இதற்கு முன்பு வட சென்னையை மையமாக வைத்து புதுப்பேட்டை, பொல்லாதவன், மெட்ராஸ், கோலமாவு கோகிலா என பல படங்கள் வந்தாலும் வட சென்னை படம் முற்றிலும் வேறான கதை கொண்டது.
இடம்பெயர்வு உள் அரசியல், வஞ்சகம், துரோகம், மற்றும் காதல், இவை கலந்ததே வட சென்னை. இயக்குனர் வெற்றிமாறன் சிறந்த கதைசொல்லி, இதில் நான்-லீனியர் முறையில் கதை சொல்லி இருக்கிறார்
நாயகன் கேரம் விளையாட்டு போட்டியில் தேசிய பட்டம் பெற்று அமைதியான வாழ்க்கை வாழ ஆசைப்பட, காதல் விவகாரத்தில் ஒருத்தனை போட்டுத்தள்ள, அதன் மூலமாக குணாவிடம் சேர, குணா நாயகனை வைத்து இன்னொரு கொலை முயற்ச்சியை நிகழ்த்த. குணாவின் சுயரூபம் நாயகனுக்கு தெரிய வர, அப்போது நாயகன் எடுக்கும் முடிவு அடுத்த பாகத்தில்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் உண்டு என்பதற்கேற்ப இயக்குனர் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நன்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமே மெர்சல். ஐஸ்வர்யா - தனுஷ் காம்போ கலக்கல் மற்றும் குட் கெமிஸ்ட்ரி.
அமீரின் பகுதி படத்திற்கு அடித்தளம். ஆண்ட்ரியா படத்தின் முக்கிய திருப்பத்திற்கு உதவுகிறார். இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் பாகம் படங்கள் அவர் மேல் தான் பயணிக்கும் போல் தோன்றுகிறது.
தனுஷ் நல்ல நடிக்கிறார் என்று சொன்னால் நன்றாகவா இருக்கும், ஆனால் துணை கதாபாத்திரங்களும் நன்றாக நடித்திருப்பது தான் படத்தின் ஹை லைட்.
படத்தில் வரும் முதல் இருபது நிமிட சிறை காட்சிகள் டீடைலிங் அருமை.
சாதாரணமாக இந்த மாதிரி படங்களுக்கு இசையும் ஒரு துணை கதாபாத்திரமாக பயணிக்க வேண்டும். பின்னணி இசை முன்னிலை வகிக்க வேண்டும். ஆனால் பின்னணி இசை பெரிதாக ஈர்க்கவில்லை. மான்டேஜ் பாடல்கள். சந்தோஷ் நாராயணன் தன்னுடைய முன்னோடிகளிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.
இன்றும் சிலர் பொல்லாதவன் படத்தின் பின்னணி இசை ரிங்க்டோன் வைத்திருப்பதை கேட்க முடியும்.
இடம்பெயர்வு உள் அரசியலால் பூர்வகுடிகள் சந்திக்கும் பிரச்சனைகள் மனித நாகரிகம் தோன்றிய முதலே இருந்து வருகிறது. பெரு நிறுவனங்களின் இலாப பசிக்கு இரையாகும் பூர்வகுடிகள், அவர்களின் வாழ்வாதார சிக்கல்களையும், சுரண்டல்களையும் இயக்குனர் சுட்டிகட்ட தவறவில்லை.
படத்தில் ஆங்காங்கே வரும் கெட்டவார்த்தைகள் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. இது அப்படியே வர போகும் எல்லா படங்களிலும் வந்தால் என்னாவது?
பெரியவர்கள் மட்டுமே பார்க்கவேண்டிய படம்
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
Super Kali kabali. Good review.
ReplyDelete