பத்து
திரைகள் கொண்ட திரைப்பூங்காவை பி
வி ஆர் குழுமம் சென்னை
அண்ணா நகர் வி ஆர்
மாலில் திறந்துள்ளது. சரி அலுவலகம் முடிந்து
ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாமே
வி ஆர் மாலுக்கு போனேன்.
சமீபகாலமாக திரை அனுபவம் முற்றிலும் மாறியுள்ளது. குறிப்பிட்ட சில திரைப்படங்களை திரையங்குகளில் பார்ப்பதே சிறந்தது. அப்போதுதான் அதன் முழுமையான வீச்சை அனுபவிக்க முடியும்.
10 -20 வருடங்களுக்கு முன் திரையரங்கம் என்றாலே ஊருக்கு மத்தியிலோ அல்லது ஊருக்கு ஒதுக்குப்புறமாகவோ இருக்கும், நீளமான கட்டை இருக்கை - ரெண்டாவது வகுப்பு, முதல் வகுப்பு நல்ல இருக்கை, மின் விசிறி, திரை மெல்ல மேலே எழும்பும், படம் முடிந்ததும் கிழே இறங்கும், ஆறிப்போன சமோசா, சூடான முட்டை பஜ்ஜி, காப்பி, பாப்கார்ன், மோசமான கழிவறைகள், ப்ரொஜெக்ட்டர் ஓடும் சத்தம் தெளிவாக கேட்கும், ஒளி அமைப்பு பற்றி சொல்லவே வேண்டாம். அப்படியும் நாம் எண்ணற்ற திரைப்படங்களை ரசித்தோம். அது ஒரு இனிய அனுபவம்.
பெருநிறுவனங்களின் வருகைக்கு பிறகு ஒற்றை திரை கொண்ட திரையரங்கங்கள் எல்லாம் நான்கு - ஐந்து திரை கொண்ட திரை பூங்காவாக மாறி வருகிறது. இது ஒரு நல்ல மாற்றம். நிறைய படங்கள் ஒரே இடத்தில. நமக்கு பிடித்த படங்களை தேர்ந்தெடுத்து பார்க்கலாம். ஆனால் என்ன, நுழைவு கட்டணம், வண்டி பார்க்கிங் கட்டணம், திரையரங்கனில் உள்ளே விற்கப்படும் தின்பண்டங்கள் விலை என நமது பர்ஸை பதம் பார்க்கும்.
சரி பி வி ஆர் ஐகான் எப்படி?
கௌண்டரில் போதிய ஆட்கள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியதாயிற்று. 'FIRST MAN' ஆங்கில படத்துக்கு டிக்கெட் வாங்கினேன். திரை எண்- 6, படத்தில் ஒன்ற கொஞ்ச நேரம் பிடித்தது காரணம் உள் அலங்கார வேலைப்பாடுகள், ஒளி ஒலி அமைப்புகள், பெரிய திரை, என சூழல் அருமையாக இருந்தது. திரைக்கும் பட்ஜெட் டிக்கெட் வரிசைக்கும் விசாலமான இடைவெளி, படம் முடிந்து வெளியேற தனி வழி, நேராக பார்க்கிங் பகுதிக்கு செல்லுமாறு வடிவமைப்பட்டுள்ளது.
எங்கு காணினும் பிரம்மாண்டமான L C D திரை, அதில் வெளி வரப்போகும் திரைப்படங்களின் திரை முன்னோட்டம் ஓடிக்கொண்டிருந்தது. சொகுசு லாஞ்சு, 10 திரையும் DOLBY ATMOS ஒலி அமைப்பு கொண்டது 3D படங்களை ரசிப்பதற்கென்றே அதிநவீன PXL என்ற திரையும் உண்டு. மொத்தத்தில் உலக தர அனுபவம்.
ஒரு விஷயம் செய்திருக்கிறார்கள்......சினிமாவை நேசிக்கும் ஒரு நிறுவனத்தால் மட்டுமே இதைசெய்ய முடியும். அதாவது, உலக புகழ் பெற்ற இயக்குனர்கள் உதிர்த்த வார்த்தைகள், புகழ் பெற்ற உலக திரைப்படங்களின் பழய வின்டேஜ் சுவரொட்டிகள் சுவரில் மாட்டியிருந்தார்கள், காண்போரை வியக்க வைக்கிறது.
மூன்று சிற்றுண்டி அரங்குகள் உள்ளன வெவ்வேறு சுவைகளில் பாப்கார்ன் முதல் பல சிற்றுண்டிவகைகள் கிடைக்கிறது. விலை உங்களுக்கே தெரியும். போன் செய்தால் நம் இருக்கைக்கே வந்து தருகிறார்கள். சுத்தமான கழிவறைகள். பட்ஜெட் டிக்கெட்டுகள் தாராளமாக கிடைக்கிறது. ஒரு நல்ல திரைப்படத்தை ரசிக்க இது போதாதா?
சமீபத்தில்பி வி ஆர் ஐகான் திரையரங்கில் பார்த்த படங்கள்:
வட சென்னை, FIRST MAN (ஆங்கிலம்) மற்றும் அரவிந்த சமேத வீர ராகவா (தெலுங்கு).
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
No comments:
Post a Comment