'சீப் த்ரில்ஸ்'(2016)
ஒரு நாள் மோஜ் ஆப் -ஐ துழாவியபோது ஒரு ஆங்கில பாடல் என்னைக் கடந்து போனது. அந்த குரல் என்னை வசீகரித்தது. அந்த பாடலை யுடியூப் தளத்தில் தேடிக் கண்டுபிடித்துக் கேட்டேன், கேட்க, கேட்கக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அந்த ரிதம் பேட்டன் அல்லது ஹார்மோனி தான் திரும்பக் திரும்ப கேட்கத் தூண்டுகிறதோ என்னவோ ? நம்மூரில் தனியிசை பாடல்கள் சமீபகாலமாகப் பிரபலமாகி வருகிறது. இது ஒரு நல்ல முன்னேற்றம் தான். ஆனால் இன்னும் செல்லவேண்டிய தூரம் அதிகமிருக்கிறது, அதாவது, உலகளவில் பெரும் சாதனையை நிகழ்த்த.
சரி விஷயத்துக்கு வருவோம் ......
நான் கேட்ட அந்த பாடல் : "சீப் த்ரில்ஸ்" - This Is Acting (2016) ஆல்பத்தில் இடம்பெற்ற "Come on, come on, turn the radio on" என்ற பாடல் ஆறு வருடங்கள் கழித்தும் இன்னும் உலக இசை அட்டவணை வரிசையில் இடம்பெறும் பாடல்.
"சீப் த்ரில்ஸ்" - ஆஸ்திரேலிய பாடகி மற்றும் பாடலாசிரியர் சியாவின் ஏழாவது ஸ்டுடியோ ஆல்பமான 'திஸ் இஸ் ஆக்டிங் (2016) ஆல்பத்தில் இடம்பெற்ற ஒரு பாடலாகும்.
இது சியா ஃபர்லர் மற்றும் கிரெக் குர்ஸ்டின் ஆகியோரால் எழுதப்பட்டு, குர்ஸ்டினால் தயாரிக்கப்பட்டு முதலில் 17 டிசம்பர் 2015 அன்று வெளியிடப்பட்டது, மேலும் ஜமைக்கா பாடகர் சீன் பால் சொந்த வரிகள் இடம்பெறும் "சீப் த்ரில்ஸ்" இன் அதிகாரப்பூர்வ ரீமிக்ஸ் பதிப்பு 11 பிப்ரவரி 2016 அன்று ஆல்பத்தின் இரண்டாவது தனிப்பாடலாக டிஜிட்டல் பதிப்பு வெளியிடப்பட்டது. இந்த பதிப்பு சிறந்த பாப் இரட்டையர்/குழு நிகழ்ச்சிக்கான கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பாடல் ஒரு "பவுன்சி", "ரெக்கே-டிங்" சின்த்பாப் மற்றும் டான்ஸ்ஹால் எலக்ட்ரோபாப்-பாணி சின்த் லேயர்களை உள்ளடக்கிய பாடலாகும்.
ஐக்கிய அமெரிக்காவில், சியாவின் "சீப் த்ரில்ஸ்" பாடல் US பில்போர்டு ஹாட் 100 இல் முதலிடத்தைப் பிடித்தது. மேலும் 2016 இல் தேசிய மெயின்ஸ்ட்ரீம் டாப் 40 இல் முதலிடத்தைப் பிடித்தது. ஆஸ்திரியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, மெக்சிகோ, போர்ச்சுகல், ஸ்பெயின் உட்படப் பல நாடுகளில் முதலிடத்தை எட்டியது; அத்துடன் ஆஸ்திரேலியா, டென்மார்க், பின்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, போலந்து, சுவிட்சர்லாந்து மற்றும் யுனைடெட் கிங்டம் ஆகிய நாடுகளில் முதல் 10 இடங்களைப் பிடித்தது.
UK -வில் ஒற்றையர் தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 2018 ஆம் ஆண்டின் APRA இசை விருதுகளில், "சீப் த்ரில்ஸ்" பாடலாசிரியர்களான சியா மற்றும் குர்ஸ்டின் ஆகியோருக்காக வெளிநாடுகளில் அதிகம் விரும்பி கேட்கப்படும் பாடலுக்கான ஆஸ்திரேலிய படைப்பு விருதை வென்றது. இது 2019 ஆம் ஆண்டின் APRA இசை விருதுகளிலும் மீண்டும் 2020 ஆம் ஆண்டின் APRA இசை விருதுகளிலும் விருதை வென்றது.
"சீப் த்ரில்ஸ்" மூலம், மடோனா "மியூசிக்" மூலம் ஹாட் 100 இல் முதலிடம் பிடித்த 40 வயதுக்கு மேற்பட்ட முதல் பெண்மணி ஆனார் சியா. இப்பாடல் தொகுப்பு 2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 1.7 மில்லியன் பிரதிகள் விற்ற சாதனை படைத்தது மற்றும் அந்த ஆண்டு அதிகம் விற்பனையான பத்தாவது பாடலாக மாறியது.
ஜனவரி 2016 இல் ஜிம்மி ஃபாலன் நடித்த 'தி டுநைட் ஷோ' உட்பட, இசை வீடியோவில் உள்ள நடனத்திற்கு மேடி ஜீக்லர் அல்லது ஸ்டெபானி மின்கோன் தலைமையிலான நடனக் கலைஞர்களின் குழுவுடன், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகளில் "சீப் த்ரில்ஸ்" நிகழ்ச்சியை சியா நிகழ்த்தியுள்ளார். மார்ச்சில் அமெரிக்கன் ஐடல், ஏப்ரலில் கோச்செல்லா, மற்றும் நியூயார்க் நகரில் யூடியூபின் பிரமாண்ட நேரடி ஒளிபரப்பு நிகழ்வு மற்றும் மே மாதத்தில் 'தி வாய்ஸின்' சீசன் இறுதிப் போட்டி எனப் பல நிகழ்ச்சிகளில் பாடப்பட்டது/இசைக்கப்பட்டது /இசைத்து-ஆடப்பட்டது இந்த பாடல்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த பாடலை, கீழே உள்ள காணொளியை அழுத்தி கேட்கலாம் ........
- காளிகபாலி
நன்றி: https://www.youtube.com