Wonderful Shopping@Amazon

Wednesday, 2 September 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-101

ராமு (1966)

தாலாட்டு பாடல்கள் பல இருந்தாலும், பி சுசீலா அம்மா பாடிய இந்த பாடலை கேளுங்கள் பாடல் வரிகளை பின்தொடரும் இசை. இப்போது இது போன்ற பாடலை கேப்பது அரிதிலும் அரிது.

கூட்டு குடும்பமாக வாழ்ந்த எங்கள் பாட்டி வீட்டில் பழைய படங்கள் பார்க்கவே ஒரு கூட்டம் இருக்கும், எந்நேரம் விசிஆர் -இல் எதாவது ஒரு பழைய படம் ஓடிக்கொண்டே இருக்கும். தாத்தா எப்போதும் முன்வரிசையில் உட்கார்ந்திருப்பார். சில நாட்கள் கழித்து தாத்தா அதே படத்தை போட மாமாவை வற்புறுத்துவார். மாமாவும் பேசாமல் படம் போட்டுவிட்டு போவார். அப்படி சிறுவர்களான நாங்கள் எல்லோரும் சேர்ந்து அதிகபட்சம் பார்த்த படம் 'ராமு', போலவே "
பச்சை மரம் ஒன்று .." மற்றும் "கண்ணன் வந்தான் ..." பாடல்களும் கேட்டு கேட்டு மனதில் பதிந்த ஒன்று. இது போதாதென்று மாநில மொழி திரைப்பட வரிசையில் இந்த படத்தை சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்கள். அதையும் ஒரு முறை பார்ப்பார்கள்.

ஹிந்தி படத்தின் கதையை தழுவி திரு ஜாவர் சீதாராமன் திரைக்கதையில், இயக்குனர் ஏசி திருலோகச்சந்தர் இயக்கத்தில், ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற படம் 'ராமு'. 'மக்கள் கலைஞர்' ஜெய்சங்கர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தை 'காதல் மன்னன்' ஜெமினி கணேசன் கேட்டு வாங்கி நடித்ததாக ஒரு செய்தி உண்டு. விச்சு டார்லிங் இசையமைத்த
ஐந்து பாடல்களும் முத்தனாவை. இப்போதும் கேட்க கூடியவை. இந்த படத்தில் ஒரு நாயை  நன்றாக பழக்கி 'மணி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பார்கள்.  சரி வாங்க அந்த பாடலை கேட்போம்:
 
 
 
 
 
நன்றி:Youtube 

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி 




2 comments:

  1. Superb memories
    Ramu...weekly twice played right.
    Climax will struck in that..
    Last show was in 2000 summer vaction.
    Lemme search & get that cassette.

    ReplyDelete
  2. I too like the film thanks for bringing old memories message from kumar venkat

    ReplyDelete