திருவிளையாடல்(1965)
எங்கள் தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் 'விநாயகர் சதுர்த்தி விழா' ஒரு வாரம் சிறப்பாகக் கொண்டாடுவர். விநாயகர் சதுர்த்தி தொடங்க நான்கு நாட்களுக்கு முன்னரே பந்தல், சீரியல் செட் மற்றும் கூம்பு வடிவ ஒலிபெருக்கியில் பாட்டு போட்டு தெருவை அலறவிடுவார்கள். முதல் நாள் 'திருவிளையாடல்' பட 'ஒலிச்சித்திரம்' தவறாமல் இடம்பெறும். வீட்டிலிருந்தபடியே மக்கள் ஆர்வமாகக் கேட்பார்கள். படம் பார்த்தவர்கள் மனதில் காட்சிகளாய் விரியும்.
விழா கடைசி நாளில் வெண்திரை கட்டி படம் காட்டுவார்கள் அதில் 'திருவிளையாடல்', 'பெரிய இடத்துப் பெண்' மற்றும் 'எங்கள் வீடு பிள்ளை' படங்களைப் போடுவார்கள். இப்படி தான் 'திருவிளையாடல்' திரைப்படம் என் வாழ்க்கையில் அறிமுகமானது. பிறகு சென்னை தொலைக்காட்சியிலும் ஒரு ஞாயிறன்று ஒளிபரப்பினார்கள். இப் பொதுமுடக்கத்தின் போது கூட இப்படத்தை ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள்.
விழா கடைசி நாளில் வெண்திரை கட்டி படம் காட்டுவார்கள் அதில் 'திருவிளையாடல்', 'பெரிய இடத்துப் பெண்' மற்றும் 'எங்கள் வீடு பிள்ளை' படங்களைப் போடுவார்கள். இப்படி தான் 'திருவிளையாடல்' திரைப்படம் என் வாழ்க்கையில் அறிமுகமானது. பிறகு சென்னை தொலைக்காட்சியிலும் ஒரு ஞாயிறன்று ஒளிபரப்பினார்கள். இப் பொதுமுடக்கத்தின் போது கூட இப்படத்தை ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள்.
இயக்குநர் திரு ஏ பி நாகராஜன் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இணைந்து தமிழ் மக்களுக்கு வழங்கிய புராண படங்களில் 'திருவிளையாடல்' படத்துக்கு எப்போதுமே தனியிடம் உண்டு.
'திருவிளையாடல்' படத்தில் இடம்பெற்ற தொடர்களில் உங்களுக்கு எது பிடிக்குமென்று கேட்டால், சொல்ல முடியாது, குழம்பித் தான் போவீர்கள் காரணம் எல்லா பாகமும் அட்டகாசமாக நன்றாக இருக்கும். இருந்தாலும் எனக்கு 'ஹேமநாத பாகவதர்' எபிசொட் பிடிக்கும் காரணம் நம்மைச் சுற்றியும் பல 'ஹேமநாத பாகவதர்கள்' இருக்கத்தான் செய்கிறார்கள், அவர்கள் சாதாரண ஆட்களிடம் அடி வாங்குவதைப் பார்க்கமுடிகிறது.
ஆந்த்தாலஜி என்ற சொற்றொடர் இப்போது தமிழ் சினிமா அதிகம் உச்சரிக்கிறது. ஆனால் தமிழ் சினிமாவுக்கு அது ஒன்றும் புதிய சங்கதி இல்லை. திரு
இயக்குநர் ஏ பி நாகராஜன் இயக்கிய 'திருவிளையாடல்', 'சரஸ்வதி சபதம்',
'திருமால் பெருமை', 'திருவருட்செல்வர்' போன்ற புராண படங்கள் அனைத்தும்
ஆந்தாலஜி வகையே. என்ன இப்போது பல இயக்குநர்கள் சேர்ந்து ஒவ்வொரு பாகத்தை
இயக்குகிறார்கள், அப்போது ஒருவரே இயக்கினார், அவ்வளவு தான் வித்தியாசம்.
சமீபத்தில் சினிமா விமர்சகர் மற்றும் ஆர்வலர் திரு கீதப்ரியன் அவர்களின் முகநூல் பக்கத்தில் 'திருவிளையாடல்' பற்றி படித்ததில் பிடித்தது உங்களுடன்.....
'நான்
பெற்ற செல்வம் (1956)' திரைப்படத்தின் கதை, வசனம் ஏ.பி.நாகராஜன் அவர்கள்,
இயக்கம் K.சோமு, இது புராணப் படம் அல்ல, இப்படத்தில் 'திருவிளையாடல்' திரைப்படத்தின் தருமி காட்சிக்கு ஒரு ஒத்திகை பார்த்தார் கதாசிரியரும் இயக்குநரும்,
இப்படத்தில் வரும் மேடை நாடகக் காட்சியில் பாண்டிய சபைக் காட்சி வருகிறது,
இப்படத்தில் தான் முதலில் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம்
இருக்கிறதா? என் சிவனின் திருவிளையாடல் சித்து விளையாட்டைத் திரைப்படத்தில் படமாக்கினார் இயக்குநர்
ஏ.பி.நாகராஜன். இதில் நக்கீரராகவும் ,சிவனாகவும் நடிகர் திலகமே நடித்தார்,
நடிகர் நாகேஷ் நடித்த தருமி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் கே வி
சீனிவாசன். தமிழ்ப் படங்களில் என் டி ராமாராவ்
அவர்கள் தோன்றுகையில் இவர்தான் குரல் கொடுத்தார். பாண்டிய மன்னன்
கதாபாத்திரத்தில் நடித்தவர் கே.நடராஜன். கே.நடராஜ ஐயர் மற்றும் ”ஜெயக்கொடி’
நடராஜன் என்றும் இவரை அழைப்பதுண்டு. 'ஜெயக்கொடி' (1940) படத்தில்
கதாநாயகனாக நடித்தார். 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் "கர்னல் மாக்ஸ்வெல்"
ஆக நடித்திருப்பவரும் இவரே. மருத்துவர், நீதிபதி, வழக்கறிஞர், காவல் துறை
ஆய்வாளர், ஆசிரியர், தந்தை போன்ற கதாபாத்திரங்களில் தான் இவர் அதிகமாக
நடித்துள்ளார்.
எனக்கென்னவோ பரஞ்சோதி முனிவர் இயற்றிய மீதி 'திருவிளையாடல்' கதையையும் சேர்த்து இரண்டாம் பாகம் எடுத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. சரி 'நான் பெற்ற செல்வம்' படத்தில் இடம்பெற்ற தருமி எபிசோட்.
நன்றி: Youtube மற்றும் சினிமா விமர்சகர் மற்றும் ஆர்வலர் திரு கீதப்ரியன் அவர்கள்.
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
- காளிகபாலி
Yes Thiruvillaiyadal is a very nice movie reminds me my childhood when U use to listen to this at temples near our house during any festival season specially during the month of Dec - Jan.
ReplyDeleteA very good article bringing back my old memories superb.
I like old slang Tamil dialogues and sivaji acting
ReplyDelete