பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ்
'பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ்' இசைக் குழு பற்றி நான் எதுவும் சொல்லப்போவதில்லை, இசையை விரும்பும் எல்லோர்க்கும் தெரியும், அவர்கள் யார் என்று.
முன்பு
ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்தபோது, நண்பர்கள் குழு எல்லோரும் சேர்ந்து
மகாபலிபுரம் கடற்கரை சென்றோம், அப்போது ஒரு நண்பர் அறிமுகப்படுத்திய பாடல்
தான் இது. பொதுவாக மேற்கத்தியப் பாடல்கள் எளிதில் புரியாது, ஆட்டம்,
பாட்டம், கொண்டாட்டம் என இருக்கும் என்று நினைத்திருந்தபோது,
இந்த பாடல் என்னை என்னமோ செய்தது. சோகம், இழப்பு, பேரிழப்பு எல்லா
மனிதருக்கும் ஒன்று தான். அதை அழகாக வெளிப்படுத்தும் பாடல். மேலும், இந்த
பாடல் இன்றும் அதிக அளவில் ரசிகர்களால் விரும்பி கேட்கப்படுகிறது. பேஸ்
கிட்டார் இசையுடன் ஆரம்பிக்கும் பாடல், மெல்ல கோரஸ் உடன் எழும்பி, சோகத்தை
நம்முள் கடத்தும். மேற்கத்திய இசை பற்றி எனக்கும் தெரியாது, ஆனால் இந்த பாடல் எனக்குப் பிடிக்கும். கீழே உள்ள பாடலை நீங்களும் கேட்டு ரசியுங்கள்:
நன்றி: Youtube
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
BSB on rock
ReplyDelete