'சிட்டுக்குருவி' (1978) - சுருளிராஜன் நகைச்சுவை
தமிழ் சினிமாவின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்களில் மறைந்த நடிகர் சுருளிராஜன் அவர்களுக்கு ஓர் இடம் உண்டு. அவ்வளவு எளிதில் கடந்து விடமுடியாத நகைச்சுவை ஆளுமை. 'முரட்டுக்காளை' படம் ரஜினி படமாக இருந்தாலும் சுருளிராஜனைச் சுற்றியே கதை நடக்கும். அந்த கர கர வெண்கல குரல் திரையில் கேட்டாலே ரசிகர்களுக்கு உற்சாகம் பிறக்கும். கஞ்சர்களின் சங்கத்தலைவன் நமது சுருளிராஜன் தான். எப்படி, எப்படி எல்லாம் கஞ்சத்தனம் செய்யவேண்டும் என்று 'மாந்தோப்பு கிளியே' படத்தில் பாடமே நடத்துவார். இயக்குநர் திலகம் கே எஸ் கோபாலகிருஷணன் இயக்கிய 'ஆதிபராசக்தி' படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை பகுதி எனக்குப் பிடிக்கும்.
நகைச்சுவை நடிகர்களுக்குக் குரலும் உடல்மொழியும் தான் பலம், இவை இரண்டுமே வாய்க்கப்பெற்ற நடிகர் சுருளிராஜன் அவர்கள். ஒரு வேளை குடிப்பழக்கத்துக்கு அடிமையாகாமலிருந்திருந்தால், அவருடைய நகைச்சுவை ராஜாங்கம் இன்னும் தொடர்ந்திருக்கும். அவர் ஏற்காத வேடங்களே இல்லை எனலாம். இவர் போன்ற நடிகர் இனி பிறக்கப்போவதும் இல்லை, இவர் நிகழ்த்திய மாயாஜாலத்தை. இனி எவரும் நிகழ்த்தப்போவதும் இல்லை.
"யக்கோ....யக்கோ....யக்கோ".... என்று அவர் விளிக்கும் அந்த தோரணையை 'சிட்டுக்குருவி' படத்தில் சுருளிராஜன்-மனோரமா இணை நகைசுவை காட்சியில் கண்டு ரசியுங்கள்:
நன்றி: Youtube
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
No comments:
Post a Comment