பதினைந்து வருடங்களுக்கு முன்பு நம்முடைய திறமையை
வெளிப்படுத்த எந்த மேடையும் கிடையாது
ஆனால் இப்போது யுடியூப் தளம்
அதற்கான சிறந்த பொது மேடையாக
உள்ளது. சமீபகாலமாக நான் சில சேனல்களை
பார்த்து வருகிறேன். அதில் குறிப்பிடத்தக்க சில
சேனல் எனக்கு மிகவும் பிடிக்கும்
அதை பற்றி இப்போது பேசுவோம்.
ஒரு
யுடியூப் சேனல் ஆரம்பிப்பதும், அதை
தொய்வில்லாமல், சுவாரஸ்யம் குறையாமல், திறம்பட நடத்துவதும் சாதாரண
விஷயம் இல்லை. நல்ல கமெண்டுகளையும், நாராசமான
கமெண்டுகளையும் ஏற்றுக்கொள்ள கூடிய பக்குவம் வேண்டும்.
சரி
விசயத்துக்கு வருவோம்........
எபிக் லைப்
(Epic Life):
ரோண்டா பைரன் எழுதிய ரகசியம் (The Secret) என்ற புத்தகத்தைக் கண்டிப்பாக
முழுசாகப் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். அப்படிப்
படிக்காதவர்கள், பாதியில் நிறுத்தியவர்கள்.
எபிக் லைப் சேனலில் தி
செகிரெட் புத்தகத்தின் அத்தனை பாடங்களையும் கேட்கலாம்
/ பார்க்கலாம். நல்ல குரல் வளம். confident - ஆன பேச்சு நம்மை
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்.
As
a Man Thinketh, Think and Grow Rich, Science of Getting Rich போன்ற புகழ் பெற்ற
சுயமுன்னேற்ற நூல்களிலுருந்து பல சுவாரஸ்யமான விஷயங்களை
எளிய தமிழில் சொல்லும் விதம்
அருமை. அதுமட்டுமல்ல சமகாலத் தொழில்முனைவோர் பற்றிய
அறிய தகவல்கள், அவர்கள் எப்படி ஜெயித்தார்கள்,
அவர்களுடைய தினசரி பழக்கவழக்கங்கள் என்னென்ன
என்பதைப் பற்றியும் பேசுகிறார் இந்த நண்பர்.
யார்
இவர்? எப்படி இருப்பார்? எனத்
தெரிந்துகொள்ள ஆவலாயிருந்தபோது, இப்பொது நேரிடையாக வீடியோவில்
தோன்றி பேசுகிறார் திரு.குமார் அவர்கள்.
அதிகம் சொன்னால் சுவாரஸ்யமாகப் போய்விடும்.....நீங்களே பார்த்து / கேட்டுத்
தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான
ஏதோ ஒன்று நிச்சயம் இந்தச்
சேனலில் கிடைக்கும்.
ஸ்பிரிட்யுவல் வேர்ல்ட் (Spiritual World):
நம்முடைய
தினசரி பூஜை முறைகளில் செய்யவேண்டிய
சின்ன, சின்ன மாற்றங்கள். குலதெய்வ
வழிபாட்டின் அவசியம், குலதெய்வ வழிபாட்டு முறைகள், குலதெய்வத்தைக் கண்டுபிடிக்க எளிய
வழிகள், குலதெய்வத்தை வீட்டினுள் வரழைக்கச் செய்யவேண்டிய பூஜைகள், விநாயகர் வழிபாட்டு முறைகள், அதன் மேன்மையும், மஹாலக்ஷ்மி
பூஜையும், முறைகளும். ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஏற்ற
தொன்மையான படையல் முறைகள், பூஜையில்
இடம்பெறும் மஞ்சள், குங்குமம், வாழையிலை,
வெற்றிலை, பாக்கு, பழம், பத்தி,
சூடம், அவல், பொரிகடலை, அத்தர்,
வாசனை பூக்கள் போன்றைவைகளின் அவசியம்.
கடல் குளித்தளின் நன்மை. வியாபாரம் செழிக்கச்
செய்யவேண்டிய பூஜைகள், மார்வாடிகள் பின்பற்றும் பூஜை முறைகள். ஒரு
ரூபாயை பயன்படுத்தி உங்கள் கஷ்டங்களைத் தீர்ப்பது
எப்படி? திருநங்கை கையால் வாங்கும் முனைமுறியாத
மஞ்சளின் மகிமை. நாஞ்சில் தமிழில்,
புரியும்படியாக எடுத்துரைக்கும் பாங்கு அருமை. வேறு
பல விஷயங்களும் உண்டு, அதையெல்லாம் விடுத்து,
உங்கள் பூஜை முறைகளைச் செம்மைப்படுத்த
இந்தச் சேனலை பயன்படுத்திக்கொள்ளலாம்.
