கோரஸ் பாடல்கள்
சென்னை தொலைக்காட்சியில் வியாழன் தோறும் மெட்ராஸ் கோரஸ் குழுவினர் (என்று நினைக்கிறேன்!?) மெல்லிசை பாடல்களைப் பாடுவார்கள், கேட்கவே அருமையாக
இருக்கும். அனைவரின் குரலும் சேர்ந்து தனி ரிதமாக ஒலிக்கும். அதை மிக அழகாக
கொண்டுசெல்லும் ஒருங்கிணைப்பாளர் பணி சவாலானது. மகாகவி பாரதியார் பாடலான
"பாருக்குள்ளே நல்ல நாடு ..." செம்ம ஹிட். அந்த டியூன் இப்போதும் எனக்கு
மனப்பாடம். மெட்ராஸ் கோரஸ் குழுவினர் இப்போதும் இருக்கிறார்களா என்று
தெரியவில்லை.
x-x-x
சில வருடங்களுக்கு முன் திரு விட்டலதாஸ் மகாராஜ் அவர்களின்
நாம-சங்கீர்த்தனம் நிகழ்ச்சி பிரபல பள்ளி மைதானத்தில் நடந்தது.
முதல்முறையாக அப்போது தான் நாம-சங்கீர்தன நிகழ்ச்சியை
பார்க்கிறேன். பார்வையாளர்கள் சிலர் உற்சாக நடனமாடினார். எளிய இசைக்கருவிகள்,
நாம-சங்கீர்த்தன விற்பன்னரின் குரலுடன் சேர்ந்த குழுவினர் ஒத்திசை என மறக்கவே
முடியாத அனுபவமாக இருந்தது.
x-x-x
"குட்
மார்னிங் மீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..." - ஒவ்வொரு ஆசிரியர் /ஆசிரியை வகுப்புக்கு
வரும் போது எழுந்து நின்று கோரஸாக சொன்னது நினைவுக்கு வருகிறது.
x-x-x
போராட்ட களத்தின் வெற்றி/ தோல்வி பாதிக்கப்பட்டவர்கள் கோரஸாக எழுப்பும் கோஷத்தில் தான் உள்ளது.
x-x-x
அய்யப்ப
ஸ்வாமிகள் கோரஸாக எழுப்பும் சரண கோஷம், முதல்முறையாகப் புதிதாக மாலை
அணிந்துகொண்டு வரும் கன்னிச் சாமிகளுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும்.
x-x-x
திருப்பதி
திருமலை சுவாமி தரிசன வரிசையில் நிற்கும் போதும் / ஸ்வாமி சன்னிதியை
நெருங்கும்போதும், பக்தர்கள், அதிலும் குறிப்பாகக் குழந்தைகள் கோரஸாக
"கோவிந்த", "கோவிந்தா" என எழுப்பும் கோஷம் சிலிர்ப்பை ஏற்படுத்தும்.
x-x-xசரி விஷயத்துக்கு வருவோம்........
----------------------------------------------------------------------
தந்தன தந்தன தந்தனதந்தன தந்தன தந்தன தா
தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தா
தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தா
அம்மன் கோயில் கிழக்காலே
அன்ன வயல் மேற்காலே
அம்மன் கோயில் கிழக்காலே
அன்ன வயல் மேற்காலே
நம்ம ஊரு நடுவாலே நிக்குதடி
நாட்டு சனம் நம்ம கண்டு சொக்குதடி
நாட்டு சனம் நம்ம கண்டு சொக்குதடி
----------------------------------------------------------------------
கூட்டாகப் பாடுதல் அல்லது கோரஸ் அல்லது குழுவினர் ஒத்திசை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
பாடகர்/ பாடகி தனியாகப் பாடும் பாடலை விடக் குழுவினருடன் பாடும் பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெறுகின்றன.
இசைஞானியின் வருகைக்குப் பிறகு தமிழ் சினிமாவில் கோரஸ் பாடல்கள் அதிகம் வர
ஆரம்பித்தன என்பது எனது கணிப்பு. கோரஸ்-ஐ அதிகம் இளையராஜா அவர்கள் தனது
இசையில் பயன்படுத்தினார் என்று சொல்வேன். பிறகு மற்ற இசையமைப்பாளர்களும்
பின்பற்ற
ஆரம்பித்தார்கள்.
கோரஸ்: பாடலுக்கு மேலும் மெருகூட்டுகிறது, கோரஸ்-உடன் பல இசை
கருவிகளின் சத்தம் ஒருங்கிணைந்து பாடலுக்குப் பிரமாண்ட தோற்றத்தைத் தருகிறது. (உதாரணம்: 'ஹே ராம்' - "இசையில் தொடங்குதம்மா...")
கோரஸ்-ஐ பாடல்களினூடே
பயணிக்கும் அல்லது இடையே வரும் இன்டெர்லூட் போலவும் பயன்படுத்தியிருக்கிறார் ராஜா. இதுவும்
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி தான். (உதாரணம்: 'அவதாரம்' - "தென்றல் வந்து தீண்டும்..")
எத்தனை பாடல்கள். ஒன்றா, இரண்டா, ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாமல் ஒவ்வொரு பாடல்களும் தனித்து நிற்கிறது. அப்படி ரசிகர்களின் மனதைக் கவர்ந்த சில பாடல்களைப் பார்ப்போம்.
'அலைகள் ஓய்வதில்லை' - "காதல் ஓவியம்"
'சிகப்பு ரோஜாக்கள்" - "நனைவோ சிறு பறவை"
'கரும்பு வில்' - "மீன்கொடி தேரில்...."
'சகலகலா வல்லவன்' - "அம்மன் கோயில் கிழக்காலே "
'மூடு பனி' - " என் இனிய பொன் நிலாவே "
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
'கரும்பு வில்' - "மீன்கொடி தேரில்...."
'சகலகலா வல்லவன்' - "அம்மன் கோயில் கிழக்காலே "
'மூடு பனி' - " என் இனிய பொன் நிலாவே "
'நாடோடி தென்றல்' - "யாரும் விளையாடும் தோட்டம்.."
'ராஜாதி ராஜா' - "மீனம்மா மீனம்மா.. "
'தாலாட்டு பாடவா' - "வெண்ணிலவுக்கு வானத்த.."
'அபூர்வ சகோதரர்கள்' - "ராஜ கைய்ய வெச்சா.." மற்றும் "அண்ணாத்தே
ஆடுறார்.."
இன்னும், இன்னும் பல பாடல்கள்..எழுத பக்கங்கள் போதாது.
- காளிகபாலி
நன்றி: https://www.youtube.com
No comments:
Post a Comment