சிறந்த யுடியூப் சேனல்கள் பகுதி ஒன்றின் தொடர்ச்சி...............!
டெல்லி ஃபுட் வாக்
திரு அனுபவ் சாப்ரா என்பவர் தொகுத்து வழங்கும் உணவு நடை சேனல். நீங்கள் உணவு பிரியராகவோ அல்லது பல்வேறு நகரங்களுக்குச் சுற்றுலா / வேலை விஷயமாகப் பயணம் செய்பவராகவோ இருந்தால், இவருடைய சேனலை ஒரு முறை பார்த்துவிட்டு செல்வது நலம் நல்லது. எங்குச் சென்றாலும் நாவுக்கு ருசியான நல்ல தரமான உணவு முக்கியமல்லவா. முக்கிய இந்திய நகரங்களில் உள்ள எல்லா இடங்களிலும் கிடைக்கும் / புழங்கும், மக்களுக்கு விருப்பமான, புகழ் பெற்ற சைவம் / அசைவம் உணவு வகைகள், சாலை உணவு வகைகள், பழங்குடி உணவு வகைகள், சிற்றுண்டி, குளிர்பானம் என மனுஷன் அத்தனையும் ருசித்திருக்கிறார். அநேகமாக இவர் போகாத நகரம் இல்லை எனலாம்.
மெட்ராஸ் ஸ்ட்ரீட் ஃபுட்
மேலே சொன்னது இந்திய நகரங்களென்றால், மெட்ராஸ் ஸ்ட்ரீட் ஃபுட் தமிழக நகரங்களில் உள்ள முக்கிய உணவகங்கங்கள் / சாலை உணவு வகைகளைப் பற்றிப் பேசும் சேனல். தோசைக்கல் பிரியாணி, Rs.150/- க்கு அளவில்லா பிரியாணி, 99 வகை விறகு அடுப்புத் தோசை, விறகு அடுப்பு பிஸ்சா, மெரினா கடற்கரையில் வருடம் முழுதும் கிடைக்கும் நோன்பு கஞ்சி, 35 வகையான நூடுல்ஸ், விதவிதமான பரோட்டா பரிமாறும் உணவகம், பெட்டி சோறு பல பல காணொளி பதிவுகளை இங்குக் காணலாம்.
எபிக் ரிகேப்
ரோண்டா பைரன் எழுதிய ரகசியம் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் சேனல். திரு ஜெய் என்பவர் ஈர்ப்பு விதி, நன்றி எழுதுதல், 55x5 முறை, ஆழ்மனதை நோக்கி ஓர் உள்ளொளி பயணம், சுயமுன்னேற்றத்துக்கு தேவையான விஷயங்களைப் படிப்படியாக விளக்கும் காணொளிகளை இந்தச் சேனலில் காணாலாம்.
குலதீப் எம் பை
டாக்டர் குலதீப் எம் பை என்பவர் நடத்தும் சேனல். இளம் திறமையலகர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை கர்நாடக சங்கீத பயிற்சி அளித்து, பல அறியக் கீர்த்தனைகளை பாட வைத்து உலகறிய செய்யும் அந்த மகத்தான பணியை டாக்டர் குலதீப் எம் பை செய்து வருகிறார். இன்னும் ஐந்து ஆண்டுகளில் குமாரி. சூர்யகாயத்ரி, மாஸ்டர். ராகுல் வெளாள், குமாரி பவ்ய கணபதி, ரகுராம் மணிகண்டன் மற்றும் இன்னும் பலர் இந்திய அளவில் புகழ் பெறப்போவது திண்ணம்.

தாலப்பக்கம் அன்னமாச்சார்யா கீர்த்தனையான "ஜோ அச்சுதானந்தா..........."
தாலாட்டு பாடலை குமாரி. சூர்யகாயத்ரி பாடுவதை கேளுங்கள், நீங்கள் அப்படியே உருகிவிடுவீர்கள். இதோ அந்தப் பாடல்
தாலாட்டு பாடலை குமாரி. சூர்யகாயத்ரி பாடுவதை கேளுங்கள், நீங்கள் அப்படியே உருகிவிடுவீர்கள். இதோ அந்தப் பாடல்
நவீன உழவன்
நீங்கள் விவசாயியா அல்லது (நவீன) விவசாயம் சார்ந்த தொழில்களை (Agricultural and Allied Businesses) பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா. இந்த சேனல் உங்களுக்கானது. ஆடு வளர்ப்பு,
நாட்டு மாடு வளர்ப்பு, நாட்டு கோழி வளர்ப்பு, முயல் வளர்ப்பு, அலங்கார மீன்
வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு, மீன் குட்டை அமைத்தல், காடை வளர்ப்பு, புறா வளர்ப்பு, சண்டை சேவல் வளர்ப்பு, நாட்டு நாய் வளர்ப்பு,
மாடி தோட்டம் , ஒருங்கிணைந்த பண்ணையம், மலை மேல் நெல் விவசாயம் என இன்னும் பல காணொளிகள் உண்டு இந்த சேனலில். கடினமான கேள்விகளை தொடுத்து, தெளிவான விளக்கங்கள் பெரும் உத்தி. டீடைலிங் வீடியோ என இதன் Highlight. சுமார் 1,63,000 சந்தாதாரர்களை கொண்ட சேனல் இது
ஏதோ நாங்களும் சேனல் நடத்தினோம் என்றில்லாமல். ஒவ்வொருவருக்கும் ஒரு concept. கொஞ்சம் மெனக்கெடல், நிறைய விஷயங்களை சின்ன சின்ன Capsule போல என ஒவ்வொரு காணொளியிலும் அவர்களின் உழைப்பு தெரிகிறது.
மூன்றாம் பகுதியில் இன்னும் சில சேனல்களை பற்றி பேசுவோம்.
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
- காளிகபாலி
Super boss
ReplyDelete