எள்ளு அடை
தட்டை,
ஓட்டவடை, ராகி அடை, முருங்கை கீரை அடை, என எத்தனையோ அடை வகைகளை நீங்கள்
சாப்பிட்டிருக்கலாம். மொறுமொறு எள் அடை சாப்பிட்டிருக்கிறீர்களா?
வில்லிவாக்கம் நாதமுனி திரையரங்க வளாகம் வெளியே உள்ள தேநீர்க் கடையில் விற்கப்படும் பெரிய அளவு வெங்காய சமோசா (இப்போது கோஸ் stuffing)
பிரபலம், ஒரு சமோசா ஐந்து ரூபாயிலிருந்து ஏழு ரூபாய்-ஆகி, பின்பு இப்போது
பத்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனாலும் எனக்கு அங்கு விற்கப்படும்
எள் அடை நிரம்பப் பிடிக்கும். ஒரு எள் அடை ரூபாய் 10/- நல்ல மொறு மொறுவென்று,
ஒரு வடிவமே இல்லாமல், வாயில் வைத்து ஒரு கடி கடித்தால் அளவான இனிப்பு,
காரம் நம் நாக்கை பதம் பார்க்கும். இன்னொரு எள் அடை வாங்கத் தோன்றும்.
இப்படியே.. மூன்று எள் அடை நமக்கே தெரியாமல் சாப்பிட்டிருப்போம், ஒரு டீயை
உள்ளே விட்டு, எள் அடையை வீட்டுக்கு பார்சல் வாங்கியவுடன், அந்த இடத்தை
விட்டு நகர வேண்டும்.
ஸ்ரீ வல்லப விநாயகர் கோவில்
![]() |
ஸ்ரீ வல்லப விநாயகர் கோவில் |
நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் ஸ்ரீ வல்லப விநாயகர் கோயிலுக்குச் சென்று, வரும் போது வில்லிவாக்கம் நாதமுனி திரையரங்க வளாக வெளியில் உள்ள தேநீர் கடையில் விற்கும் எள் அடையைச் சுவைத்துவிட்டு வாருங்கள்.
நன்றி: Youtube
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
Yes The tea shop opens @ 3:30 with hot Medhu and Masal vadai.
ReplyDeleteHot Paradise of Night shift employees