நஞ்சில்லா உணவு என்ற பதம், சொற்றொடர் சமீப காலமாகப் பிரபலமாகி வருகிறது. நஞ்சில்லா உணவுக் கலாச்சாரத்துக்கு வித்திட்ட அமரர் திரு நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு நன்றி.
சிக்கிம் மாநிலம் நூறு சதவீதம் இயற்கை விவசாயம் கொண்ட மாநிலமாக 19.01.2016 அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் இயற்கை விவசாயம் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. வருங்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் என்று நம்புவோம்.
முதலில் நம் வீட்டில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் கை வைக்கவேண்டும். அதில் உள்ள சிந்தடிக் மசாலா பொருட்களை நீக்க வேண்டும்.
நாங்கள் குடியிருக்கும் பகுதியில் ஒரே வரிசையில் நான்கு இயற்கை உணவுப் பொருட்கள் விற்கும் கடைகள் உள்ளது. ஒரே பொருள் ஒவ்வொரு இயற்கை அங்காடியிலும் ஒரு விலை. ஆனால் மளிகைக் கடையில் எப்போதும் போலக் கூட்டம் இருக்கத் தான் செய்கிறது.
காலங்காலமாகச் சென்னை பாரிஸ் கந்தசாமி கோயில் தெருவில் உள்ள கடைகளில் சிறுதானியங்கள், மூலிகைகள் மற்றும் நாட்டு மருந்து பொருட்கள் கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறது.
சிறுதானியங்கள், இன்ன பிற வஸ்துக்கள் சாப்பிட்டால் மட்டும் உடல் ஆரோக்கியம் வந்துவிடப்போவதில்லை. ஏற்கனவே நம் உடம்பு நஞ்சாக்கி வைத்திருக்கிறோம். உடலில் உள்ள நஞ்சை முதலில் நீக்க வேண்டும். எப்படிச் சாத்தியம் ? பழைய வழக்கத்தை நோக்கி நகர வேண்டும். இதோ எளிய வழிகள்:
சிக்கிம் மாநிலம் நூறு சதவீதம் இயற்கை விவசாயம் கொண்ட மாநிலமாக 19.01.2016 அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் இயற்கை விவசாயம் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. வருங்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் என்று நம்புவோம்.
நாங்கள் குடியிருக்கும் பகுதியில் ஒரே வரிசையில் நான்கு இயற்கை உணவுப் பொருட்கள் விற்கும் கடைகள் உள்ளது. ஒரே பொருள் ஒவ்வொரு இயற்கை அங்காடியிலும் ஒரு விலை. ஆனால் மளிகைக் கடையில் எப்போதும் போலக் கூட்டம் இருக்கத் தான் செய்கிறது.
காலங்காலமாகச் சென்னை பாரிஸ் கந்தசாமி கோயில் தெருவில் உள்ள கடைகளில் சிறுதானியங்கள், மூலிகைகள் மற்றும் நாட்டு மருந்து பொருட்கள் கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறது.
சிறுதானியங்கள், இன்ன பிற வஸ்துக்கள் சாப்பிட்டால் மட்டும் உடல் ஆரோக்கியம் வந்துவிடப்போவதில்லை. ஏற்கனவே நம் உடம்பு நஞ்சாக்கி வைத்திருக்கிறோம். உடலில் உள்ள நஞ்சை முதலில் நீக்க வேண்டும். எப்படிச் சாத்தியம் ? பழைய வழக்கத்தை நோக்கி நகர வேண்டும். இதோ எளிய வழிகள்:
- கேழ்வரகு களியிலிருந்து தொடங்க வேண்டும், வாரம் இரண்டு முறை கேழ்வரகு களி சேர்த்துக் கொள்ளவேண்டும் கூடத் தொட்டுக்கொள்ள (மட்டன்) குழம்பு அல்லது வேர்க்கடலை சட்னி.
- காய்கனிகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
- ஆறு மணி நேரம் உறக்கம் கட்டாயம்.
- வாரந்தோறும் சனிக்கிழமை நல்லெண்ணெய் குளியல்.
- ஆறு மாதத்திற்கொரு முறை பேதி மருந்து சாப்பிட வேண்டும்.
- காலை அல்லது மாலை நடைப் பயிற்சி அல்லது யோகா உடற்பயிற்சி.
- வெளிநாட்டுத் துரித உணவுகள் மற்றும் குளிர் பானங்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
- வாரம் ஒரு நாள் உண்ணா நோன்பு அல்லது திரவ உணவை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- வாழைப்பழத்தை உதாசினப்படுத்தாமல் நிறையச் சேர்த்துக்கொள்வது.
- அந்தந்த பருவகாலத்தில் கிடைக்கும் பழவகைகளை உட்கொள்வது.
- வாரம் ஒரு நாள் கைப்பேசி உபயோகப்படுத்தாமல் இருப்பது.
- மூன்று மாதத்திற்கொரு முறை குறும்பயணம் (100 கிலோமீட்டர் தொலைவு) மேற்கொள்வது.
எல்லாவற்றுக்கும் மேல் கட்டுப்பாடும், வைராக்கியமும் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் நலமாக இருக்கும்.
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
- காளிகபாலி
No comments:
Post a Comment