Wonderful Shopping@Amazon

Thursday 21 November 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-36

தளபதி (1991)

1991-ஆம் ஆண்டுத் தீபாவளி அன்று வெளியானது. முதல் நாளே தளபதி படம் பார்க்கவேண்டி அம்பத்தூர் முருகன் திரையரங்க வாசலில் நானும் நண்பர்கள் குழாம் கூட்டத்தில் முண்டியடித்தும் பயனில்லை, டிக்கெட் கிடைக்காமல் வீடு திரும்பினோம். அதுவுமில்லாமல், தளபதி பாடல்கள் படம் வருவதற்கு முன்பே வெளியாகி பல லட்சம் கேசட்டுகள் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்தது. "ராக்கம்மா கையத்தட்டு" பாடல், கல்யாணம், காதுகுத்து, திருவிழாக்கள் எனப் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது.  மேலும், தினசரி மற்றும் வார இதழில் படத்தைப் பற்றி வந்த துணுக்குச் செய்திகள், எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது. இப்போது புரிந்திருக்கும் நாங்கள் ஏன் முதல் நாள், முதல் காட்சி பார்க்கச் சென்றோமென்று. பிறகு, இருதினங்கள் கழித்து அதே அம்பத்தூர் முருகன் திரையரங்கில் தளபதி படம் பார்த்தோம்.

படத்தின் இன்னொரு கதாநாயகன் நம்ம ராஜா சார். வாலி எழுதி, SPB,   ஸ்வர்ணலதா பாடிய "ராக்கம்மா கையத்தட்டு" பாடலில் தொடக்கத்தில் வரும் அந்த ஆர்ப்பரிக்கும் வயலின், பாடலின் டெம்போவை கூட்டும். "குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்" என்ற நாவுக்கரசர் வரிகளைப் பாடலில் புகுத்தி புதுமை செய்திருப்பார் வாலி. அதுமட்டுமல்ல படம் முழுதும் பின்னணி இசையில் ராஜாவின் ராஜ தர்பார் தான். ராஜாவின் மேதைமையைச் சொல்லும் இன்னொரு பாடல் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி". படமாக்கிய விதமும் அருமையாக இருக்கும். மணிரத்னம்-இளையராஜா இணைந்து கடைசியாக நிகழ்த்திய மாயாஜாலம்.

பிபிசியின், உலகின் தலைசிறந்த பத்துப் பாடல்கள் வரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்தது "ராக்கம்மா கையத்தட்டு" பாடல்.  பாடலின் காணொளி இதோ, பாடலை முழுதும் கேளுங்கள்:




நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          

4 comments:

  1. 1991 தீபாவளி அன்று ரீலீஸ் ஆன தளபதி படத்தை எந்தவித களேபரமும் செய்யாமல் நான் மிக நிதானமாய் 1992 மார்ச் மாதம் புரசைவாக்கம் அபிராமி காம்ப்ளெக்ஸில் வார நாளின் ஒரு காலை பொழுது பதினோரு மணி காட்சியில் பார்த்தது இன்றும் நன்கு நினைவில் உள்ளது.ஏற்கனவே இரண்டு மூன்று முறை படம் பார்த்த ஒரு பெண்மணி பின்னால் உட்கார்ந்து கொண்டு அடுத்தடுத்த காட்சிகளை விவரித்து கொண்டு இருந்தது மிகவும் எரிச்சலடைய செய்தது. பொதுவாக எந்த ஒரு படத்தின் கதை குறித்தும் யாரிடமும் கேட்டு தெரிந்து கொள்ளவோ அல்லது பத்திரிகை விமர்சனம் பார்த்து விட்டு படம் பார்ப்பதை விரும்பாத நான் சீட்டை விட்டு எழுந்து திரும்பி பார்த்து அந்த பொம்பலயிடம் சண்டை போட அவளின் மகனுக்கும் எனக்கும் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பு வரை போனதும் பக்கத்தில் இருந்தவர்கள் சமாதானம் செய்ததும் இப்போது நினைவுக்கு வருகிறது மற்றபடி மகாபாரத கதையை அடிப்படையாக கொண்டு கதை பின்னப்பட்டுள்ளது என்பது ஏற்கனவே பத்திரிகை துணுக்கு செய்திகள் மூலம் அறிந்திருந்த நான், அதை திரைக்கதையில் எப்படி மணிரத்னம் படம் பண்ணி உள்ளார் என்பதை பார்க்க விருப்பம் கொண்டு ஆனால் அலட்டி கொள்ளாமல் மிகவும் நிதானமாக பார்த்த படம். கல்லூரியில் மூன்றாவது ஆண்டு செமஸ்டர் எக்ஸாம் க்கு முன் பார்த்த படம் இப்போது மலரும் நினைவுகளாக 27 ஆண்டுகளுக்கு பின் காளி கபாலி blog பதிவின் மூலம் நெஞ்சில் நிழலாடுகிறது. நன்றி!

    ReplyDelete
  2. Guna to released on same day.. Those days are war if the stars

    ReplyDelete
  3. Thalapathi is really a very good film all songs are hit in this film great music my illayaraja both super stars displayed their great acting skills in this film Manirathnam direction superb.

    ReplyDelete
  4. Thalapathi is really a very good film all songs are hit in this film great music my illayaraja both super stars shown their great acting skills in this film Manirathnam direction superb.

    ReplyDelete