பரத் அனி நேனு (பரத் எனும் நான்) - எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்த படம். சமகால அரசியலை மிகத் தீவிரமாகவும் /அழகாகச் சொன்ன படம்.
மெத்தப் படித்தவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் மாநில முதல்வராகிறான், மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் போது, கெட்ட அரசியல்வாதி பிரகாஷ்ராஜ் ஏற்படுத்தும் இடையூறுகள், வீண் அவதூறுகளை எப்படி முறியடித்து மீண்டும் முதல்வராகிறான் என்பது மீதி கதை.
திரைப்படம் என்பது முழுக்க முழுக்க இயக்குநர் மீடியம். இயக்குநரின் குமுறல்களை நாயகன் வாயிலாக வெளிப்படுவதை அங்கங்கே சில இடங்களில் பளிச்.
போக்குவரத்து விதிகளை மதிக்காத மக்கள் மீது விதிக்கப்படும் அபராதத் தொகையாகட்டும், கல்வி, மருத்துவத்துறையில் உள்ள சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டவும் இயக்குநர் தவறவில்லை. அதற்கான தீர்வையும் முன்வைக்கிறார் இயக்குநர் கொரட்டால சிவா.

கட்சித்
தலைமை யாரை முதல்வராக நிறுத்தினாலும். தலைமைக்கு விசுவாசமாக
நடந்துகொள்ளவேண்டும். தலைமையை மீறி யார் மீதும் கை வைக்க முடியாது. அப்படி
கை வைத்தால் வீண் அவதூற்றுக்கு ஆளாக வேண்டிவரும். கெட்ட அரசியல்வாதி பிரகாஷ்ராஜ் ஊடகத்தை வைத்து நாயகன் பெயரை டேமேஜ் செய்ய, அதனால் பதவி இழக்கிறான். பிறகு நாயகன் விளக்கம் தரும் அந்த பிரஸ் மீட் காட்சி அருமை.
போக்குவரத்து விதிகளை மதிக்காத மக்கள் மீது விதிக்கப்படும் அபராதத் தொகையாகட்டும், கல்வி, மருத்துவத்துறையில் உள்ள சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டவும் இயக்குநர் தவறவில்லை. அதற்கான தீர்வையும் முன்வைக்கிறார் இயக்குநர் கொரட்டால சிவா.
தலைநகரத்தில்
போடும் நலத்திட்டங்கள் குக்கிராமங்கள் வரை போய்ச் சேர்வதில்லை. சாலை
அமைப்பதாக இருந்தாலும் சரி, குழாய் பதிப்பதாக இருந்தாலும் சரி
தலைநகரிலிருந்து அனுமதி வந்தால் தான் விடிவு என்ற நிலைமையை மாற்ற எல்லா
கிராம பஞ்சாயத்துக்கும் கோடி ரூபாய் என்ற திட்டத்தை முதல்வர் கொண்டுவர,
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உறுப்பினர்கள், அதற்கு முதல்வர்
முன்வைக்கும் காரணங்கள் அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கும்.
தொகுதியை
பற்றி முழுசா தெரிந்தவன் போட்டியிட முடியாத நிலைமை தான் இன்றும் நீடிக்கிறது. அதன் பின்னணியில் உள்ள அரசியலைப் புரிந்து, தனிப்பட்ட முறையில்
முதல்வர் தலையிட்டு ஒரு சாமானியனைச் சட்டமன்றத்துக்குத் தெரிந்தெடுக்க
உதவுவார்.
துர்கா
மஹாலில் நடக்கும் ஆக்ஷன் பிளாக் அருமை. தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை
படத்துக்கு பலம். சட்டமன்ற அரங்க வடிவமைப்பு அட்டகாசம், நிஜ
சட்டமன்றத்தையே கண்முன் கொண்டுவந்திருப்பர் கலை இயக்குநர் திரு சுரேஷ்
செல்வராஜன்.
தேவையற்ற ட்விஸ்டுகள், திணிக்கப்பட்ட நகைசுவைக்காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகள் போன்ற அலப்பறைகள் இல்லாமல், படம் நேர்கோட்டில் சீராகப் பயணிக்கிறது.
சமீபத்தில் வந்த
லூசிபர் மலையாள படமும் சமகால அரசியலைப் பேசுகிறது. ஆனால் தீர்வை முன்
வைக்கவில்லை. மலையாளத்தில் வந்த தெலுங்கு படம் போல கமர்ஷியலாக இருக்க, பரத்
அனி நேனு - தெலுங்கில் வந்த மலையாள படம் போல சீரியசாக இருக்கிறது.
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
Nice
ReplyDelete