![]() |
Haffkine in treating patients in Bengal. Source: Wikipedia (L) & History of Medicine Section of Royal Academy of Medicine of Ireland/Facebook (R) |
இந்த பயமுறுத்தும் Covid-19 காலங்களில், தொற்றுநோய்களை வெல்ல முடியும் என்பதை நிரூபித்த இந்த மறக்கப்பட்ட கதாநாயகர்களின் முயற்சிகளை நாம் நினைவில் கொள்வோம்.
கோவிட் -19 போன்ற தொற்றுநோய் அரிதாக இருந்தாலும், சரியாக 125 ஆண்டுகளுக்கு முன்பு, பம்பாயில் (இப்போது மும்பை) "புபோனிக் பிளேக்" நோய் பரவல் லட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கியது.
மருத்துவ சுகாதார பணியாளர்கள் மற்றும் பல நல்ல மனிதர்களின் இடைவிடாத முயற்சிகளினால், "புபோனிக் பிளேக்" நோய் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நாயகர்களின் மகத்தான பங்களிப்பு வரலாற்றின் பெயர்களில் காணாமல் போனாலும், நாட்டு மக்கள் உயிர்வாழ அவர்களின் பணி உதவியது.
இருப்பினும், இந்த "புபோனிக் பிளேக்" நோயை எதிர்த்துப் போராடிய மூன்று முக்கிய நபர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். அதில், முதலாவர் சாயாஜிராவ் கெய்க்வாட் III - அப்போதைய பரோடா மகாராஜா, இரண்டாமவர், உக்ரேனிய பாக்டீரியாலஜிஸ்ட் டாக்டர் வால்டெமர் ஹாஃப்கைன் மற்றும் மூன்றாமவர் சுதந்திரப் போராட்ட வீரர் அப்பாஸ் தியாப்ஜி ஆகியோர்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, 1896 -ஆம் ஆண்டு கோடையில், "புபோனிக் பிளேக்" நோய்த் தொற்று கடல் மார்க்கமாக வரும் அயல்நாட்டு வர்த்தக பயணிகளிடமிருந்து, பெரிய மக்கள் தொகை கொண்ட பம்பாய்க்குள் பரவியது.
COVID-19 சூழ்நிலையைப் போலவே, இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு மலேரியா காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகள், நிணநீர் கணுக்கள், அக்குள் மற்றும் இடுப்பு பகுதி வீக்கம், போன்ற பிற அறிகுறிகள் தோன்றத் தொடங்கும். இந்த நோயால், பாதிக்கப்பட்ட நபர் அடுத்த 48 மணி நேரத்திற்குள் இறக்க நேரிடும். இறப்பு விகிதம் அப்போது 60%வரை அதிகமாக இருந்தது.
அப்போதைய காலணி அரசாங்கம் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர் மான்சர் மற்றும் பாக்டீரியாலஜிஸ்ட் ஈஎன் ஹான்கின் ஆகியோர் கொண்ட பிளேக் ஆராய்ச்சி குழுவை அமைத்தது. இந்த குழு கல்கத்தாவிலிருந்து பம்பாய்க்கு, திரு ஹாஃப்கைன் அவர்களை ஆராய்ச்சிக்கு வரவழைத்து, பரேல் பகுதியில் ஒரு ஆய்வகத்தை நிறுவி, இயக்குநராக நியமித்தது.
ஏறக்குறைய ஒரு வருடம் தொடர்ந்த அவரது பணி தொடர்ந்து பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு. இறுதியாக, ஹாஃப்கைன் தான் கண்டுபிடித்த தடுப்பு தடுப்பூசியைத் தன்னார்வலர்களுக்கும் பிறகு பொதுமக்களுக்குச் செலுத்த முடிவு செய்தார். நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டும் இந்த தடுப்பூசி உடலில் செலுத்தும் செயல்முறையை உள்ளடக்கியது.
அப்போது பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசியைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், சோதனை செய்யத் தன்னார்வலர்களைக் கண்டுபிடிப்பது பெரும்பாடாக இருந்தது. ஹாஃப்கைன் முதலில் தன்னையும் பிறகு முன்வந்த தன்னார்வலர்களையும் சோதனைக்கு உட்படுத்தினார்.
ஒரு வருடத்தில், பம்பாயில் பரவிய பிளேக் நோய் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவியது, பரோடாவும் அதில் ஒன்றாகும்.
அந்த நேரத்தில், சமூகத்தில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க, பரோடா மாநிலத்தின் தலைமை நீதிபதியாகவும், மகாராஜா மற்றும் மகாத்மா காந்தியின் நண்பராகவும் இருந்த அப்பாஸ் தியாப்ஜி, அவரது குடும்ப உறுப்பினர்களுக்குத் தடுப்பூசி போட முன்வந்தார். முதலில் தியாப்ஜியின் மகள் ஷெரீபா, தடுப்பூசி போட்டுக்கொண்டார். 1935-இல் அகில இந்திய மகளிர் மாநாட்டின் தலைவரானார்.
இது அடுத்த பெரிய மாற்றத்தின் சிறிய ஆரம்பம், தன்னார்வலர்களின் உதவியைத் தொடர்ந்து, ஹாஃப்கைன், பிளேக் நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பரோடாவின் உட்புறப் பகுதிகளுக்குச் சென்றார்.
"1,031 பேர் உள்ள கிராமத்தில், பாதி உறுப்பினர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் மற்றும் ஒரு பாதிப் பேர் கட்டுப்பாட்டுக் குழுவாகச் செயல்பட்டனர். ஆறு வாரங்களுக்குப் பிறகு, ஹாஃப்கைன் மீண்டும் கிராமத்துக்குத் திரும்பி, தடுப்பூசி போட்ட ஒவ்வொரு குடும்பத்தினரையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தெளிவாக, தடுப்பூசி கணிசமாக நோய் எதிர்ப்புச்சக்தியை உண்டாக்குவதைக் கண்டறிந்தார்.
ஹாஃப்கைன் மற்றும் தியாப்ஜி மற்றும் சயாஜிராவ் III போன்றவர்கள் இல்லையென்றால், பிளேக் தொற்றுநோய் இன்னும் பல ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றிருக்கும். இறுதியில் வெற்றிகரமாகப் பிளேக்கின் இறப்பு விகிதத்தை 97.4% கட்டுப்படுத்தப்பட்டது. . கோவிட் -19 க்கான தடுப்பூசி பரவலாகப் போடப்பட்டுவரும் இன்றைய சூழ்நிலையில். ஒரு நூற்றாண்டுக்கு முன் பங்களித்தவர்களின் முயற்சிகளை நினைவு கூர்வது காலத்தின் கட்டாயம்.
நன்றி: https://www.thebetterindia.com/ (Edited by Gayatri Mishra)
தமிழில்: காளிகபாலிகுறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.