் வித்தியாசமான‌ கோரியோகிராபி, என நீங்கள் விரும்பும் அத்தனையும் உண்டு இப்படத்தீல். 

சீத்தம்மா வாகிட்லோ சிரிமல்லி சேட்டு (7): காமெடி இல்லை, சண்டை காட்சிகள் இல்லை, படம் முழுதும் சென்டிமென்ட்,சென்டிமென்ட், சென்டிமென்ட், பெரிய நடிகர்ளை லாவகமாக கையாண்ட இயக்குனர் சிரிகாந்த் அட்டால வின் நேர்த்தியை என்னவென்றூ சொல்வது!

இது நம்ம ஆளூ & வேதம் புதிது (8):  27 வருடங்லுக்கு முன் குரு, சிஷ்யன் இயக்கிய படங்கள் இன்றய காலகட்டத்தில், இது போன்ற படங்கள் வருமா………… சந்தேகம்தான்...........!

கஹானி (9): சுஜாய் கோஷ் இயக்கிய த்ரல்லர், வீறூ வீறூ திரைக்கதை, வித்யாபாலனின் அனாயாசமான நடிப்பு, இரவு நேர கொல்கத்தா நகரின் அழகு,   கடைசி நிமிடம் வரை, யுகிக்க முடியாத முடிவு என வலுசேர்க்கும் அம்சங்ள்.


இரு கோடுகள், 100/100, வெள்ளீ விழா (10): குணசித்திர நடிகர்களை வைத்து திரு கே.பி அவர்கள் இயக்கியவெற்றீ படங்கள். இப்போது பார்த்தாலும் அலுக்காத படங்கள் இவை.
 
                                                                                                                              - காலிகபாலி

No comments:

Post a Comment