உதயகிரி சுவாமி நாயக் -சென்னையில் தடுப்பூசிகளை பிரபலப்படுத்திய மறக்கப்பட்ட கதாநாயகன்.
சென்னை புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் மற்றும் ஹாரிஸ் (இப்போது ஆதித்தனார் சாலை) சாலைகளின் சந்திப்பில், ஒரு சிறிய பச்சை தூண் உள்ளது. கட்டமைப்பின் நடுவில் ஒரு பதக்கம்
19-ஆம் நூற்றாண்டு தோற்றமுடைய ஒரு மனிதனைக் கொண்டுள்ளது. இது டாக்டர்
உதயகிரி சிங்கடிவாக்கம் சாமி நாயக் அல்லது டபிள்யூஎஸ் சுவாமி நாயக்கின்
நினைவுச்சின்னம், பிந்தியது அரசாங்க பதிவுகளில் தோன்றும் பெயர்.
1760-களில் கோமலீஸ்வரன்பேட்டை அப்போதைய நாகரீகமான மாவட்டமான கூவம் ஆற்றின்
குறுக்கே மெட்ராஸில் வாழ்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்த சுவாமி நாயக்
கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ சேவையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி,
நற்பெயரைச் சம்பாதித்தார்.
எட்வர்ட்
லார்ட் க்ளைவ் II 1803-இல் சுவாமி நாயக்கை தடுப்பூசி கண்காணிப்பாளராக 25
பகோடா சம்பளத்தில் நியமித்தார். உலகம் முழுவதும் பொதுமக்களுக்குத் தடுப்பூசி
செலுத்தும் புதிய நடைமுறை அப்போது உருவாகியிருந்தது. மேலும் உள்ளூர் மக்களுக்கு
தடுப்பூசி போடுவதில் சுவாமி நாயக் முனைப்பாக செயல்பட்டார். உள்ளூர் மக்களுக்கு அவருடைய முனைப்பு பெரும் சந்தேகத்தை உருவாக்கியது.
சென்னையில்
குடியிருந்த ஆர்மீனியர்களின் குழு ஜார்ஜ் டவுனில் அவரை வழிமறித்து
தாக்குதல் நடத்தியது, ஆனாலும் சுவாமி நாயக் அசரவில்லை பொது மக்களுக்கு
தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாகச் செயல்பட்டார். சிறிது
காலத்திற்குப் பின்னர், அவர் 1829 இல் தடுப்பூசித் துறையில் தலைமை மருத்துவ
பயிற்சியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
பின்னர், அவர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊத்துக்காடு கிராமத்தின் திவான் ஆனார்.
சென்னை நகரத்தில் பாயும் கூவம் நதிக் கரையோரத்தில் இடம் வாங்கி, எண் 25
பக்கோடா தெருவில் (பின்னர் ஹாரிஸ் சாலை) வசித்து வந்தார். அவரது பக்கத்து
வீட்டுக்காரர், எண் 26 இல், வசித்த பணக்கார துபாஷ், பச்சையப்பா முதலியார்,
மெட்ராஸ் பிரசிடென்சியில் பல கல்வி நிறுவனங்களை ஸ்தாபித்தவர் ஆவார்.
சுவாமி நாயக் 1841-இல் மறைந்தார். ஹாரிஸ் சாலையிலிருக்கும் சுவாமி நாயக்
தெரு அவரை இன்றும் நினைவுகூர்கிறது.
அவரது
பேரன் டபிள்யூஎஸ் வெங்கடராமஞ்சுலு நாயுடு மாநகராட்சி ஆணையராக இருந்தார்.
அவர் நீதிக்கட்சி மற்றும் காஸ்மோபாலிட்டன் கிளப்பில் முக்கிய பதவி வகித்தார்.
வெங்கடரமஞ்சுலு நாயுடுவின் பேரன், டபிள்யூஎஸ் கிருஷ்ணசாமி நாயுடு மெட்ராஸ்
உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக 1949 முதல் 1956 வரை பணியாற்றினார்.
கிருஷ்ணசாமி நாயுடு இந்த நகரத்தின் பாரம்பரியத்தைப் போற்றினர். அவர்
மெட்ராஸ் வரலாறு, நகரம் பற்றிய உண்மைகள் மற்றும் கடந்து சென்ற வாழ்க்கை
முறை குறித்த வானொலி உரைகளை வழங்கினார், இறுதியாக அவற்றைத் தொகுத்து "என்
நினைவுகள்" (1977), என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார்.
டபிள்யூஎஸ்
வெங்கடராமஞ்சுலு நாயுடு, லாங்ஸ் கார்டன் சாலையில் உள்ள குடும்ப நிலத்தின்
ஒரு பகுதியை மாநகராட்சிக்கு நன்கொடையாக வழங்கினார், இதன் மீது டாக்டர்
சுவாமி நாயக் பூங்கா ஒரு நீரூற்றுடன் உருவாக்கி, பல ஆண்டுகளாக குடிசை
பகுதிகளுக்கு ஒரே நீராதாரமாக இருந்தது. 1963 ஆம் ஆண்டில், நீதிபதி
டபிள்யூஎஸ் கிருஷ்ணசாமி நாயுடு சுவாமி நாயக்கிற்குத் தூண் வைத்தார், இதை
அப்போதைய இந்தியாவின் துணை ஜனாதிபதி விவி கிரி திறந்து வைத்தார்.
நாயுடு குடும்பத்தின் எட்டு தலைமுறைகளுக்கு மேல் சுவாமி நாயக் வாங்கிய நிலத்தில் தொடர்ந்து வாழ்வது குறிப்பிடத்தக்கது.
நன்றி: https://www.thehindu.com/
தமிழில்: காளிகபாலி
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.