'அன்னக்கிளி'(1976)
சென்னை தொலைக்காட்சியில் ஒரு ஞாயிறு அன்று இளையராஜா முதல்முதலாக இசையமைத்த "அன்னக்கிளி" திரைப்படம் ஒளிபரப்பானது நானும் முதல் முறையாக அப்போது தான் இந்த படத்தைப் பார்த்தேன். இசை, கதையும், கதைக்களமும் சற்று புதிதாக இருந்தது. அன்று முதல் இன்று வரை 'அன்னக்கிளி' படத்தின் பாடல்களைக் கேட்டுவருகிறேன்.
'அன்னக்கிளி' - படப்பாடல்களை இப்போது கேட்டாலும் அந்த பிரெஸ்னஸ் -ஐ உணரமுடிகிறது. அதுவரை ரசிகர்கள் கேட்காத (கிராமிய) இசை. அன்று ராஜாவின் இசையில் கட்டுண்ட பெருவாரியான ரசிகர்களுக்கு இன்று எல்லாமுமாக இருக்கிறார். இந்தி (பாடல்களின்) ஆதிக்கத்தை ராஜா தனது இசையால் முறியடித்தார்.
சரி... இனி என்னுடைய நண்பர் மற்றும் மிகத் தீவிர ராஜாவின் ரசிகர் திரு நவீன் மொசார்ட் சொன்ன வேறொரு கோணத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்:

ஆரம்பம் முதலே இளையராஜா இசையில் தீவிர உணர்வு ஆழங்கள், நிறைய Complex லாயரிங் இருந்தது. அதே சமயம், ஒரு String section ஐ பயன்படுத்தினார் என்றால் எல்லாமே ஒரு சேர ஒலிக்காது. ஒரு Bass இருக்கும் அதன் மேல் ஒரு மெலடி அதற்குக் கவுண்டர் மெல்டி என்று அத்தனையும் ஹார்மணியோடு இணையும். பின்பு வந்த 'பூங்காற்றே இனிபோதும்' என்கிற பாடலின் ஆழத்தை எல்லாம் தாங்கவே முடியாது அந்த இசையின் நுணுக்கத்தையும் நினைத்துப் பார்க்கவும் கையாளவும் முடியாது.
இப்படி இளையராஜாவை ரசித்தவர்கள் தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அவர்களுக்குத் தெரிந்து விடுகிறது. அதாவது தீவிரத்தன்மைக்கு பழக்கப்பட்டவர்கள். தீவிரத்தன்மைக்கு பழகியவர்கள், மேலோட்டமாக இருக்கமுடியாது, அந்த ஆழத்திற்குப் பழக்கப்பட்டவர்களுக்குச் சாதாரண உணர்வு ஆழங்களைத் தருகிற இசையை ரசிக்க முடியாது. அதே சமயம் மற்ற இசையை விரும்புபவர்கள் அந்த தீவிரத்தன்மை தனக்கு ஒவ்வாது என்றெண்ணி மேலோட்டமாக ஒருவித Take it easy ஆக வாழ்வைப் பார்ப்பவர்கள்..
புதிதாக வரும் இசையமைப்பாளர்கள் தாங்கள் இசை அமைக்கும் முதல் படத்தின் இசையைக் கேட்கப் புதிதாகத் தோன்றினாலும், காலப்போக்கில் அதுவும் ஜீவனில்லா 'டெக்நோ' இசையாகவே ஆகிவிடுகிறது.
திரைத்தொண்டர் காலஞ்சென்ற திரு பஞ்சு அருணாச்சலம் அவர்களின் வைர வரிகள் இதோ...
`அன்னக்கிளி-'காக பெய்யத் தொடங்கிய அந்த இசை மழை, ஆயிரம் படங்களைக் கடந்து இன்றும் அடைமழையாகத் தொடர்ந்து பெய்துகொண்டே இருக்கிறது.
'அன்னக்கிளி’யால் நான் நினைத்த இரண்டு விஷயங்கள் நடந்தன. `தமிழ்த் திரையுலகம் இந்தி சினிமாவுக்கு சமமாக வரவேண்டும்' என நினைத்தேன். `அன்னக்கிளி'க்குப் பிறகு இந்திப் படங்களின் ஆதிக்கம் தமிழகத்தில் குறைந்தது. இந்தி சினிமா மோகத்தில் இருந்த தமிழ் ரசிகர்கள், மீண்டும் தமிழ் சினிமாவை ரசிக்க ஆரம்பித்தனர். நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்து ஒப்புக்கொண்ட அனைத்துப் படப் பாடல்களையும் ஹிட்டாக்கிய பாலிவுட் இசை இரட்டையர்கள் ஷங்கர்-ஜெய்கிஷன் போல ஓர் இசையமைப்பாளர் வரவேண்டும் என்ற என் ஆசையும் நிறைவேறியது. ஆனால், அந்த ஆசை மட்டும்தான் என்றுடையது; மேலே ஏறிவந்த திறமை ராஜாவுடையது.

இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்த முதல் பாடல் உங்களுக்காக :
- காளிகபாலி
நன்றி: https://www.youtube.com and Mr Naveen Mozart
No comments:
Post a Comment