மன்னன்(1992)
![]() |
கிளைமாக்ஸ் உடை
|
தலைவர் முதல் காட்சியில் தோன்றும் அந்த நிமிடம் உடலில் மின்சார பாய்ந்தது போல் இருக்கும். குறைந்தபட்சம் தலைவர் படத்தை முதல் வாரத்தில் பார்த்துவிடுவதுண்டு. 'மாப்பிள்ளை' வந்த புதிதில் தலைவர் இறுதிக்காட்சி உடையுடன் தோன்றும் மிகப்பெரிய Blow-up படத்தை வீட்டில் ஒட்டி வைத்திருந்தேன். 'மாப்பிள்ளை' பட ஆரம்பத்தில் தலைவர் வித்தியாசமான ஒப்பனையில் தோன்றுவார். எனக்குத் தெரிந்து தலைவரின் அதிகபட்ச ஒப்பனை-மாற்றமே அது தான். அதில் பிரேக்-டான்ஸ். பாடல் ஒன்று வரும் தலைவரும்-அமலாவும் ஜோராக ஆடியிருப்பார்கள். அப்போது அது மிகப்பெரிய Sensation.
என்னடா இது 'மன்னன்' படத்தைப் பற்றிச் சொல்லாமல் 'மாப்பிள்ளை' படத்தைப் பற்றி சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதியவுடன். நானும் நண்பனும் சேர்ந்து சென்னை அண்ணாசாலை சாந்தி திரையரங்கில் படம் பார்த்தது இன்னும் பசுமையாக நினைவில்.
சாதாரண கதையை எப்படி சுவாரஸ்யமாக எப்படி எடுக்கவேண்டும் என்பதை இயக்குநர் பி வாசு (He is the Best Craftsman in Tamil Film Industry) அவர்களிடமிருந்து இயக்குநர் முருகதாஸ் போன்றவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். தொய்வே இல்லாமல் நகரும் கதை, கவுண்டமணி நகைச்சுவை, ராஜா சாரின் பாடல்கள் என அமர்க்களமாக எடுத்திருப்பார் இயக்குநர் பி வாசு. முக்கியமாக ராஜா சாரின் பின்னணி இசை படத்தின் டெம்போவை ஏற்றும். பாடகர் யேசுதாஸ் பாடிய அம்மா பாடலுக்கு இணையான இன்னொரு பாடல் இன்று வரை வர காணோம். அந்த பாடலை கேட்போம் வாருங்கள்:
நன்றி: Youtube
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி

