சின்னதாயி (1992)
விக்னேஷ் கதாநாயகனாக நடித்து, இயக்குநர் எஸ்.கணேசராஜ் இயக்கிய படம். கிராமத்துக் கதை என்றால் சொல்லவா வேண்டும், ராஜாவுக்கு Cake Walk போல, பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். அப்போது வானொலியில் இரவு ஒளிபரப்பான விவித-பாரதியின் வர்த்தக ஒளிபரப்பில் திரும்பத் திரும்ப இப்படத்தின் பாடல்கள் போடுவார்கள். இப்படத்தின் பாடல்களை இப்போதும் கேட்கலாம்.
வினுசக்கரவர்த்தி-தமிழ் திரையுலகின் கம்பீரமான ஆகச்சிறந்த ஆளுமை. வில்லனாக, அரசியல்வாதியாக, அப்பாவாக எனப் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவரின் குரல் ஏற்று கொண்ட கதாபாத்திரத்துக்கு மேலும் வலுசேர்க்கும். இந்தப் படத்தில் சாமியாடியாக நடித்திருப்பார். படம் ஆரம்பமாகும் முதல் காட்சி சாமியாடி வினுசக்கரவர்த்தி வேட்டைக்குப் போகும் அந்தக் காட்சியில் அசலாக, மிரட்டலாக நடித்திருப்பார். அந்த இடத்தில் தொடங்கும் ராஜாவின் ராஜாங்கம் இறுதி காட்சி வரை தொடரும்.
நன்றி: Youtube
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி

No comments:
Post a Comment