Wonderful Shopping@Amazon

Friday 15 November 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-32

பொம்மலாட்டம் (1968)

புரியாத வார்த்தைகளைப் போட்டு ஒரு பாடலை உருவாக்கினால், அது தான் இன்றைய தமிழ் சினிமாவின் Trend (கானா) பாடல்கள்,

அடுத்த பாடல் வரும் வரை கொஞ்ச நாள் அதையும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு, ரசிக்கிறார்கள். அந்த நேரத்துக்கு அது ஒரு சென்சேஷன் அவ்வளவு தான்.

ஆனால் தமிழ் சினிமாவில், முழுக்க முழுக்க மெட்ராஸ் பாஷை வார்த்தை எல்லாம் போட்டு ஒரு பாட்டு வந்து, அது சூப்பர் ஹிட்டும் ஆகி, இன்று வரை ரசிக்கப்படுகிறது. முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கி, வி குமார் இசையமைப்பில் "பொம்மலாட்டம்" திரைப்படத்தில், மேற்சொன்ன "வா வாத்யாரே" பாடல் வரும். கவிஞர் வாலி இப்பாடலை எழுதச் சிரமப்பட, மெட்ராஸ் பாஷை தெரிந்தவரிடம் கேட்டு எழுதினார்.

ஆச்சி மனோரமா தமிழ் திரைத்துறையின் மிகசிறந்த ஆளுமை, சிறந்த பாடகியும் கூட, இன்றைய தலைமுறைக்குத் தெரிய வாய்ப்பில்லை. எத்தனையோ அருமையான பாடல்களை (High Pitch Voice) பாடியிருக்கிறார். இந்தப் பாடலையும் அசால்டாகப் பாடி, சோ ராமசாமியுடன் ஆடி,  ஈடுகொடுத்து நடித்திருப்பார். சென்னை தூர்தர்ஷனில் "ஒளியும் ஒலியும்" நிகழ்ச்சியில் அடிக்கடி இந்தப் பாடலை போடுவார்கள், மறுநாள் இந்தப் பாடலை முணுமுணுப்போம்.

                                        

 



நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          

1 comment:

  1. இந்த படத்தில் ஜெய்சங்கர் ஜெ விடம் காதலை சொல்லும் மெட்ராஸ் பாஷை மிகவும் சிரிப்பை வரவழைக்கும் மேலும் காதல் கடிதம் கொடுக்கும் நிகழ்வு படத்தின் உச்ச பட்ச்ச காமெடி

    ReplyDelete