சரண்யா பிரமோத்:
ஓடிய
பெண்மணி அழகான தமிழில் தொகுத்து
வழக்கும் ஆரோக்கியமான வட இந்திய, தென்
இந்திய சமையல் குறிப்புக்கள் / செய்முறைகள்
மற்றும் குழந்தைகள் உடல் எடை கூட,
குழந்தைகளுக்குத் தேவையான வீட்டில் கிடைக்கும்
பொருட்களை வைத்தே செய்யக்கூடிய உணவு
/ கஞ்சி / சிற்றுண்டி வகைகள், எண்ணெய் இல்லாமல்
பொறிக்கக்கூடிய சிற்றுண்டி வகைகள், தொப்பையைக் குறைக்க
/ உடல் இளைக்க எளிய கஷாய
வகைகள் செய்முறை விளக்கத்துடன் உள்ள விடியோக்களைப் பார்த்து
/ கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
குறிப்பாக
உடலில் உள்ள கெட்டக்கொழுப்பை கரைக்கக்கூடிய
கஷாயத்தைத் தினமும் காலையில் பருகிவருகிறேன். Good Result. நீங்களும் Try பண்ணலாம்.
குழந்தைகளுக்கு
பிடித்த/ தேவையான உணவு வகைகளைப்
பற்றி அதிக விடியோக்களை
இந்தப் பெண்மணி போட்டுள்ளார். பார்த்து
/ கேட்டுப் பயன்பெறலாம்.
சாணக்கியன்:
ஈரோட்டைச்
சேர்ந்த திருமதி ஜான்சி என்பவர்.
குறைந்த முதலீட்டில் புதிய தொழில் வாய்ப்புகள்
பற்றி விலாவரியாக (முதலீடு தொகை, எந்திரம்
வாங்கும் செலவு, எங்கே
கிடைக்கும், உற்பத்தி செய்யும் பொருட்களை அழகாகப் பேக் செய்வது
எப்படி, சந்தைப்படுத்துவது எப்படிப் போன்ற தகவல்கள்) விளக்கி
வீடியோ பதிவு போடுகிறார். அதுமட்டுமல்ல
ஆங்கிலம் சரளமாகப் பேச, சரக்கு சேவை
வரி என்றால் என்ன, சரக்கு
மற்றும் சேவை வரி எண்
பெறுவது எப்படி, சரக்கு மற்றும்
சேவை வரி தாக்கல் செய்வது
எப்படி? - எளிய தமிழில் உதாரண
விளக்கத்துடன் சொல்லிக்கொடுக்கிறார்.
இவர்
Ask Jhansi என்ற இன்னொரு சேனலில்
தென்னிந்திய சமையல், சுவையான ஊறுகாய்
வகைகள் பற்றிய செய்முறை மற்றும்
பல விடியோக்கள் போட்டுள்ளார் பார்த்து / கேட்டுப் பயன்பெறலாம்,.
ஆலயம் செல்வீர்:
இதுவும்
ஒரு சுவாரஸ்யமான ஆன்மிக சேனல்.
சித்தர்கள் பற்றிய தகவல்கள், அவர்கள்
அருளிய பாசுரங்கள், மருத்துவக் குறிப்புகள், ஒவ்வொரு நட்சத்திரகாரர்களும் வழிபட
வேண்டிய சித்தர்கள். (என்னுடைய நட்சத்திரக்குரிய சித்தரை சமீபத்தில் வழிபட்டேன்),
பூஜை முறைகள், குளிகை கால பலன்கள்,
சோடகக்கலை, நட்சத்திர நாள், பௌர்ணமி, அமாவாசை வழிபாட்டின் நன்மைகள் போன்ற ஏராளமான விடியோக்கள்
உள்ளன. உங்களுக்கு தேவையானதை கேட்டு / பார்த்து தெரிந்துகொண்டு பயன்பெறலாம்.
இரண்டாம் பகுதியில் இன்னும் சில சேனல்களை பற்றி பேசுவோம்.
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
- காளிகபாலி
Really interesting and useful
ReplyDelete