Wonderful Shopping@Amazon

Thursday 14 November 2019

கைதி (2019)


ஆக்ஷன் படமென்றால் எனக்குப் பிடிக்கும். தெலுங்கு ஆக்ஷன் படங்கள் விரும்பி பார்ப்பேன். (பாலகிருஷ்ணா படங்கள் தவிர்த்து). கைதி - நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழு நீள ஆக்ஷன் மற்றும் துரத்தல் பாடம். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது இரண்டாவது பட வாய்ப்பை திறமையாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

படம் வருவதற்கு முன்பே கணித்திருந்தேன், பட முன்னோட்ட காட்சி எதிர்பார்ப்பை அதிகரித்தது. இயக்குநர் லோகேஷ் இதிலும் ஏதாவது மாஜிக் செய்வார் என்று. காரணம் மாநகரம் படம் நன்றாக இருந்தது.

கதாநாயகி இல்லாத, பாட்டு இல்லாத படம் என்ற புதுமை எதுவும் இல்லை. ஏற்கனவே முன்னோடிகள் முயற்சி செய்தது தான். ஒரே இரவில் நடக்கும் கதை. இரண்டு மணி முப்பது நிமிடங்கள் உட்காரவைத்ததுதான் இயக்குநரின் மெனக்கெடல் மற்றும் சவால். கதாநாயகனுக்குப் பிளாஷ்பேக், அழகாக ஒரு குத்து பாடலை இடைச்செருகலாக வைத்திருக்கலாம், ஆனால் இயக்குநர் அதைச் செய்யவில்லை. ஆக்ஷன் படங்களில் வில்லன் கதாபாத்திரம் வலிமையாக இருக்கவேண்டும், இதிலும் கொடூரமான வில்லன்கள், அதற்கு ஈடுகொடுப்பது போலக் கதாநாயகன் கார்த்தி.

காவல்துறையால் கோடிக்கணக்கில் மதிப்புள்ள பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களைக் கைப்பற்ற ஒரு கும்பல் முயல்கிறது. போலீசாரை போட்டுத்தள்ள இன்னொரு கும்பல் துரத்துகிறது, சிறையிலிருந்து விடுதலையாகி மகளைக் காணப் புறப்பட்டுப் போகும் கதாநாயகன் இந்தக் கும்பலிடம் சிக்கி என்னாகிறான், அவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன என்பது மீதி கதை. கார்த்திப் பிரியாணி சாப்பிடும் காட்சியிலிருந்து அவருடைய ஆட்டம் தொடங்குகிறது. கார்த்தியுடன் படம் முழுதும் பயணிக்கும் நரேன் கதாபாத்திரம் அருமை. கார்த்திக் கதாபாத்திரம் நன்றாக வடிவைக்கப்பட்டிருக்கிறது. குறைவான வசனம். நிறைவான நடிப்பு.

படத்தில் வரும் அந்த முதல் ஆக்ஷன் பிளாக் "இடி" ரகம். அன்பரிவ் குழுவினரின் உழைப்பு ஒவ்வொரு ஆக்ஷன் ப்ளாகிலும் தெரிகிறது.

லாரியும் ஒரு கதாபாத்திரமாகப் படம் முழுதும் வருகிறது. சின்னச் சின்னத் துணை கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள். காவல்துறை அலுவலகத்தில் நடக்கும் அந்தக் களேபரத்தில் சிக்கும் கல்லூரி மாணவர்கள் கதாபாத்திரம் மற்றும் ஜார்ஜ் மரியான் வரும் காட்சிகள் செம.

சாம் சி எஸ் - பின்னணி இசை இன்னும் கூடக் கொஞ்சம் டெம்போ ஏற்றியிருக்கலாம். ராஜாவின் இசையைத் தொடாமல் யாரும் படமெடுக்கமுடியாது போல.

இறுதிகட்ட காட்சியில் அவ்வளவு பெரிய துப்பாக்கியை எடுத்துச் சுடுவதெல்லாம் சற்று too much ரகம் தான்.

மொத்தத்தில் ஆக்ஷன் பிரியர்களுக்கான விருந்து - "கைதி".


 நன்றி: Google Image



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          


1 comment:

  1. ஆம், பாடல் இல்லை,
    கதாநாயகி இல்லை, ஆபாசம் இல்லை, ஆனாலும் படம் விறுவிறுப்பு குறையாத காட்சிகள்
    நானும் வெகு நாட்களுக்கு பிறகு ரசித்த முழு நீள சண்டை படம் கைதி
    கதாநாயகன் மகள் " நீங்கள் எனக்கு யாரு " என்ற வசனம், அவளின் தவிப்பு என்னை கண் களங்க வைத்தது...அருமையான படைப்பு

    ReplyDelete