சனி பெயர்ச்சிக்காக எங்கள் வீட்டு அருகில் உள்ள சிவன் கோயிலில் பரிகார யாகம் / பூஜைக்காக பணம் கட்டியிருந்தேன். பூஜையன்று அர்ச்சனை பைய் வாங்க போயிருந்தேன்.
கோயிலில் ஒரே கூட்டம். சனி பகவானுக்கு அர்ச்சனை செய்ய வீதி வரை மக்கள் காத்திருந்தார்கள். நவகிரஹ சந்நிதியிலும் கூட்டம். நான் அர்ச்சனை பையை மட்டும் வாங்கி வந்துவிட்டேன். நம் அருகில் உள்ள சிறிய சிவன் கோயிலிலேயே இவ்வளவு கூட்டமென்றால், பிரிசித்திபெற்ற கோயில்களான திருநள்ளாறு, குச்சனுர், திருக்கொள்ளிக்காடு மற்றும் திருநரையூர் இங்கெல்லாம் எவ்வளவு கூட்டம் இருக்கும் யோசித்து பாருங்கள். சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி இதெல்லாம் காலங்காலமாய் வந்து கொண்டிருந்தாலும். பிரபலம் அடைந்தது என்னவோ கடந்த 15 வருடங்களாக தான்.
ஜோதிடம் என்றல் என்ன ? அது எப்படி கணிக்கப்படுகிறது என்ற விஷயத்திற்குள் நாம் நுழையவேண்டாம். அதனுடைய இப்போதைய வளர்ச்சியை மட்டும் பார்ப்போம்.
ஜோதிடம் என்றல் என்ன ? அது எப்படி கணிக்கப்படுகிறது என்ற விஷயத்திற்குள் நாம் நுழையவேண்டாம். அதனுடைய இப்போதைய வளர்ச்சியை மட்டும் பார்ப்போம்.
அனைத்து மொழி பெரிய / சிறிய பத்திரிக்கைகள், வார இதழ்கள் நிறுவனங்கள் தங்கள் பத்திரிக்கை அதிக எண்ணிக்கையில் விற்க வேண்டி மற்றும் தொலைக்காட்சிகள் நிறுவனங்கள் தங்களுடைய TRP ரேட்டிங்கை உயர்த்த ஜோதிட இணைப்பை / நிகழ்ச்சியை வழங்க தவறுவதில்லை.
சில வார இதழ் நிறுவனங்கள் ஜோதிடத்திற்கென்றே தனி இதழ்களும் வெளியிடுகிறது. விலை ரூபாய் 20 முதல் 50 வரை. இணையத்திலும் ஏராளமான ஜோதிட தளங்கள் உண்டு. பெயர், பிறந்த தேதி மற்றும் நாள் - நேரம் - பிறந்த இடம் உள்ளீடு செய்தல் போதும் உங்கள் சில நொடிகளில் உங்கள் ஜாகதகம் தயார்.
இது தவிர ஜோதிடசிகாமணிகள், ஜோதிடதிலகங்கள், ஜோதிடரத்னாக்கள் ஜோதிட மாமேதைகள் வெளியிடும் தனி பதிப்புகள் ராசி / நட்சத்திர வாரியாக தனி தனி புத்தகங்கள் பாக்கெட் அளவு முதல் பெரிய புத்தகம் வரை ஒவ்வொன்றும் ரூபா 30 முதல் 50 வரை சந்தையில் கிடைக்கிறது. நம்மவர்கள் அதையும் வாங்கி படிக்கிறார்கள்.
எனக்கு தெரிந்த ஒரு சுற்றுலா ஏற்பாட்டாளர் மாதமிரண்டுமுறை கும்பகோணம் நவகிரக சுற்றுலா ஏற்பாடு செய்கிறார். நபருக்கு ரூபாய் 1000/-. சனிக்கிழமை இரவு புறப்பட்டு ஞாயிறு இரவு வீடு திரும்புதல். வெறும் முப்பது பேர். 98% பேர் ஆஜர். மாத மாதம் முன்பதிவு புத்தகம் நிரம்பி வழிகிறது. சென்னையில் இப்படி என்றால் பிற ஊர்களில்....! வருடம் 365 நாட்களும் இவர்களால் கும்பகோணம் நவகிரக ஷேத்திரங்கள் நிரம்பி வழிகிறது.
