'புதுப் புது அர்த்தங்கள்' (1989)
பெரிய ஸ்டார் காஸ்ட் (நடிகர்கள்) இல்லாமல், கதையையே நம்பி படம் எடுக்கும்
இயக்குநர் சிகரம் கே பாலசந்தர். அவருடைய பழைய படங்களைப் பார்த்தோமானால்
தெரியும், கதை தான் பிரதானமாக விளங்கும் மற்றும் அவருடைய டச். 'தாமரை
நெஞ்சம்' என்ற அவருடைய பழைய படத்தில் 'திக்', 'திக்' கிளைமாக்ஸ் காட்சி
வைத்திருப்பார், ஒரு காதல கதையில் 'திக்', 'திக்' கிளைமாக்ஸ் என்ற
புதுமையைப் புகுத்தியவர் கே பாலசந்தர். அதே போல 'நூற்றுக்கு நூறு',
'புன்னகை',' இருகோடுகள்','பாமா விஜயம்' மற்றும் 'அனுபவி ராஜா அனுபவி',
'எதிரொலி', (கே பி இயக்கத்தில் சிவாஜி நடித்தே ஒரே படம்) 'தண்ணீர்
தண்ணீர்', 'அச்சமில்லை அச்சமில்லை' , 'வறுமையின் நிறம் சிகப்பு' போன்ற
படங்களை இப்போதும் நீங்கள் பார்க்கலாம். காட்சிக்குக் காட்சி சுவாரஸ்யம்
அதான் இயக்குநர் சிகரம் கே பி.
1989-ஆம் ஆண்டுத் தீபாவளி அன்று பெரிய நடிகர் படத்தோடு 'புது புது அர்த்தங்கள்', நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரகுமான் கதாநாயகனாக மற்றும் கீதா, சித்தாரா, விவேக் நடித்து வெளியானது. அப்படியே சத்தமில்லாமல் ஓடி வெள்ளிவிழா கண்டது. இதில் பூர்ணம் விஸ்வநாதன்-சௌகார் ஜானகி வரும் அந்தக் குட்டி எபிசோட் எனக்குப் பிடிக்கும்.இயக்குநர் சிகரம் கே பாலசந்தர் - இளையராஜா இணைந்து பணியாற்றிய கடைசிப் படம். பின்னணி இசை கூட அவர் இசைக்கவில்லை என்று கேள்வி.
எல்லாப் பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்கும் வகையில் அமைந்தது. குறிப்பாகக் 'கல்யாண மாலை' இன்று வரை எல்லா இடங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நீங்களும் அந்தப் பாடலை கேளுங்களேன்:

நன்றி: Youtube
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி

Known for out of the box thinking, KB, stuns us with non linear movies which empowers heroine..
ReplyDelete