ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர்
பாராலிம்பிக்ஸ் அல்லது ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் திரு முர்லிகாந்த் பெட்கரைப் பற்றி உங்களில் எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? இல்லை என நான் நினைக்கிறேன்.
1972-ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஹைடெல்பெர்க்கில் நடந்த கோடைக்கால பாராலிம்பிக்கில் 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் பெட்கர் வெற்றி பெற்றார், 37.33 வினாடிகளில் உலக சாதனை படைத்தார். அவர் ஈட்டி போன்ற பிற நிகழ்வுகளிலும் பங்கேற்று இறுதிச் சுற்றை எட்டினார்.
இந்திய இராணுவத்தின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பணிபுரிந்த திரு பெட்கர் 1965-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் கடுமையான புல்லட் காயங்களைத் தாங்கி நிரந்தர குறைபாடுகள் ஏற்படுவதற்கு முன்பு குத்துச்சண்டை வீரராக இருந்தார். கடந்த ஆண்டு, அவரது சாதனைகளுக்காக அவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
தமிழில் : காளிகபாலி
No comments:
Post a Comment