கும்பகோணம் செல்ல முடியாதவர்கள் சென்னையிலுள்ள நவகிரஹ க்ஷேத்ரங்கள்லான கோளப்பாக்கம் (சூரியன்), சோமங்கலம் (சந்திரன்), பூவிருந்தமல்லி (செவ்வாய்), கோவூர் (புதன்), போரூர் (குரு), மாங்காடு (சுக்ரன்), பொழிச்சலூர் (சனிஸ்வரர்), கெருகம்பாக்கம் (கேது), குன்றத்தூர் (ராகு), ஆட்டோ / கார் அமர்த்தி சென்று ஒரே நாளில் தரிசித்து வருகிறார்கள்.
தொழில் உலகமும், அரசியல் உலகமும் ஜோதிடத்தை நம்பியே இயங்குகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவருக்கும் ஒரு ஜோதிட குழுக்கள் உண்டு. அவர்களை கேட்டு தான் எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகிறது.
சென்னையில் தான் பிரபல ஜோதிடர்கள் உண்டென்று நீங்கள் நினைத்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு ஊரிலும் பிரபல ஜோதிடர்கள் இருக்கிறார்கள்.
திருச்சியிலுள்ள பிரபல ஜோதிடரை காண முன்பதிவு செய்து ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். ஜெயன்கொண்டத்தில் உள்ள பிரபல ஜோதிடரை காண வேண்டுமென்றால் முன்பதிவு செய்து ஒரு மாதம்வரை காத்திருக்கவேண்டும். சென்னை, சேலையூரில் உள்ள ஓலை சுவடி ஜோதிடரை காணவேண்டுமென்றால் போன் முன்பதிவு அவசியம். கட்டணம் ரூபாய் 350/-.
சென்னை குடுவாஞ்சேரியில் உள்ள ஒரு பிரபல ஜோதிடரை காண முன்பதிவு இல்லை. முதலில் வருபவர்க்கே முன்னுரிமை. சீக்கிரம் காண வேண்டுமென்றால் காலை 6.00 மணிக்கே சென்றால் தான் மதியம் வீடு திரும்ப முடியும்.
சென்னையில் உள்ள பிரபல ஜோதிடர்களை காண முன்பதிவு அவசியம். கட்டணம் ரூபாய் 1500/ - முதல் 3000/- வரை (ஒரு சந்திப்புக்கு மட்டும்).
ஜோதிடர்கள் பரிந்துரை செய்யும் பரிகார பூஜை / ஹோமங்கள் / யாகங்கள் நடத்த /செய்ய ஆகும் செலவு ரூபாய் 10000/- முதல் ஒரு லட்சம் வரை. இதை திறம்பட நடத்தி தர பல புரோகித குழுக்கள் தமிழக முழுவதும் உண்டு.
ஜோதிடர்கள் பரிகார பூஜை / ஹோமங்கள் / யாகங்கள் நடத்த /செய்ய பரிந்துரை செய்யும் கோவில்கள் சில:
திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்.
திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்யேசுவரர் கோயில்.
திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயில்.
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்.
சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, உதயப்பூர், குருகிராம், செகந்தராபாத், ஜெய்ப்பூர், இந்தூர், ரிஷிகேஷ், சண்டிகர், லூதியானா மற்றும் அகமதாபாத் போன்ற நகரகங்களில் ஜோதிட கலையை பயில பல பயிற்ச்சி நிறுவனங்கள் உள்ளன. பல பல்கலைக்கழகங்கள் தபால் மூலம் ஜோதிட டிப்ளமா வகுப்புகளை நடத்துகிறது.
ஜோதிட உபகரணங்கள் சந்தையை எடுத்துக்கொண்டால் ராசிகற்கள் பதித்த மோதிரங்கள், கைக்கடிகாரங்கள், கைப்பட்டை, ராசி /நட்சத்திர லட்சினை அச்சடித்த கைப்பைகள் மற்றும் பல பொருட்கள் சந்தையில் கிடைக்கிறது. விலை ரூபாய் 1000/- முதல் அதற்கு மேல்.
வரும் காலங்களில் ஜோதிட துறைக்கென்றே தனி அமைச்சகமும் அத்துறையை கவனிக்க ஒரு அமைச்சரை நியமித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. TRAI, SEBI, IRDA போன்று ஜோதிட ஒழுங்குமுறை ஆணையம் வந்தாலும் வரும்.
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
எங்க ஊர் பக்கமும் ஒருத்தர் இருக்கார். முதலில் வருபவருக்கே முன் உரிமை. அதனால, முதல்லியே வந்து இடம் போட்டு வைப்பாங்க. முதல் நாள் ராத்திரில இருந்து லைன் ஆரம்பிக்கும்.
ReplyDeleteMuuda nampikkaiyin uchchakaddam
ReplyDeleteAstrologer might be fake but Astrology is TRUE
ReplyDelete