என்னாயிற்று இந்த ஜனங்களுக்கு. வீட்டில் சமைப்பதே இல்லையா? அல்லது இளையதலைமுறைக்கு அசைவம் சுவையாக ருசியாக சமைக்க தெரியவில்லையா?
சமீபத்தில் ஆவணி மாதம் கடைசி ஞாயிறு அன்று ஒரு மாற்றத்துக்கு அசைவம் சமைக்காமல் சிக்கன் பிரியாணி (ரூபாய் 170/-) மட்டும் வாங்க பிரபல பிரியாணி கடைக்கு போனேன். கூட்டமோ கூட்டம் அப்படி ஒரு கூட்டம். மக்கள் சாரை சாரையாக வண்ண இருந்தனர். மக்கள் வரிசையில் நின்று வாங்கி சென்றார்கள்.வாங்கி கொண்டு வீட்டுக்கு வர ஒரு மணி நேரம் ஆனது
பெர்சிய உணவான பிரியாணி முக்கியமான இந்திய உணவாக மாறியது ஆச்சரியம் தான். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும், மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பலரகப்பட்ட அரிசியில் வெவ்வேறு சுவைகளில் சமைக்கப்படும் உணவு பிரியாணி.
20 வருடங்களுக்கு முன்பு பிரியாணி வெகு சில உணவகங்ளில் மட்டுமே கிடைக்கும். எப்போவாவது அப்பா முனியாண்டி விலாஸ் கடையிலிருந்து வாங்கி வருவார் அல்லது அப்பாவின் அலுவலகத்தில் யாராவது ஓய்வு பெற்றால் பிரியாணி பொட்டலம் வீட்டுக்கு வரும்.
இன்று போல் நினைத்தவுடன் பிரியாணி சாப்பிட முடியாது. நாங்கள் வாடகைக்கு குடியிருந்த காம்பௌண்டில் ஒரு இசுலாமிய குடும்பம் இருந்தார்கள். அவர்கள் வீட்டிலிருந்து பிரியாணி எங்கள் வீட்டுக்கு வரும், அது ஒரு தனி சுவை, இன்றும் என் நினைவில்.
அசைவ உணவை ஜோராக சமைக்கும் அம்மா ஏனோ பிரியாணி சமைத்தது இல்லை. நன்றாக வராது என்ற எண்ணம் கூட இருக்கலாம். நாங்களும் அதை கேட்டது இல்லை. ஒரு வேலை வீட்டில் சமைக்க முடியாது என்று எண்ணியிருந்தோம்.
அசைவ உணவை ஜோராக சமைக்கும் அம்மா ஏனோ பிரியாணி சமைத்தது இல்லை. நன்றாக வராது என்ற எண்ணம் கூட இருக்கலாம். நாங்களும் அதை கேட்டது இல்லை. ஒரு வேலை வீட்டில் சமைக்க முடியாது என்று எண்ணியிருந்தோம்.
சில வீட்டில் பிரியாணி என்ற பெயரில் பிரிஞ்சி சமைத்து வைப்பார்கள். என்ன செய்வது அவர்கள் முகம்கோண கூடாதே என்று சாப்பிட்டு வருவதுண்டு.
சில வருடங்களுக்கு முன்பு புரசைவாக்கம் மோட்சம் திரையரங்கு வாசலில் டாப்கோ சிக்கன் பிரியாணி கடை இருந்தது. விலை ஞாபகம் இல்லை ஆனால் சுவையோ அலாதி. திரையரங்கில் கூட்டம் இருக்குதோ இல்லையோ இந்த கடையில் கூட்டம் எப்போதும் அள்ளும். சாப்பிடாமல் திரும்பி போனவர்கள் அதிகம். சீக்கிரம் தீர்த்துவிடும். இப்பொது மோட்சம் திரையரங்கமும் இல்லை அந்த பிரியாணி கடையும் இல்லை.
இப்பொது ஏகப்பட்ட பிரியாணி செய்முறை இணையத்தில் கிடைக்கிறது.
ஒரு முறை ஹைதெராபாத் சென்ற பொது அந்த புகழ் பெற்ற பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிடமுடியவில்லை. அப்போது சஷ்டிக்கு மாலை போட்டிருந்ததே காரணம்.
