ஹே ராம் (2000)
'ஹே ராம்' - இருபது வருடங்களுக்கு முன்பு
பார்த்தது. 'ஹே ராம்' படம் பற்றி நிறையப் பேர் எழுதினாலும்.
முகப்புத்தகத்தில் திரு கீதப்பிரியன் கார்த்திகேயன் வாசுதேவன் அவர்கள் 'ஹே
ராம்' படம் பற்றி எழுதும் கட்டுரை ஒவ்வொன்றும் அருமை. படிக்க, படிக்க
மீண்டும் ஒரு முறை 'ஹே ராம்' படம் பார்க்கத் தூண்டுகிறது. மொத்தமாகப் புத்தகமாக
தொகுத்து வெளியிடலாம், அவ்வளவு detailing.
என்
தம்பி பார்த்துவிட்டுக் கதை வந்து சொன்னான், அவனுக்குப் படம் நிரம்பப்
பிடித்திருந்தது. கண்கள் விரிய, சில காட்சிகளை விவரித்தது இன்னும் என்
நினைவுகளில்.
இத்தனை
வருடங்கள் கழித்தும் 'ஹே ராம்' படம் சலசலப்பை ஏற்படுத்திக்கொண்டே
இருக்கிறது மற்றும் பேசப் பொருளாயிருக்கிறது. யுடியூப் காணொளி தளத்தில் 'ஹே
ராம்' படம் பற்றிய பல கோணங்களில் அலசிய விமர்சனங்கள் காணக் கிடைக்கிறது.
சினிமாவே சொல்-செயல்-மூச்சாக இருக்கும் கமலஹாசன் போன்றவர்களால் தான் 'ஹே ராம்' போன்ற உலகத் தரம் வாய்ந்த சிறந்த படைப்பைத் தர முடியும்.
சரி விசயத்துக்கு வருவோம், 'ஹே ராம்' படத்தில் ஆஷாஜி பாடிய ஒரு ஊடல் பாடல் உள்ளது, அது எல்லோருக்கும் பிடிக்கும். பெங்காலி பாடகர் திரு அஜய் சக்ரவர்த்தி "இசையில் தொடங்குதம்மா..." என்ற இன்னொரு பாடலும் உள்ளது உங்களுக்கு நினைவிருக்கலாம். இரவு வேளையில் இந்த பாடலை சிறந்த தலையணியுடன் (Headphone) கேட்டுப் பாருங்கள். ராஜாவின் சேர்ந்திசைக்குழு ஜாலத்தை (Grandeur) உணரலாம். தொலைக்காட்சி பாடல் போட்டியில் இந்த பாடலை பாடத்தை இளம் பாடகர்களே இல்லை எனலாம்.

கமல் மற்றும் ராஜா சார் நிகழ்த்திய மாயாஜாலங்களில் இதுவும் ஒன்று. இதோ அந்த பாடலை கேட்டு மகிழுங்கள்:
நன்றி: Youtube
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
Grama phone melody
ReplyDeleteDo not over-hype Komali Kamal Movies. He has stolen movies from Hollywood. 99% of his movies copied from Hollywood. He will never respect others. Ego person. Good for nothing actor. 99% of common people cannot understand his acting.
ReplyDelete