ஒரு முறை ஹைதெராபாத் சென்ற பொது அந்த புகழ் பெற்ற பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிடமுடியவில்லை. அப்போது சஷ்டிக்கு மாலை போட்டிருந்ததே காரணம்.
இப்பொது குழந்தைகள் பிறந்தநாள் / காதணி / பிரிவு உபசார விழா போன்றவற்றுக்கு பிரியாணி விருந்து வழக்கமாகிவிட்டது. நேரடியாக சமைத்தும் அல்லது உணவகத்தில் ஆர்டர் செய்தும் பரிமாறப்படுகிறது. ஆனால் நன்றாக சமைக்க கூடியவரை தேட வேண்டியிருக்கிறது. தட்டு கணக்கு / சாப்பிடும் நபர்கள் / கிலோ கணக்கில் சமைத்து தரப்படுகிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை.
சமீபத்தில் பல்லாவரம் ஜங்க்ஷனை கடக்கும் பொது ஒரு பிரியாணி கடையில் கூட்டம் அள்ளுகிறது. அந்த பகுதியில் ஒரு பிரபலமான பிரியாணி கடை போலும்.
சென்னையில் நல்ல சுவையான பிரியாணியை தேடி பெரியமேடு, ராயப்பேட்டை என சென்றவர்கள் உண்டு. இப்பொது அதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது. நகரின் எல்லா பகுதியிலும் பிரபல பிரியாணி கடை கிளை பரப்பியுள்ளது.
அதுமட்டுமல்ல பார்பேக்கு , தந்தூரி வகைகள், ஷவர்மா என முழு அசைவ வகைகளும் இப்பொது கிடைக்கிறது
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
அதுமட்டுமல்ல பார்பேக்கு , தந்தூரி வகைகள், ஷவர்மா என முழு அசைவ வகைகளும் இப்பொது கிடைக்கிறது
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
ஆம் இன்று பிரியாணி தமிழ் நாட்டின் சாரி தென்னிந்திய மக்களின் தவிர்க்க இயலாத உணவாய் மாறிவிட்டது. ஏன் பிற்காலத்தில் பிரியாணி தென்னிந்திய மக்களின் பாரம்பரிய உணவாக வரலாற்று பதிவு பெற்றாலும் ஆச்சரிய பட ஒன்றுமில்லை என்ற அளவிலே இங்கெங்கினாத படி எங்கும் பரவி நிற்கும் பரம்பொருள் என திரும்பிய திக்கெங்கும் டபாராகளில் லொட்டு லொட்டுனு தட்டியபடி விற்கப்பட்டு அதையும் மக்கள் கோவில் பிரசாதம் கணக்கில் வரிசையில் நின்று வாங்கி போய் சாப்பிடுவதை நம்மால் நன்கு பார்க்க முடிகிறது. வழக்கம் போல் மக்களின் இந்த கட்டுபாடற்ற தள்ளுமுள்ளு ஆசையை பயன் படுத்தி கொன்ற
ReplyDeleteIn India only in tamilnadu too much of briyani fans and briyani shops
ReplyDeletePerfect flavour and taste biryaani comes especially from north indian way of preparation
ReplyDeleteபல தரப்பட்ட பிரியாணிகள் கிடைத்தாலும் தற்போது பிரியாணியின் தரம் தாழ்ந்து விட்டதாகவே எனக்கு படுகிறது. எப்போதாவது கிடைத்த பாய் விட்டு பிரியாணி, அந்தக்கால புகாரி பிரியாணி, பேரணாம்பட்டு சீரகசம்பா பிரியாணி(பிற்கால ஆம்பூர்) இடு இணையில்லை.. பல் வேறு வகையான பிரியாணிகள் சுவைத்து பார்த்ததில் வெகு சிலதே ரத்த நாளங்களைத்தாண்டி அணைத்து செல்களையும் சாந்தியடைய செய்துள்ளன..நானாவது வாங்கி பாவத்துக்காக சிறிது முழுங்குவேன் ஆனால் என் சதியோ நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று ஒரு வாயில் ஒதுக்கிவிடுவார்.
ReplyDeleteஅவர் பிறதிவாரம் செய்யும் நிகரற்ற பிரியாணி சுவை தயவில் என் பிறவிக்கடன் சாபல்யம் பெற்றுள்ளது..